Monday 26 July 2021

எறும்பு நீச்சல்

 

 

உள்ளூரில்  வாங்கிய மார்த்தாண்டம் தேனில்  தித்திப்பு கூடுதலாக  இருந்தது  என்று திருச்செந்தூரில் உள்ள காதி சர்வோதய சங்க தேன் குடுவையொன்றை வாங்கினேன்..




 

தோழர் தொல் திருமா உடன்

 


Saturday 24 July 2021

பேராயர் இராபர்ட் கால்டுவெல் -- இடையன்குடி சிற்றுலா


தண்ணென்ற அயர்லாந்தில் பிறந்து இலண்டன் கிறிஸ்தவ பரப்புரை நிறுவகத்தால் அழல் நிறைந்த தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டவர்.

தான் நம்பும் நெறியை மக்களுக்கு பரப்பிட வேண்டுமென்றால் அவர்களின் மொழியை அறிந்திட வேண்டும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தார். தமிழ் பயின்றார். த்மிழை பயில பயில இம்மண்ணின் உப்பு அவருக்குள் ஏறியது. அவரே இந்நிலத்தின் மண்ணாகவும் உப்பாகவும் ஆகிப்போனார்.

Thursday 15 July 2021

மீண்ட சின்னி

 

இவனுக்கு  வயது பன்னிரண்டு .


எனது சதுக்கைத்தெரு பழைய வீட்டில்  கோடை காலங்களின் வெப்பம் தாங்கவியலாமல் சென்னையிலிருந்து வாங்கி வந்தேன்.

Thursday 8 July 2021

ஃபக்கீரப்பாக்கள் என்ற பாணர்கள்

சுட்டி யானை சிறுவர் இதழில்( ஜூலை2021) வெளிவந்தது.



எனக்கு பத்து வயதிருக்கும்.  இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது  நாசிக்குள் ஏறும் புத்தரிசியின் பொங்கு மணத்தில் உருக்கு நெய் வாசனை வீசும்.  திருநெல்வேலி வயலிலிருந்து போன வாரம்   வந்திறங்கிய நெல்லிலிருந்து குத்திய தவிடு நீங்காத அரிசி அது.  அந்த வாசனையில் உறக்கம் இன்னும் அதன் ஆழத்திற்குள் செல்லும். அது ரமழான் நோன்பு காலம். நோன்பு பிடிப்பதற்கான ஸஹர் உணவு  தயாரிப்பு வேளை.