
Saturday, 30 November 2019
Monday, 25 November 2019
Sunday, 24 November 2019
இயக்குனர் லெனின்பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை
ஏய் விடுங்கடா நான் தூக்கறன்டா ......
சும்மான்னா வேணாம் யா.......
இது ஒங்கப்பன்ட காசுடா.....
சீனி போதுமா ?......
------------
மேற்கண்ட நான்கு சொற்கட்டுக்களில் மனித ஆன்மாவின்
உன்னத தருணங்களை கடைக்கால்களாக்கி தனது படைப்பை மேரு போல அதன் மீது ஏற்றி நிறுத்தியிருக்கின்றார்
லெனின் பாரதி.
ஒப்பனைகள் எதுவும் தேவைப்படாத அளவிற்கு படம் முழுக்க
தனது தன்னழகில் நடக்கின்றது மனித வாழ்க்கை. ஒத்திசைந்த அலைவரிசையில் ஆன்மாக்களின் அனிச்சை
நடனம்.
Thursday, 21 November 2019
இயக்குனர் அய்யப்பன் மறைவு
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நண்பர் இயக்குனர்
அமீர் அப்பாஸ் மூலம் அறிமுகம்.ஆனார்.
அதன்பின் ஃபாரூக் , மனுஷ்யபுத்திரன் உடனான ஒரு சந்திப்பிலும்
அய்யப்பன்தான் மைய மனிதனாக இருந்தார். நகைச்சுவையும் ஆழ்ந்த சிந்தனையும் முற்போக்கும்
கலைஞனுக்கே உரித்தான கொஞ்சம் கிறுக்கும் விரவிய ஒரு படைப்பாளி.
அவர் கையால் ஒரு தடவை கருவாட்டு பொறியலும் இன்னொரு
தடவை முட்டை குழம்புமாக சாப்பிட்டது அதன் அனைத்து குண மணங்களுடனும் நினைவில் நிற்கின்றது.
Wednesday, 20 November 2019
Tuesday, 19 November 2019
இறைவனுக்குரிய ஈவு
நடுத்தர வயதிலிருந்து முதுமையை நோக்கி நழுவிக் கொண்டிருக்கும்
மனிதர்.
கஞ்சிக்கு கைத்தொழில் புரிந்து வருபவர். சொற்ப வருமானம்.
அவரது இரண்டு ஆண் பிள்ளைகளும் சராசரியாகத்தான் சம்பாதிக்கின்றார்கள். சேமிப்பெல்லாம்
ஒன்றுமில்லை. அன்றன்றைக்குள்ள அப்பம் அன்றன்றைக்கு. கூடுதலாக ஏதும் காசு கையில் நின்றால்
இறை ஊழியத்தில் கிளம்பி விடுவார்.
ஒரு வழிபாட்டுத்தலத்தில் விருப்பத்தின் பேரில் பகுதி
நேர பணி. இதில் சில ஆயிரங்கள் மாதம் கிடைக்கும். அவரது தொழிலில் கிடைக்கும் வருமானத்தை
விட இந்த ஊதியத்தில் கூடுதலாக கிட்டுகின்றது.
பூச்சை ஹிஷாம் – நினைவேந்தல்
எனது சிறு பருவத்து நண்பனும் உறவினரும் காயல்பட்டினம்
ஜமாஅத்துத் தப்லீக்கின் அமீருமாகிய ஹிஷாம் நேற்றிரவு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டான்.
சிறு வயதில் வெண் குதிரையைப்போல இருப்பான். பேரழகன்.
நீல நிற காற்சட்டையிலிருந்து புறப்படும் பட்டைகள்
அவனின் முதுகின் குறுக்காக தோள்பட்டை வரை ஓடும். இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?
என எனக்கு கேட்கத் தோன்றியதில்லை
பூச்சை ஹிஷாம் என எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில்
அழைப்போம். பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகத்தான் படித்தோம்..பத்தாம் வகுப்பு தேர்வுக்கு
இரவு அவன் வீட்டில் தங்கி பல நாட்கள் படித்திருக்கின்றேன்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அவன் சுணக்கமடைந்தான்.
