சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நண்பர் இயக்குனர்
அமீர் அப்பாஸ் மூலம் அறிமுகம்.ஆனார்.
அதன்பின் ஃபாரூக் , மனுஷ்யபுத்திரன் உடனான ஒரு சந்திப்பிலும்
அய்யப்பன்தான் மைய மனிதனாக இருந்தார். நகைச்சுவையும் ஆழ்ந்த சிந்தனையும் முற்போக்கும்
கலைஞனுக்கே உரித்தான கொஞ்சம் கிறுக்கும் விரவிய ஒரு படைப்பாளி.
அவர் கையால் ஒரு தடவை கருவாட்டு பொறியலும் இன்னொரு
தடவை முட்டை குழம்புமாக சாப்பிட்டது அதன் அனைத்து குண மணங்களுடனும் நினைவில் நிற்கின்றது.
குமரி மாவட்டத்துக்காரர். ஜெயமோகனுடனான உரையாடல்கள்
அதில் ஏற்பட்ட முரண்கள் அதை ஜெமோ தந்திரமாக கடந்து போதல் போன்றவற்றை அதன் முழு நடிப்பில்
மீட்டிக் காட்டினார். சிரிப்பில் வயிறு கொள்ளவில்லை.
அவரை சந்தித்தும் உரையாடியும் நெடுங்காலமாகிவிட்டது
கதை எழுதிக்கொண்டே தனிமையிலும் இருந்திருக்கின்றார்.
அந்த வெற்றிடத்தை மதுவைக் கொண்டு நிரப்பியிருக்கின்றார். அவருக்குள் மது தன் இறுதி
வசனத்தை எழுதி விட்டது.
மிக துரித கதியிலான புறப்பாடு. எனவே விடை கொடுக்க
முடியவில்லை அய்யப்பன்!!!
No comments:
Post a Comment