எனது திருவனந்தபுரப் பயணங்கள் பெரும்பாலும் வானொலி நிலைய
கதை சொல்லலுக்காகவே அண்மை வருடங்களாக நடைபெறுகின்றன.
Sunday, 15 February 2026
அனந்தபுரி
பல்பு
மின்சாரமில்லாத மழை இரவுகளில் பேசுவதையும் கேட்பதையும் தவிர வேறெதையும் செய்ய முடியாது. அப்படியானதொரு இரவில்தான் ஆடறுத்து இரத்தத்தைத் துணியில் நனைத்து அசைத்து இரயிலை நிறுத்தியக் கதையைச் சொன்னாள் என் றாத்தா.அது மீச்சிறு கதையாக இருந்ததால் அவள் நெடுந்தொடரொன்றை சொல்லத் தொடங்கினாள்.ஜின் வசிய வீட்டுக்காரிகளைப்பற்றியது.அவ்விரவில் அரிக்கேன் லாந்தர்களின் அலையும் வெளிச்சப் படலுடன் சுவர் கடிகையின் ‘டிக்’ ஒலியும் மட்டும் இல்லாதிருந்தால் அந்த இருளால் இவ்வளவு மட்டுக்கும் வீட்டுக்குள் அலைந்திருக்க முடியாதுதான்.
Wednesday, 11 February 2026
கசபத் – அகவய முரண்பாட்டின் ஆழமும் அகலமும்
புதுதில்லியில் வேதியியல் பொறியாளராகப் பணியாற்றும் முஹம்மது அபூபக்ர் செய்யது இஸ்மாயீல் கசபத் நாவல் குறித்து எழுதிய ஆங்கில மதிப்புரையும் அதன் தமிழாக்கமும்.(தமிழில்:ஆசிர் முஹம்மது)
Saturday, 7 February 2026
அருஞ்சுனை-கால் நாள் ரிஹ்லா #5
நண்பரும் ஒளிப்படக்கலைஞரும் இலக்கிய ஆர்வலருமான சுபுஹான் பீர் முஹம்மது காக்கா வழமைபோல பரபரப்பான விடுமுறைக்காலத்தில் இருந்தார். வளைகுடாவில் பணி புரியும் சுபுஹான் காக்கா எப்போதும் தனது விடுமுறைகளை குடும்பத்திற்குப் போக நட்புகள் காணுகை, ஒளிப்படம் (Subhan's Photography) என பயணங்களை அமைத்துக் கொண்டிருப்பதால் ஆளைப் பிடிப்பது சிரமம்.
| சுபுஹான் பீர் முஹம்மது |