அது அவனை மனதளவில் பெரிதாக உறுத்தியது. நான் மேனிலைக்கல்வியை வேறு பள்ளிக்கூடத்தில்
தொடர்ந்ததால் மெதுவாக எங்களுக்குள் தொடர்பு குறையத்தொடங்கியது.
உணர்வின் ஒலி
2003 ஆம் ஆண்டு நான் ஹஜ்ஜுக்கு சென்ற சமயம்.
ஹரம் ஷரீஃபின்
மாடியில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் இஷாத்தொழுகைக்கான அதான் ஒலிக்கத்
தொடங்கியது. ஹரத்தில் அமைக்கப்பட்டிருந்த சீரான ஒலி வலை அமைப்பானது இனிய அதான் ஒலியை விண்ணுக்கும் மண்ணுக்கும் மென்மையாக பரவச் செய்தது.
என் முன்னால்
அமர்ந்திருந்த ஈரான் நாட்டு ஹாஜி அந்த முஅத்தினின் இராக இனிமையில்
அப்படியே தலையையும் உடலையும் மெல்ல அசைத்து அசைத்து கரைந்து கொண்டிருந்தார்.
எங்களுக்கு முன்னே
வீறுடன் எழுந்து நின்ற ஹரத்தினுடைய மினாராவின் பச்சை விளக்கின் பின்னணியில் இருண்ட
வானம் படர்ந்திருந்தது . அதன் ஒரு மூலையில் பிறை ஒளிர்ந்து கொண்டிருந்தது.
முஅத்தினின் அதான்
நாதத்தின் ஒரு துளியில் மிதந்து அப்படியே மினாரா வழியே இருண்ட வானத்தினூடாக
பிறையைக் கடந்து என் மனம் நீந்திக் கொண்டிருந்தது. உடல் மாடியில் இருக்க உள்ளம் அப்படியே வழுக்கி பல நூறாண்டுகள்
கடந்த பொற்காலத்திற்குள் பயணித்தது. திரும்பி வந்த போது சிலிர்ப்பாகவும்
ஏக்கமாகவும் இருந்தது.
தீரா இருள் சாறு
சில கடைகளில் ஒன்றரை அல்லது இரண்டு குவளை பழச்சாற்றை
தருவார்கள். நமக்கு பிடித்தமான பழச்சாறாக இருந்தாவிட்டால் மன நிறைவுடன் மெல்ல மெல்ல
சப்பி சப்பி உறிஞ்சுதல்தான். தீர்ந்து விடக்கூடாதே என்ற பதட்டம்.
Monday, 18 November 2019
எழுதுவதை நிறுத்தி விடு
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை சந்தித்த நண்பன் என்னிடம்
உரிமையான கிண்டலில் , என்னப்பா எழுத்தாளர் சும்மா அஸாமுக்கு போய் வந்ததைலாம் வளச்சி
வளச்சி எழுதியிருக்கிறே என்றான்.
அவன் குறிப்பிடுவது போன வருடம் நானும் நண்பர்களும்
சென்று வந்த வட கிழக்கிந்தியப்பயணம் பற்றிய கட்டுரையைத்தான்.
நானும் சில அய்ரோப்பிய நாடுகளுக்கெல்லாம் போய் வந்திருக்கின்றேன்.
அப்ப அங்க நான் பாத்தத எழுதணும்னா நெறய எழுதனுமே என்றான்.
மடோல் துவா -- சிங்களத் திரைப்படப்பாடல்
எங்கு நமது உலகம் ?
எங்கு நமது நிலம் ?
காவலற்ற
தளைகளற்ற
எம் சொந்தக் கூடு
கொடிய பேய்களும்
சூனியக்காரர்களும்
வாழும் காடு
காற்றோடு பறந்து போ
தானிய வணிகர் ஒருவர் தன்னை உறுத்தி சிதைக்கும் பிரச்னைகளுக்கான
தீர்வை வேண்டி ஞானியிடம் சென்றார். மனதிலும் உடலிலும் பதட்டம் வழிய வந்த வணிகரை அமர
வைத்து அவரது சிக்கல்களை சொல்லக் கேட்டார் ஞானி.
“ கொஞ்ச காலமாகவே எனக்கு எல்லா வகையிலும் சிக்கல்களுக்கு
மேல் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. தானியக்கிடங்கு தீப்பற்றிக் கொண்டதில்
கோடிக்கணக்கில் இழப்பு. தீர்த்த பயணம் சென்ற இடத்தில் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி
இறந்து போனாள் என் மனைவி.
