Friday 29 December 2023

மழை படு நாட்கள்

 



டிசம்பரில் நீங்கள் ஊர் வராதீர்கள் எனக் கோருகிறார் என் நெருங்கிய உறவினர்.  சென்னை நீரழிவு நடந்தது டிசம்பர் 02/2015. தனுஷ்கோடி அழிவு நடந்தது டிசம்பர்23/1964. பன்னாட்டுக்கரைகளை ஆழிப்பேரலைகள் தாக்கியது 26/2004. சஃபர் மாதத்தை போல டிசம்பரையும் பீடைகளின் மாதமாக அறிவிக்க முயல்கிறோமா? நானே காலமாக இருக்கிறேன் என்பது இறைவனின் சொல்.

Wednesday 13 December 2023

‘கவிதையின் சமன்’ -- மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023

 

 “வெளிச்சம்

 துக்கமாணுண்ணி

தமஸ்ஸல்லோ

 சுகப்பிரதம்”


(வெளிச்சம்

 துயரம்

 இருள்

 சுகமானது)

உடனே கூடுதல் ஒளி வெள்ள விளக்குள் அணைக்கப்பட்டன. ஒளி வெள்ளம் மட்டுப்பட்டது. இருளும் ஒளியும் சம பங்காளிகளான ஒரு கவிதா முகூர்த்தத்தில் மலபார் இலக்கியத் திருவிழா தொடங்கியது.

மலபார் இலக்கியத்திருவிழா ஏற்பாட்டாளர்களுடன் ஒரு செவ்வி

 

 -- ஷரீஃப் ஹுதவி (மலபார் இலக்கியத்திருவிழாவின் முதன்மை பொறுப்பாளர், மலையாளப்பேராசிரியர், புக் பிளஸ் பதிப்பகம், தெளிச்சம் ஆய்விதழ் ஆகியவற்றின் முதன்மை ஆசிரியர்)

ஷரீஃப் ஹுதவி

-- எம். நவ்ஷாத் ( எழுத்தாளர், ஊடகப் பயிற்சியாளர், மலபார் இலக்கியத்திருவிழா திட்டக் குழு உறுப்பினர்)


எம்.நவ்ஷாத்

ஆகிய இருவரும் இணைந்து அளித்த செவ்வி.

Wednesday 6 December 2023

அறபித்தமிழ் - சோழமண்டலக் கரையின் பண்பாட்டு முத்திரைகள் கருத்தரங்கு – மலபார் இலக்கிய திருவிழா2023, கோழிக்கோடு

 கருத்தரங்க உரைக்குறிப்புக்கள்:





அர்வி வரைவிலக்கணம்

தமிழ்    சைவ வைணவ சமணத்தமிழ் என்பது போல முஸ்லிம் தமிழ்.. இதனால் மொழியில் ஒரு மதச்சமநிலை உண்டாகியது எனலாம்.

மஅபரும் மலபாரும் – மலபார் இலக்கியத்திருவிழா 2023,கோழிக்கோடு கருத்தரங்கு

கருத்தரங்க உரையின் குறிப்புக்கள்





ஆதி தன் திரு நாமத்தால்….

அடியன் ஈ வாக்கு துடர்த்தான்

நாதியான் புவியமைத்தான்

நாதனில் ஹம்தணைத்தான்.