Sunday, 17 November 2019

நன்றி




தாய் தந்தையருக்கு,

ஆசானுக்கு,

காலங்கருதி செய்யப்பட்ட உதவிகளுக்கு

அந்தரங்க வேளைகளில் கிடைத்த உதவிகளுக்கு


பிடி கொம்பென கிடைத்த ஒற்றைச் சொல்லுக்கு

கனிந்த கண்களின் புன்னகைக்கு

ஆன்மா குவிந்த பிரார்த்தனைக்கு,

மனதின் சிறுமையை உணர வைத்த நற்குணத்திற்கு

மொத்த வாழ்க்கையையும் ஈருலகத்துடன் சேர்த்து பரிசளித்த எல்லாம் வல்ல இறைவனின் பெருங்கருணைக்கு…..

என இவை எவற்றிற்கும் மறு நன்றி செலுத்தி தீருவதேயில்லை.

எதைக்கொண்டு இந்த கடன் பாத்திரத்தை நிரப்புவது ?

அறிவும் இதயமும் ஒரு சேர இளகிக் கசியும் கண்ணீரைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லையே…..

No comments:

Post a Comment