சில கடைகளில் ஒன்றரை அல்லது இரண்டு குவளை பழச்சாற்றை
தருவார்கள். நமக்கு பிடித்தமான பழச்சாறாக இருந்தாவிட்டால் மன நிறைவுடன் மெல்ல மெல்ல
சப்பி சப்பி உறிஞ்சுதல்தான். தீர்ந்து விடக்கூடாதே என்ற பதட்டம்.
இஷா தொழுதவுடனான உறக்கமும் அப்படித்தான்.
சோதனை முயற்சியாக நேற்று எட்டு மணிக்கே தலையை வைத்து
விட்டேன். இடையிடையே விழிப்பு தட்டும்போது மணியை பார்த்தேன். 11:20, 2:20. உறங்குவதற்கு
இன்னும் இரவு இருக்கின்றதே என்ற மகிழ்ச்சியே மகிழ்ச்சி . அருந்த அருந்த மீதமிருக்கும்
பழச்சாறு போல இரவு வந்து கொண்டே இருக்கின்றது.
No comments:
Post a Comment