Tuesday, 19 November 2019

இறைவனுக்குரிய ஈவு







நடுத்தர வயதிலிருந்து முதுமையை நோக்கி நழுவிக் கொண்டிருக்கும் மனிதர்.

கஞ்சிக்கு கைத்தொழில் புரிந்து வருபவர். சொற்ப வருமானம். அவரது இரண்டு ஆண் பிள்ளைகளும் சராசரியாகத்தான் சம்பாதிக்கின்றார்கள். சேமிப்பெல்லாம் ஒன்றுமில்லை. அன்றன்றைக்குள்ள அப்பம் அன்றன்றைக்கு. கூடுதலாக ஏதும் காசு கையில் நின்றால் இறை ஊழியத்தில் கிளம்பி விடுவார்.

ஒரு வழிபாட்டுத்தலத்தில் விருப்பத்தின் பேரில் பகுதி நேர பணி. இதில் சில ஆயிரங்கள் மாதம் கிடைக்கும். அவரது தொழிலில் கிடைக்கும் வருமானத்தை விட இந்த ஊதியத்தில் கூடுதலாக கிட்டுகின்றது.


ஒரு நாள் வழிபாட்டுத்தலத்திற்கு வழமையாக வந்து செல்லும் ஒருவர் நீங்கள் வாங்கும் ஊதியத்திற்கேற்ப வேலை பார்ப்பதில்லை என இவரை சாடியிருக்கின்றார். இத்தனைக்கும் எனது தொழில் நேரம் போகத்தான் இந்த வேலையை பார்ப்பேன் என்ற நிபந்தனையுடன்தான் சேர்ந்துள்ளார்.
ஆனால் அந்த குற்றச்சாட்டு சொல்லை மனம் கத்திக்குரிய கூர்மையுடன் உள்வாங்கியிருக்கின்றது.

வழிபாட்டுத்தல ஊதியத்திலிருந்து ஒற்றை பைசாவைக் கூட வீட்டுக்கு எடுத்து செல்வதில்லை. இந்த வருமானம் இறை ஊழியத்திற்கு மட்டுமே என்ற முடிவின் வழியாக மன வலியிலிருந்து விடுதலை பெற்றதாக என்னிடம் கூறினார்.

No comments:

Post a Comment