எங்கு நமது உலகம் ?
எங்கு நமது நிலம் ?
காவலற்ற
தளைகளற்ற
எம் சொந்தக் கூடு
கொடிய பேய்களும்
சூனியக்காரர்களும்
வாழும் காடு
மேகங்களுக்குள்
பொதியப்பட்ட
சிறு வன தேவதை
நாம்
விரும்பும்படி
எங்கு
ஆள முடியுமோ
அங்கு….
வா தோழா
வனதெய்வங்களின்
சுவனத்திற்கான
பாதையோ
அருகில்…
எங்கு நமது நமது உலகம் ?
எங்கு நமது நிலம் ?
காவலற்ற
தளைகளற்ற
எம் சொந்தக் கூடு
தோழா
நாம்
ஏழு கடல்களுக்கும்
அப்பால்
செல்வோம்
தீ நாகத்தின்
வாய் வழியே
பாம்புகளின்
அரசுக்குள்
செல்வோம்
வா தோழா
நமது உலகத்தை
நாம்
கண்டுபிடிப்போம்
எங்கு நமது நமது உலகம் ?
எங்கு நமது நிலம் ?
காவலற்ற
தளைகளற்ற
எம் சொந்தக் கூடு
--- மடோல் துவா , சிங்களத்திரைப்படப்பாடல்
No comments:
Post a Comment