தொழிலுக்கு உதவியாக இருக்குமே எனக்கருதி எனது மூத்த
மகனை வெளிநாட்டிலுள்ள புகழ்பெற்ற வணிக பயிலகத்தில் ஏராளமாக செலவு செய்து படிக்க வைத்தேன்.
அவனும் அதில் சிறப்பாக தேர்ச்சி பெற்று நாடு திரும்பி வந்து எனது தொழிலுக்கு பெரும்
உதவியாக இருந்து வந்தான்.
அவன் எங்களுக்கு ஒரே பிள்ளை. அம்மா ஆற்றில் மூழ்கி
இறந்த துயரத்தை தாங்கவியலாமல் அவனது மன நிலை பிறழ்ந்து விட்டது.
காலப்படகு
ஒரு குழந்தையின்
கனவு, நினைவுகளுக்குள் நாம் போவது எப்படி
?
அப்படி ஏதாவது
அனுபவம் உங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கின்றது என்பதை உங்களிடம்
சொல்லத்தான் வேண்டும்.
அண்மையில்
சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்று நூல்களை வாங்கி விட்டு
வெளியேறும்போது வாயிலில் ஒருவர் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை விற்றுக்
கொண்டிருந்தார்.
அவர்
முன் நீர் நிரம்பிய வட்டில் ஒன்று
இருந்தது. தகரத்தினால் செய்த சிறு படகினுள் சிறு கொழுந்தாக தீ எரிய அப்படகு “ டர்ர்ர்....
“ என ஒலி எழுப்பிக் கொண்டே அந்த
வட்டிலை சுற்றி சுற்றி வந்தது .
Sunday, 17 November 2019
"சாயாவனம் "
எனக்கு ஒரு வயது கூட நிரம்பாதபோது எழுதி வெளியிடப்பட்ட புதினம்.
புதினம் எழுதப்பட்ட காலச்சூழ் நிலையை விட இன்றைக்கு மிகவும் பொருந்திப்போகி்ன்றது.
" கதையைலிருந்து கதையை வெளியேற்றுவது " என்ற அறைகூவலுடன் எழுதப் புறப்பட்ட சா.கந்தசாமியின் சாயாவனமானது பழைய கதை இன்றைய பருண்மை என தன்னை உருமாற்றிக்கொண்டு கதையல்லாத கதையாக இளமையுடன் நீடிக்கின்றது.
எழுத்தாளர் கதையை இல்லாமலடித்ததோடு தனது இருப்பு, தனது தன்னுணர்வு, தனது எண்ண எல்லை முதலியவற்றை கழற்றி எறிந்து விட்டு முழுக்க
முழுக்க காலங்களைங்கடந்த வெளியில் பயணிக்கும் மன நிலையானது புதினம் முழுக்க நிறைந்துள்ளது.
முழுக்க காலங்களைங்கடந்த வெளியில் பயணிக்கும் மன நிலையானது புதினம் முழுக்க நிறைந்துள்ளது.
இருளின் ஆதுரம்
ஜய்ப்பூரிலிருந்து புதுதில்லிக்கு நள்ளிரவில் பேருந்து பயணம்.
பரபரப்பின்மைக்கும் முற் கால வாழ்க்கை முறையின் நிறைய மீதங்களுக்கும் பெயர் பெற்ற, சாந்தமாக நின்றிருந்த ஜய்ப்பூரின் இளஞ்சிவப்பின் அணைப்பிலிருந்து இருளின் கரிய இதத்திற்குள் பேருந்து மென்மையாகவும் சீராகவும் நகர்ந்து கொண்டிருந்தது.
இரண்டரை மணிக்கு தேநீர் குடிப்பிற்காக புல் வெளியும் முயல்களும் விலையேறிய உணவுப்பொருட்களும் கொண்ட இடைவழி உணவகம் ஒன்றில் பத்து நிமிடங்கள் நின்ற பிறகு பேருந்து இருள் வெளிக்குள் மீளத் தொடங்கியது.
பைலா பாடல்
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனவா மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுக்கெனவா……..
