Thursday, 21 November 2019

கற்கண்டு குழந்தை







வீட்டில் என்னைத் தவிர யாருமில்லை. கீழ் வீட்டில் கதவு மெலிதாக தட்டும் ஓசை. கதவைத் திறந்தேன். தொப்பியணிந்த அண்டை வீட்டு பாலகன் தளிர் போல நின்றிருந்தான்.
அவன் கையில் சிறு கூடொன்று இருந்தது. பிறந்த குழந்தையின் 11 வது நாள் நீராட்டு சடங்கிற்கான அன்பளிப்பாம் அந்தக் கூட்டினுள் சீனகற்கண்டு, வைர கற்கண்டு, சாக்லேட்கள், புது ஐந்து ரூபாய் நாணயம் போன்றவை இருந்தன. பெரும்பாலும் நான் நேர்ச்சைகள், சடங்கு அன்பளிப்புகளை உட்கொள்வதில்லை. ஆயினும் இந்த கூட்டினுள் அரூபமாய் நிறைந்திருந்த அன்பானது மனதிற்குள்ளும் வீட்டிற்குள்ளும் நுழைந்து கொண்டது.

No comments:

Post a Comment