Tuesday 31 December 2019

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - நிறைவுப்பகுதி

ஆங்கில மூலம் : கௌதம் பாட்டியா, பென்குயின் வெளியீடு








எல்லாவிதமான பகட்டுக்களையும் வெறுத்து ஒதுக்கும் லாரி பேக்கரின் இந்த நடைமுறையானது லாரி பேக்கர் கட்டிடக்கலை என்று அழைக்கப்படும் கட்டிடக்கலையின் இரண்டு முக்கிய குணாம்சங்களை நமக்கு காட்டுகின்றது.
“ சிறியது “ என்பது அழகானது மட்டுமல்ல அத்தியாவசியமானதும் கூட அது “ பெரியது “ என்பதை விட இன்னும் அத்தியாவசியமானதும் கூட.

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் -- பகுதி 2



ஆங்கில மூலம்: கௌதம் பாட்டியா, பென்குயின் வெளியீடு

 லாரி  பேக்கர் கட்டிடக்கலையைப் பற்றி லாரி பேக்கர் ….






 நண்பர்கள் கழகத்தை ( QUAKER  SOCIETY )    சார்ந்த தோழர்களிடம் தங்கியிருந்தேன். அவர்கள் காந்தியடிகளுக்கு நெருக்கமானவர்கள். காந்தியடிகளிடம் இந்திய சீன மக்களின் வாழ்வியலைப்பற்றி எழுச்சியூட்டுகின்ற உரையாடலை நிகழ்த்திடும் பேற்றை பெற்றேன்.

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் -- பகுதி 1


ஆங்கில மூலம்: கௌதம் பாட்டியா, பென்குயின் வெளியீடு




எளிய மக்கள் செய்வதை அவதானித்தே நான் எனது கட்டிடக்கலையை கற்றேன். எளிய மக்கள் செய்வதாலேயே இந்த கட்டிடக்கலை  எப்போதும் மலிவானதாகவும் எளிமையாகவும் இருக்கின்றது. அவர்கள் கட்டிடக்கலைஞர்களையெல்லாம் பயன்படுத்துவதில்லை. குடும்பத்தினர்களே வீடுகளை கட்டிக்கொள்கின்றனர்.

பழைய கட்டிடங்களில் மர சட்டகங்களில் உள்ள சிறு துளைகளுடன் கூடிய வேலைப்பாடுகளை பார்த்திருப்பீர்கள் . அவைகள் கதிரவனின் ஒளியையும் , வெக்கையையும் அளவாக உள்ளே அனுப்பும்.

நீர் பறவை -- திரைப்பார்வை





“ பற பற  பறவை ஒன்று”  என துரித கதியில் ஷ்ரேயா கோசலின் குரலில் ஒலிக்கும் பாடலில் துயரும் மகிழ்ச்சியும் மெலிதாக இளங்காற்று போல் அலையலையாய் வந்து கொண்டே இருக்கின்றது.

பாடல் வரிகளும் இசையும் பாடகியின் குரலும் ஒரே அலை வரிசையில் பயணித்து  அதன் மீதான  ரசிப்பை அதன் உயர் நிலைக்கு கொண்டு செல்கின்றது.

Monday 30 December 2019

புத்தக கண்காட்சி 2018 - நினைவுகள்



அகில இந்திய வானொலி தூத்துக்குடியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் அறிவிப்பாளர் ராதா கிருஷ்ணன்,  எல்.எஸ்.மாமா, எழுத்தாளர் நாறும்பூ நாதன், நிழற்படக் கலைஞர் ஆவணப்பட முன்னோடி ஆர்.ஆர்.சீனிவாசன், அருங்காட்சியக காப்பாளர் சிவசத்தியவள்ளி, திரு  நெல்வேலி வானொலி நிலைய உதவி இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன்


நிலைத்த பொருளாதாரம் – நூல் மதிப்புரை




பல வருடங்களுக்கு முன்னர் ஸவூதியில் பணியாற்றிய எனது சகோதரருடன் அங்குள்ள பழங்குடியினரைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு தகவலைச் சொன்னார்.

