உடங்காட்டிலிருந்து அருகிலுள்ள சுவற்றில் இரை தேடி
தத்தி தத்தி ஏறியது ஓணான்.
ஏறிய கணத்தில் தலைக்கு மேல் பறந்து சென்ற காக்கையின்
நிழல் கீற்றொன்று ஓணானின் மேல் படிந்து விலகியது. மெல்ல இறங்கிக் கொண்டிராமல் சட்டென
சுவற்றிலிருந்து உடங்காட்டுக்குள் தாவிக்குதித்து மறைந்தது ஓணான்.
காக்கையின் நிழல் கீற்றானது ஓணானின் காதுக்குள் எதை
கிசு கிசுத்ததோ ?
No comments:
Post a Comment