நடுத்தர வயதை எட்டியவர்கள் அல்லது அதைக்கடந்தவர்கள் இந்தப்பாடலின் துள்ளல் அடிக்கு தலையை ஆட்டாமல் இருக்க முடியாது.
இலங்கையின் பைலா பாடல்களை சுவைக்க சிங்கள மொழி அறிவு ஒன்றும் நமக்கு தேவையில்லை. இது கிட்டதட்ட சென்னையின் கானா பாடல் போன்றதே.
ஆனால் நான் ஒவ்வொரு முறை இந்த பைலா பாடல்களைக் கேட்கும்போதும் அது என்னை அதன் தனியிடத்திற்கே அழைத்துச் செல்கிறது.
இந்த பைலா பாடல்களில் காதல் விரகம் என எந்த ரகமாக இருந்தாலும் சரி நண்பரும் இசை விமர்சகரும் நடிகருமான ஷாஜி (http://musicshaji.blogspot.in/2013/07/blog-post_27.html
) சொல்வது போல
இன்மை
புலரி முற்பகல் நண்பகல் அந்தி என பகலொளியானது எல்லா புலன்களையும் ஓயாமல் மாறி மாறி ஆக்கிரமிக்கின்றது.
it’s a long way to the sea
“என்னை யாரும் நேசிக்கவில்லை என்பதை என் வாழ்க்கையில் இன்றுதான் நான் முதன்முதலாக அறிகின்றேன். அவர்களுக்கு எனது படகுதான் தேவையாக இருந்தது. நேற்று வரை நான் அனைவருக்கும் மிகவும் கூடுதலாக வேண்டப்பட்டவனாக நான் இருந்தேன். ஆனால் இன்றோ ஒன்றுமில்லை என ஆகிவிட்டேன்….
“
— HKHAGOROLOI ROHU
DOOR ( it’s a long way to the sea ) என்ற அஸ்ஸாமிய படத்தில் படகோட்டி சொல்லும் வரிகள்.
இந்த படம் ஜாஹ்னூ பரூவா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிராமமொன்றில் ஆற்றினை கடந்து அக்கரைக்கு செல்ல படகும் வயது முதிர்ந்த படகோட்டியும் இருந்தனர். இந்த படகோட்டிக்கு இரண்டு ஆண் மக்கள். ஒருவன் நகரத்தில் தனது குடும்பத்தினருடன் செழிப்பாக வாழ்ந்து வருகின்றான். தந்தையுடன் உறவில்லை.
எக்மோரீ
சென்னை மாம்பலத்திலிருந்து எழும்பூருக்கு மின் தொடர் வண்டியில் வந்து கொண்டிருந்தேன்.
எழும்பூர் நிலையத்திற்குள் வண்டி நுழைந்ததும் இறங்குவதற்காக வாசல் பக்கம் போனபோது நிலையத்தின் பெயர் பலகையை பார்த்து விட்டு எக்மோரீ (
EGMORE )என வாசித்தார்கள் எனது வலது பக்கம் நின்றிருந்த இரண்டு இளைஞர்கள்.
மெதுவாக அவர்களிடம் நீங்கள் எந்த ஊர் ? என்றேன். மஹாராஷ்டிர மாநிலம் புனேயாம். இங்கு கடற்படையில் பணிபுரிகின்றனர்
எனது இடப்புறம் நின்றிருந்த இளைஞனொருவன் சென்னை எக்மோர் இறங்கனும் என்றான். இதுதான் சென்னை எக்மோர் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனும் பெயர்ப்பலகையை பார்த்து விட்டு எக்மோரீ என்றான்.
தம்பி தமிழன்தான். திருநெல்வேலிக்கு போகிறானாம்.
Wolfskinder ( ஓநாய் சிறார் )
இரண்டாம் உலகப்போரின் இறுதியில், அன்றைய கிழக்கு பிரஸ்யாவிற்கு சோவியத் செஞ்சேனைகள் படையெடுத்தன. அப்போது அங்கு வாழ்ந்த சராசரி ஜர்மானியர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.
குடும்பங்கள் சிதைந்தன. குண்டு வீச்சுக்களாலும் குளிரினாலும் உணவு உறையுள் இல்லாததினாலும் ஏராளமான பெற்றோர்களும் முதியோர்களும் கொல்லப்பட்ட நிலையில் யாருமில்லாமல் கைவிடப்பட்ட சிறுவர் சிறுமியரின் கையறு நிலையை சொல்லும் திரைப்படம்.
