காலை நடையில் பல வகைகளுண்டு.
சோர்வாக இருந்தால் தளர்ந்து நடக்கலாம்.
உற்சாகமாக இருந்தால் விரைவாக நடக்கலாம்
வித்தியாசமான நடைகொண்ட யாராவது நினைவிற்கு வந்தால்
அவர்களைப்போல நடக்கலாம்
தோட்டங்களில் எல்லா பக்கமும் சுழன்று பீய்ச்சியடிக்கும்
குழாய் நீர் போல மனம் கட்டவிழ்ந்தால் கைகளையும் கால்களையும் பல திசைகளில் வீசி கிறுக்குத்தனமாக
நடக்கலாம்
நடையில்தான் எத்தனை வசதி
எனது நடை எனது அதிகாரம்
No comments:
Post a Comment