சிறந்த ஒரு பாடலை நல்லதொரு வரியை
இன்னிசையின் ஒரு கீற்றை
சுவைக்கும் தருணத்தில் திடுமென ஒரு புள்ளியில் மனம்
மெய் வாக்கு அனைத்தும் நிறைந்து இருப்பின் தன்னுணர்வு அழிந்து மனம் உன்மத்தம் கொள்கிறது.
அந்த உச்சகட்ட கொந்தளிப்பு தணிந்து மனம் தரைக்கு
மீளும்போது ஏற்படும் துயரத்தை அழிக்கும் வலுவும் ஆன்மாவிற்கு இல்லை.
No comments:
Post a Comment