Thursday 29 June 2023

உப்பு கண்டம் -- ஹஜ்ஜுப்பெரு நாள் வண்ணங்கள்


இஞ்சி, பூண்டு மசாலா விழுதுடன் பூஞ்சணம் பிடிக்காமலிருக்க கொஞ்சம் எலுமிச்சைச்சாறு கூட்டி பிணைந்த இறைச்சி துண்டங்கள். அந்தரத்தில் தொங்குவதால் காக்கைகளுக்கு ஆவதில்லை. கண்ணுக்கும் இறக்கைக்கும் எட்டியது அலகிற்கு எட்டாது என்ற துல்லிய கணிப்பில் அவை தொலைவிலிருந்தே பறுபுறுத்துக் கொண்டு பொறுத்துக் கொள்கின்றன. கிட்டாதாயின் வெட்டென மற இன் ஆகாய செயல் வடிவம்.

வட்லாப்பம்

வட்லாப்பம் சாப்புட்டீங்களா சேர் ?

கொலஸ்திரால சுட்டி Pபயம் மகன்.

பெருநாளெண்டா அதவுமா வெசர் கதையா கெடக்கு.. ஆதம் பாவா கட விசேட சிரேஷ்ட டம் புரியாணி சாப்பிடுங்க சேர் .

ஆள் மோசம் போறதுக்குள்ள எல்லா புளானும். தாரீங்களே மகன்

ஒரு புரிசத்துல சொன்னதுதான் சேர் மிஸ்டேக்கா எடுக்கேணாம்

சேர் ஒரு கத விளங்குமோ?

செல்லுங்கோ. செல்லாம என்ன பலாய் விளங்கும்?

சபா மர்வா தினத்தில் கவிதை முற்றம் அல்லாமா ஆயில்டீன் நடத்தினாரேமே சேர்..

ஓ அப்புடியா. சரியான குறியீடு தான். கவிதய வாசிச்சு போட்டு தொங்கோட்டந்தான் ஓடோணும்..

ஷெய்த்தானுக்கு நாம கல்லு உடக்கொள்ள கவிதை கெணக்கா உடலாமே சேர்..

ஓம் அதுவும் ஏலுந்தானே

விட்டுப்போடுங்க மகன். பாவம் முதிர்கன்னிகள்.. எவ்ளோ மனாம் கண்டாங்களோ

அப்ப நான் போறேன் சேர். யாதா பவலிக்கி பங்க்சல் ஹோட்டல் பக்கமா வாங்கோ. பாபத்தோட ஆப்பையும் ரின் பால் ரீயும் அடிப்பம்


Monday 26 June 2023

தோந்நிய யாத்திரா நூலுக்கு ஆய்வாளர் அப்துல் மஜீத் நத்வியின் மதிப்புரை

நண்பரும் ஆய்வாளருமான அப்துல் மஜீத் நத்வி தோந்நிய யாத்திரா நூலுக்கு மலையாளத்தில் எழுதிய மதிப்புரையின் தமிழாக்கம்.

ஆய்வாளர் அப்துல் மஜீது நத்வி


சாளை பஷீர்; காயல்பட்டின மரபின் தூதர்


தனித்துவமான வரலாற்று மரபு தொடர்ச்சியையும் பண்பாட்டு தனித்துவத்தையும் பாதுகாக்கும் காயல்பட்டினத்திற்கு வரும் வரலாற்றாய்வாளர்களின்  வழிகாட்டியும் உபசரிப்பாளருமான சாளை பஷீர்.

Wednesday 21 June 2023

மஃபர் மலபார் (தமிழ்நாடு கேரள) கூட்டிணைவு நிகழ்வுகள்





கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை & ஆய்வு இருக்கையில், இஸ்லாம்& சமூகம் குறித்த பட்டய வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர்களும்,போதனாசிரியர்களும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத்துறை, அரபுத்துறை பேராசிரியர்களுமாக 29 பேர், கடந்த 17,18/ 06/2023 சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் மேலப்பாளையம், காயல்பட்டினம் பகுதிகளுக்கு வருகை தந்தனர்.

Thursday 15 June 2023

உம்முல் ஹைரிய்யாவின் பள்ளிக்கூட தலை நாள்


என் பெயர்த்தி உம்முல் ஹைரிய்யா கல்விக்கூடத்தில் தன் முதல் எட்டை முதல் கணக்கை முதல் நாளை தொடங்குகிறாள்.

ஐம்பது வருடங்களுக்கு பின்னால் உருள்கிறது காலம்.