ஸவூதி அரபியாவின் பாலைவனங்களில் வசித்து வரும் பழங்குடியினரை நாகரீகப்படுத்தும் முகமாக  நவீன வசதிகளை உடைய ஒரே மாதிரியான அடுக்ககங்களை நகரங்களில் கட்டியது அந்நாட்டரசு .
அதில் வலுக்கட்டாயமாக அவர்களை குடியேற்றியது. ஆனால் இரண்டொரு நாட்களிலேயே “எங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது “ என்று குச்சியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் பாலைவன வாழ்க்கைக்குள் மீண்டும் சென்று விட்டார்கள்.

நந்திதாதாஸ் -- நேர்காணல் மே 2012


“பாதுகாப்புணர்வுடன்  செயல்பட்டவர்களால்  உலகம்  மாற்றத்தை சந்தித்ததில்லை” -------- நந்திதா தாஸ்.





“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே “என முழங்கியதோடு நில்லாது விளிம்பு நிலை மக்களின் குரலை வீதி நாடகங்கள்  வாயிலாக அரசுக்கு சொன்னவரும் அதன் விளைவாகவே அரச பயங்கர வாதத்திற்கு பலியானவருமான ஸஃப்தர் ஹாஷ்மியின் நாடகப்பட்டறையில் தனது கலைப்பயணத்தைத்தொடங்கியவர்தான் திரைப்பட இயக்குனரும் , நடிகையுமான நந்திதா தாஸ். 

நஞ்சிலிருந்து மீட்கப்படும் அமிர்தம்





அந்த குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் படலம். சுவை பார்த்த கையில் சில மணி நேரம் நீடிக்கும் நெய்யின் முறுகிய மணம்.

“வட இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டு பசுக்களின் பாலில் இருந்து உற்பத்தி செய்யட்ட நெய் இது.  இதில் செயற்கையான  நிறமூட்டிகள் மணமூட்டிகள் பதனப்பொருட்கள் என எதுவும் சேர்க்கப்படவில்லை “ என்கின்றார்  ARIA    பால் பண்ணையின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான அஹ்மத்.

Sunday 29 December 2019

லாரி பேக்கர் வீடும் , அவர் கட்டிய கட்டிடங்களும் -- திருவனந்தபுரம்

துளி நிறைய வாழ்க்கை



                                                                                               

