
ரிஹ்லா சிறுவாணி தங்கலின் ஏற்பாட்டாளர்கள்
என்ற முறையில் நானும் உவைஸும் ஒரு நாள் முன்னதாகவே நிகழ்விடமான சத் தர்ஷன் அமைந்திருக்கும்
அட்டப்பாடியின் கோட்டத்தராப் பகுதிக்கு சென்று விட்டோம். ஒரு நாள் முழுவதுமாக
கையிலிருப்பதால் அதைத் தொல்குடி பகுதிகளை பார்வையிடுவதில் செலவிடலாம் எனத் தீர்மானம்.