Wednesday 16 June 2021

'க'ஞானம்


 

முதுகு ஒட்டிக் கொண்டு  வியர்த்து எண்ணெயாகி  டைல்ஸ் தரை  நழுவியது. சற்று நகர்ந்த  பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில்  ஜன்னலின் கிராதி கோணவும்  தலையின் சூடு மெழுகாகி இளகியது. அதற்கு மேல் தொடர மனமில்லை. எழும்பி அமர்ந்து கொண்டான் நூகு.

Sunday 13 June 2021

ஒளியிலே தெரிவது— நூல் பார்வை

 


நண்பர் இயல்வாகை அசோக் அனுப்பித்தந்த  ‘ஒளியிலே தெரிவது ‘ ( ஆசிரியர்: நிவேதா ). மொத்தம் 30 பக்கங்கள் கொண்ட  சிறு நூல். பூவுலகின் நண்பர்கள் வெளியீடாக வெளிவந்த நூல். தற்சமயம் அச்சில் இல்லை. பிடிஎஃப் கோப்பாக கிடைக்கின்றது.  ஒளி மாசு தொடர்பாக   நான் அறிந்தவரை தமிழில் இது முதல் நூல் என்று கூட சொல்லலாம்.

Friday 11 June 2021

டி ஏ எஸ் மாமா

 



இங்கிலாந்து அரசியார் எலிசபெத்  சென்னைக்கு 1961 இல் வருகை தந்த போது அப்போது அவர் திருச்சிராப்பள்ளியில்  படித்துக் கொண்டிருந்த சமயம். நிறைந்து வழிந்த தொடர்வண்டியில் அரசியை காணும் ஆவலில்  சென்னை வரைக்கும் தொங்கிக் கொண்டே சென்றிருக்கின்றார். அந்த நெரிசலில் அவரின் ஒரு கால் சப்பாத்து  தவறிப்போயிருக்கின்றது.

Thursday 3 June 2021

சைக்கோல்



 

 

ஜூன்3. இன்று உலக மிதி வண்டி நாள்

 

 அல் ஜாமிவுல்   அஸ்ஹர் முக்கிலுள்ள ஸலீம் சைக்கிள் மார்ட்


ஆறாம் பள்ளி வளாகத்திலுள்ள எஸ்.எம்.டி.மிதி வண்டி நிலையம்


 ஹாஜியப்பா தைக்கா அருகிலுள்ள மேடை கட்டிடத்திலிருந்த  முருகன் சைக்கிள் கடை


கூலக்கடை பஜாரில் உள்ள அடுமை கடை,  குமரன் சைக்கிள் கடை