காகம், குருவி, கிளி
நாய், பூனை, ஆட்டுக்குட்டி
குப்பைத் தொட்டிக்கருகிலிருந்த சிறுமி
மற்றும் நான்
என
நாங்கள் மட்டுமே ரசித்த
அந்த கண நேர மழை தூறல்
எங்களுக்கேயானது.
                                                          --- கவிஞர் இந்திரா அலங்காரம்

`````````````````````````````````````````````````````````````````````````````
ஒரு நகரத்தில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வந்தார். நிலபுலன்கள் , வாடகை வரக்கூடிய கட்டிடங்கள், வங்கிக்கணக்கில் பணம் , கிலோ கணக்கில் தங்க வெள்ளி நகைகள் , பங்கு சந்தையில் முதலீடு என செல்வ வளங்களில் அவருக்கு எவ்வித குறைவுமில்லை. அத்துடன் திடகாத்திரமான உடலையும் கொண்டவர்.
கொஞ்ச நாட்களாகவே அவரின் முகம் வாடி இருந்தது . மனதில் அமைதியில்லை. அதன் விளைவாக அவரின்  உடல் நலிவடைந்து விட்டது  கண்கள் குழி விழுந்து முகம் ஒட்டி உடல் குச்சி போல ஆகி விட்டது. 

தனிமைக்குள் தனிமை - தோக்கியோ ஸ்டோரி TOKYO STORY {1953}



“ ஏண்டி கறுப்பி இவகல்லாம் ஓங்கூடவே இருக்கும்ண்டு நெனப்பா.  றெக்க முளச்ச பெறகு அது அது பறந்துடும்.  நீ மட்டும் கெக்கெக்கேண்டு தனிய்யா நிப்பே ”  என குஞ்சுகளுடன் சுற்றித்திரியும் தாய்க்கோழியைப் பார்த்து  சொக்கலிங்க பாகவதரின் மனைவியாக நடிக்கும் விசாலாட்சி கூறும் ஒரு காட்சி மறைந்த திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திராவின் சந்தியா ராகம் படத்தில் வரும்

முதுமை என்பது காலம் கசக்கி எறிந்த காகிதம் போன்றது.

Saturday 28 December 2019

களக்காடு -- குளம், திருக்குறுங்குடி கோயில், தலையணை பச்சையாறு

 பச்சையாற்றிலிருந்து அதன் மனத்தை கொஞ்சம் வீட்டுக்கு  கொண்டு வந்தேன். நதிப்படுகை கற்கள் நதியின் மனமேதான்.. அவை நதியின் ஓட்டத்தை வேகத்தை தண்மையை ரௌத்திரத்தை மென்மையை வெம்மையை  உருள் புரளை..... என எல்லாவற்றையும்  தன்னுள்ளிலும் வெளியிலுமாக சுமந்தும் சுமக்காமலும் இருப்பதால்...........


நண்பர்களுடன் நேற்று 27/12/2019 வெள்ளிக்கிழமை களக்காடு பயணம்


கவிஞர் வண்ணதாசன்


Thursday 26 December 2019

மலைப்பாடகன் நூல் வெளியீட்டு படங்கள்


திறக்க முடியாத மனக் கதவுகள் – தங்க மீன்கள் பட விமர்சனம்






தங்க மீன்கள்  - இருண்ட சூழலில் நம்பிக்கையின் கிரணங்கள்.
மூச்சுத் திணறடிக்கும் மசாலா சினிமாவின் கறுத்த மன சாட்சிக்கு எதிராக இயக்குனர் ராமின் அழுத்தமான காலடிகள்.

தங்க மீன்களின் கதை ஓட்டமானது தனித்த ஒற்றையடிப் பாதையில் பயணிக்காமல் சமூகத்தின் பல இருண்ட வெளிகளை சரியாக குறி வைத்து நகர்ந்துள்ளது.

அன்பும் அரவணைப்பும்  சினேகமும் ஆசையும் எதிர்பார்ப்பும் கற்பனையும் நிறைந்த எல்லையற்ற வெளியானது மண்ணில் பிறந்த செல்லம்மா என்ற மானுடப் பிஞ்சிற்கு மறுக்கப்படுகின்றது.

குளிர் நெருப்பு








எதிர்காலம் பற்றிய அச்சங்கள் கனவுகள் திட்டங்கள் , கடந்து போன நாட்களின் நிறைவேறாத ஆசைகள் இலக்குகள் மீதான ஏக்கங்கள் , குடும்ப உறவுகள் , உழைப்பு , சேமிப்பு, செலவு,   நோய் நொடிகள் ,....  என்ற சுமைகளுடனேயே ஒவ்வொரு சராசரி மனிதனின் அதிகாலையும் விடிகின்றது.

2004 ஆழிப்பேரலை நினைவுகள்