நோயுற்ற தங்களது பெற்றோருக்கும் உடன்பிறந்தோருக்கும் தங்களுக்கும் சேர்த்து உணவையும் வசிப்பிடத்தையும் தேடி அண்டை நாடான லிதுவேனியாவிற்குள் இருப்புப்பாதைகளோரமும் காடுகளிலுமாக தட்டழிந்ததால் அந்த பிஞ்சுகளுக்கு ஓநாய் சிறார் என்ற பெயர் வந்தது.
லிதுவேனிய விவசாயிகள் இந்த ஓநாய் குழந்தைகளின் உழைப்புக்குப்பகரமாக அவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்தனர்.
லேவ் தல்ஸ்தோய்
ஜார் வேந்தனை அங்கீகரிக்கிறாயா ? என கேட்கிறார்கள்,
‘ ஏன் அங்கீகரிக்கவில்லை ? அவர் அவரது ஜார் வேந்தன், நான் எனது ஜார் வேந்தன் ‘ என்கிறேன்.
.--- { லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு நாவல், முன்னேற்றப்பதிப்பகம் , மாஸ்கோ }.
ஒரு படகு பயணத்தில் நெஹ்லூதவ் என்ற கனவானுக்கும் உடன் பயணியான நாடோடிக்கிழவருக்கும் நடந்த உரையாடலில் கிழவர் கூறியவைதான் மேற்கண்ட வரிகள்.
:ஒரு நிலப்பிரபுவின் குற்றத்திற்கும் மனசாட்சிக்கும் இடையே நடக்கும் நெடிய போராட்டம்தான் இந்த நாவலின் மையக்கரு.
நாவலில் இடம்பெறும் எல்லா பாத்திரங்களின் மனமாகவே உருக்கொள்கின்றது தல்ஸ்தோயின் எழுத்து.. இதன் மீது 117 ஆண்டுகள் நடந்து சென்றிருக்கின்றது
நம்பிக்கை அவ நம்பிக்கை நிராகரிப்பு வஞ்சகம் கொடுங்கோன்மை கைவிடப்படல் ஒழுக்கமின்மை போன்ற எதிர்மறை பண்புகளின் தடாகத்திலிருந்து அருந்தி தன்னைத் தானே மண்ணிலிருந்து விடுவித்துக் கொண்டு மலரும் அறத்தின் பயணம்.
இந்த தார்மீகத்தைக் கொண்டுதான் தன் மீது காலத்தின் பழுப்பேற விடாமல் தடுக்கின்றது இந்த நாவல் .
அன்பின் வாழ்க்கைக்கு ஆயுள் அதிகம்......
நுகர்வு வெறிக்கு அப்பாலும் மனித வாழ்க்கை என ஒன்று இருக்கிறது என்பதை நிரூபிக்கும் படம் அருவி.
வாழ்வின் தொங்கலில் கொண்டு தள்ளப்பட்ட ஒரு ஆன்மா சிந்தும் கண்ணீரின் ஒரு துளியை ஆதுரத்தில் நனைந்த கைகள் கொண்டு ஏந்தியிருக்கும் ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் கண் ஈரத்தின் வழியாக மட்டுமே நன்றிகளை சொல்லிட முடியும்.
“ நானும் இருக்கின்றேன் இறைவனும் இருக்கின்றான். இரண்டு இருப்பும் ஒன்றாகுமா ? அவன் என்றென்றும் இருப்பவன். ஆனால் நானோ இருக்கிறேன் என்ற சொல்லை சொல்லி முடிப்பதற்குள் இல்லாமல் போய் விடுவதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டவன்.
மனிதனின் உள்ளமை என்பது தற்காலிகமானது. ஆனால் இறைவனின் உள்ளமை என்பதோ என்றென்றும் நீடித்திருக்கக் கூடியது நிரந்தரமானது.”
வர வேண்டியது வந்து விட்டது.
