Friday 9 September 2022

கசபத்: ஆழ்மனத்தின் ஆறாத காயம் – முஹம்மது சேக் அன்சாரி

 


    
                                         

கசபத்' காயல்பட்டினத் தமிழிலான அழகிய சுயசரிதை நாவல். காயல்பட்டினத்தின் தமிழ் புதிதாக கேட்பவர்களுக்கு புதுமையாகவும், இனிமையாகும் இருக்கும். அது இந்த நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. நாவலை படித்து முடிக்கும்போது நம் நாவும் அந்த வட்டார மொழியை உச்சரிக்கத் தவறாது.  நாவலாசிரியர் சாளை பசீரின் ஊர் காயல் பட்டினம். அவரைச் சுற்றி நடந்த சுமார் நான்கு வருட நிகழ்வுகளை அற்புதமாக விவரித்திருக்கிறார் என்பதை விட காட்சிப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Sunday 4 September 2022

தோந்நிய யாத்ரா – நிறைவுப்பகுதி ( திருவனந்தபுரம், விழிஞ்ஞம், பூவாறு) நில வேர்கள்

 

திருவனந்தபுரம் சாலைக்கம்போளத்தில்,  ஊர்க்காரரின் அறையில் குளித்து முழுகி வெளியிறங்கினேன். வளையல் செட்டித்தெருவிலுள்ள தட்டுக்கடையில்  வாத்து முட்டை, மலையாளத்தில் தாரா மொட்ட ஆம்லேட்டும் தோசைகளுடன் துவையலுமாக பசியாற்றை நிமிர்த்தியதில் முப்பத்தாறு ரூபாய்கள்தான். கடை வைத்திருப்பவர் சென்னைக்காரர். 

Saturday 3 September 2022

பழங்காசு ப.சீனிவாசன்

 


பழங்காசு சீனிவாசன் திருச்சியைச் சேர்ந்தவர். கோட்டாறு மணி ஆர்வம் கொண்டிருப்பதைப் போல பழங்கால நாணயங்களை சேகரிப்பவர் மட்டுமல்லாமல் அதற்கென்று காலாண்டிதழையும் நீண்டகாலம் நடத்தியவர். பிறகு அதுவே முன்னொட்டாக “பழங்காசு”ம் அவருடன் சேர்ந்துவிட்டது. கல்வெட்டு எழுத்துக்களை படிக்கும் திறனுள்ளவ அய்யா, ஏறக்குறைய முப்பதாயிரம் நூல்களை 50 ஆண்டுகளாக சேர்த்து வைத்துள்ளார்.