Sunday, 17 November 2019

"சாயாவனம் "





எனக்கு ஒரு வயது கூட நிரம்பாதபோது எழுதி வெளியிடப்பட்ட புதினம்.
புதினம் எழுதப்பட்ட காலச்சூழ் நிலையை விட இன்றைக்கு மிகவும் பொருந்திப்போகி்ன்றது.
" கதையைலிருந்து கதையை வெளியேற்றுவது " என்ற அறைகூவலுடன் எழுதப் புறப்பட்ட சா.கந்தசாமியின் சாயாவனமானது பழைய கதை இன்றைய பருண்மை என தன்னை உருமாற்றிக்கொண்டு கதையல்லாத கதையாக இளமையுடன் நீடிக்கின்றது.
எழுத்தாளர் கதையை இல்லாமலடித்ததோடு தனது இருப்பு, தனது தன்னுணர்வு, தனது எண்ண எல்லை முதலியவற்றை கழற்றி எறிந்து விட்டு முழுக்க
முழுக்க காலங்களைங்கடந்த வெளியில் பயணிக்கும் மன நிலையானது புதினம் முழுக்க நிறைந்துள்ளது.

கதாசிரியன் முக்காலத்திலும் விரிவு கொள்ளும் இந்த ரசவாத நூலானது இன்று முழுக்க மெய்யாகிப்போன
எதிர்வாகியதோடு இன்றைய சூழலியல் அவலங்களைப் பார்த்து மௌன எள்ளலுடன் நிற்கின்றது.
இயற்கையின் தாளகதிக்கு எதிராக தடம் புரளும் தனிமனித மனதின் பெறுபேறாக ஒரு வனம் அழிகிறது.
வெறும் வனத்தின் அழிவுப்படலமாக சுருங்கி விடாமல் மொத்த உலகமே சிதைந்து சிதிலமாகி நம் காலுக்கடியில் உதிரும் வலியை சாயாவனம் பதிக்கின்றது.
நிலை நின்றியங்கும் மொத்த மானுடத்தின் ஆக்க நிறை எண்ணத் திரளை தனிமனிதனின் எண்ணப்பிறழ்வானது அரூபமாக தானியங்கியாக அணு அணுவாக தகர்த்து தனது நோக்கங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப எப்படி மாற்றி செதுக்குகின்றது என்ற நுட்ப விவரணம்தான் புதினத்தின் ஆகச்சிறந்த இடம்.

No comments:

Post a Comment