Monday 29 January 2024

மாதாந்திர கருத்தரங்கம் -- பயண இலக்கியம் திருச்சிராப்பள்ளி ஒளிப்படங்கள்




 

திருச்சிராப்பள்ளி


மலைக்கோட்டை குடைவரை புடைப்புச்சிற்பங்கள்

மலைக்கோட்டை குடைவரை புடைப்புச்சிற்பங்கள்


குடைவரை தூண்



மலைக்கோட்டை குடைவரை

மலைக்கோட்டை குடைவரைத்தூண்

திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையத்தினருகிலுள்ள பழமை வாய்ந்த கல் பள்ளிவாசல் 

லூர்து மாதா தேவாலயம்

லூர்து மாதா தேவாலயம்



மணியடித்தான் கடை

புகழ் பெற்ற திருவரங்க உணவகத்தின் பழைய விலைப்பட்டியல் 

ஆயில் பரோட்டா

கோட்டை இரயில் நிலைய பள்ளிவாசலின் கல்வெட்டு

பொது கபரஸ்தான்


திருவரங்கம் காவிரி தடுப்பணை


அக்கார அடிசில்





 

Friday 26 January 2024

மாதாந்திரக் கருத்தரங்கம் பயண இலக்கியம்: ஓர் அறிமுகம்


மாதாந்திரக் கருத்தரங்கம்

பயண இலக்கியம்:
ஓர் அறிமுகம்

🎙️சாளை பஷீர்

🗓 ஜனவரி 28, 2024
🕜 காலை 10 மணி
📍அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி

கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர்.

தனது பயண அனுபவங்களை தோந்நிய யாத்ரா மற்றும் என் வானம் என் சிறகு ஆகிய புத்தகங்களில் பதிவு செய்துள்ளார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
களம் வாசிப்பு வட்டம் 

 

Friday 29 December 2023

மழை படு நாட்கள்

 



டிசம்பரில் நீங்கள் ஊர் வராதீர்கள் எனக் கோருகிறார் என் நெருங்கிய உறவினர்.  சென்னை நீரழிவு நடந்தது டிசம்பர் 02/2015. தனுஷ்கோடி அழிவு நடந்தது டிசம்பர்23/1964. பன்னாட்டுக்கரைகளை ஆழிப்பேரலைகள் தாக்கியது 26/2004. சஃபர் மாதத்தை போல டிசம்பரையும் பீடைகளின் மாதமாக அறிவிக்க முயல்கிறோமா? நானே காலமாக இருக்கிறேன் என்பது இறைவனின் சொல்.

Wednesday 13 December 2023

‘கவிதையின் சமன்’ -- மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023

 

 “வெளிச்சம்

 துக்கமாணுண்ணி

தமஸ்ஸல்லோ

 சுகப்பிரதம்”


(வெளிச்சம்

 துயரம்

 இருள்

 சுகமானது)

உடனே கூடுதல் ஒளி வெள்ள விளக்குள் அணைக்கப்பட்டன. ஒளி வெள்ளம் மட்டுப்பட்டது. இருளும் ஒளியும் சம பங்காளிகளான ஒரு கவிதா முகூர்த்தத்தில் மலபார் இலக்கியத் திருவிழா தொடங்கியது.

மலபார் இலக்கியத்திருவிழா ஏற்பாட்டாளர்களுடன் ஒரு செவ்வி

 

 -- ஷரீஃப் ஹுதவி (மலபார் இலக்கியத்திருவிழாவின் முதன்மை பொறுப்பாளர், மலையாளப்பேராசிரியர், புக் பிளஸ் பதிப்பகம், தெளிச்சம் ஆய்விதழ் ஆகியவற்றின் முதன்மை ஆசிரியர்)

ஷரீஃப் ஹுதவி

-- எம். நவ்ஷாத் ( எழுத்தாளர், ஊடகப் பயிற்சியாளர், மலபார் இலக்கியத்திருவிழா திட்டக் குழு உறுப்பினர்)


எம்.நவ்ஷாத்

ஆகிய இருவரும் இணைந்து அளித்த செவ்வி.