அதன் சின்னஞ்சிறு தொண்டை நாளங்களிலிருந்து மெல்ல அதிர்ந்து புறப்படும் க்கியவ் க்கியவ் ஓசையினால் தோட்டத்தின் இலை கொடிகள் நனைந்து பின்னர் அது கசிந்து எனது அறைக்குள் வந்து அங்கிருந்து அது வழிந்து வீடு மொத்தத்தையும் நிறைக்கின்றது.
குளத்தின் நடுவில் விழுந்த சிறு கல் போல ஆழ் மனதில் விழுந்த சொல் போல தனது ஒற்றை ஓசையால் மொத்த சூழலையும் நடனமிட வைக்கின்றது அந்த சிட்டு.
முதலில் மண் இருந்தது. அதற்குள் விதை விழுந்தது. நீரும் காற்றும் கதிரொளியும் தங்கள் ஈவுகளை வழங்கின .
நன்றி
தாய் தந்தையருக்கு,
ஆசானுக்கு,
காலங்கருதி செய்யப்பட்ட உதவிகளுக்கு
அந்தரங்க வேளைகளில் கிடைத்த உதவிகளுக்கு
நத்தையும் தோட்டமும்
சில மாதங்களுக்கு முன்னர் நடப்பட்ட மரங்களின் தற்போதைய நிலையை அறிந்து வர பள்ளிக்கூடம் ஒன்றிற்கு சென்று வந்தோம். அவற்றில் கிட்டத்தட்ட இருபது வரை துளிர்த்து வளர்ந்து பல்வேறு உயரங்களில் நிற்கின்றன. அல்ஹம்துலில்லாஹ் !
மீதமுள்ள மரங்கள் ஏன் துளிர்க்கவில்லை ? என பராமரிப்பாளரிடம் கேட்டதற்கு அவை தாமதமாகத்தான் துளிர்க்கும் என்றார்.
சுவாசிக்கும் வீடுகள்
சுவாசிக்கும் வீடுகள்
“சுவர்களும் அதற்கு
கதவுகளும் கொண்ட எனது வீட்டிற்கு நான் செல்ல வேண்டும், எனக்கான
குடியிருப்பு என்று உலகின் எந்த ஒரு மூலையில் கிடைத்தாலும் அதைப் பற்றிய கவலை
எனக்கில்லை, அது அட்லாண்டிக் கடலின் மீது இருந்தாலும் சரியே……".
சமீபத்தில் வாசித்த கட்டுரையில் வரும் வரிகள் அவை.
இந்த
நிலப்பரப்பில் தனக்கென சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு வாழ்விடம் வேண்டும் என விரும்பாத
மனிதர்களே இல்லை.
பறவைகளும்
விலங்குகளும் காட்டில் வசிக்கும் ஆதி வாசி மனிதர்களும் தங்களுக்கான வசிப்பிடத்தை
இயற்கையை ஒட்டியே அமைத்துக்கொள்கின்றனர். இயற்கையும் தனது பசுமையான
கரங்களைக்கொண்டு அவைகளை ஆதுரத்துடன் பொதிந்து கொள்கின்றது.
இலையில் தங்கிய துளிகள் – நூல் பார்வை
எனது நண்பரின் கண்ணும்மா ( தாய் வழிப்பாட்டி ) தான் அவர்.
“ வாப்பா கலீலு ! அந்த குட்ட மனிசனை அடியேன்.. எவ்வளவு
சொன்னாலும் அவன் போவவே மாட்டேங்குறான். ஒரு குச்சியாவது தாவேன். நானாவது அவன தொரத்தி
விடறேன் “ என்றபடி தனது பிள்ளைகளையும் பெயரன்களையும்
பெயர்த்திகளையும் வாய் ஓயாமல் அழைத்துக் கொண்டே இருக்கின்றார் அந்த மூதாட்டி.
கண்ணும்மாவின் மூளை பிசகி விட்டது என்பதை நேரடியாக சொல்லிடாமல்
அவரை அலட்சியத்துடன் புறக்கணித்து செல்லும் சிறியதும் பெரியதுமான வீட்டு உறுப்பினர்கள்
அவர் முழு நலத்துடன் குடும்பத்தை வளர்த்த காலத்தில் சைவம்
அசைவம் எதுவானாலும் அவரின் கைவிரல்களின் வழியே ஊற்றெடுக்கின்ற சுவைப்பெருக்கில் நனைந்தவைதான்.
Subscribe to:
Posts (Atom)