எனது வாப்பா, வாப்பிச்சா வீட்டு அப்பா( வாப்பாவின் வாப்பா) ஆகியோருக்கு இலங்கையில்தான் தொழில். வாப்பா பிறந்ததுதான் இந்தியா. ஆனால் அவர்கள் படித்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான்.

என் சகோதரர்கள் அனைவரும் இலங்கைக்கு தொழில் நிமித்தமாக சென்று வந்து கொண்டிருக்க எனக்கு மட்டும் இலங்கைக்கு போகும் வாய்ப்பு ஏற்படவில்லை.

2004 ஆம் ஆண்டு. நான் சகோதரர்களுடன் கூட்டாக தொழில் செய்து கொண்டிருந்த சமயத்தில் இலங்கை செல்லும் வாய்ப்பு பிறந்தது.

20/12/2004 திங்கள்கிழமையும் வந்தது. அதுதான் பயண நாள்.

அன்று எனது காக்கா ( அண்ணன் ) எனது கடவுச்சீட்டின் ஒளிப்படி, பயணச்சீட்டு ஆகியவற்றை எடுத்து தன் பையில் வைக்கப்போனார். 

Tuesday 24 December 2019

குக்கூ காட்டுப்பள்ளி - 2016


காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு








காயல்பட்டினத்திற்கும் கேரள மாநிலத்தின் கண்ணூர் , தலஸ்ஸேரி , கோழிக்கோடு தெக்கேபுரத்தில் உள்ள குட்டிச்சிறா போன்ற பகுதிகளுக்கும் நிறைய வாழ்வியல் ஒற்றுமைகள் உண்டு என ஒரு உரையாடலின் போது கூறினார் எழுத்தாள நண்பர் அப்துல் ஹமீத்.

கோழிக்கோடு செல்லும் திட்டம் உடனே மனதில் முளைத்து விட்டது.
கோழிக்கோட்டில் கடை நடத்தி வரும்  மலபார் காயல் நல மன்றத்தின் தலைவர் மசூத் காக்கா அவர்களிடம் இது பற்றி விசாரிக்கையில். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். நான் குடியிருப்பதே குட்டிச்சிறாவில்தான் என்றார் .

காவ் சோடப் நஹீன்





அண்மையில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வந்த இரண்டு எதிர்மறையான தீர்ப்புகள் ( உயிரி எரிவாயு திட்டம், டிசிடபிள்யூ வழக்குகள் ) சமூகத்தினுள் ஒரு வகையான கையறு நிலையையும் அவ நம்பிக்கையையும் கிளப்பி விட்டுள்ளது.

கட்டப்பஞ்சாயத்தின் நடுவர்களுக்கும் நீதிமனறத்தின் நீதிமான்களுக்கும் உள்ள வேறுபாடு மிகத் தெளிவானது. நீதிமான்கள் என்பவர்கள் இன்று சட்டக்கல்வியை முடித்து நாளை காலை நீதிமான்களாக பதவியேற்கக்கூடியவர்கள் கிடையாது .

முதல் ஓவியர் -ஏ.எல்.எஸ். மாமா நினைவேந்தல்







அந்தர வெளியில் தொங்கும் வாழ்க்கை எனும் ஆதி அந்தமில்லாத நூல் ஏணியின் இறுதிப்படிகளுக்கு அப்பால் கால் வைத்து முடிவிலிக்குள் கடந்து சென்றிருக்கின்றார். எல்லா இறப்புகளும் துயரமானதே. அதிலும் ஏ.எல்.எஸ். மாமா போன்ற அறிந்த மனிதர்களின் இறப்பின் வழியாக நமது நினைவின் மெல்லிய அடுக்குகளுக்குள் ஒரு பாறாங்கல்லின் கனம் வந்து உட்கார்ந்து கொள்கின்றது.

+2 முடித்த பிறகு பிழைப்பு தேடி முதன் முதலாக சென்னை பயணித்தேன். ஒரு சில  இடங்களில் முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. சரியாக அமையவில்லை.

Sunday 22 December 2019

குருத்து மௌலவியர் -- பட்டாம்பி

26/06/2014

கரிய திரவத்து மீன்கள்...




சிலுவையும் பேரீத்தம்பழமும்






விரிந்து பரந்த அந்த மாளிகையில் ஓர் அறை.

அந்த அறையின் நடுவில் ஒரு மேசை.

மேசையின் எதிரும் புதிருமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அன்றைய ஸவூதி அரசர் ஃபைஸலும் , அன்றைய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸின்ஜரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து அமர்ந்திருக்கின்றனர்.
அந்த மேசையின் மீது மூன்று கிண்ணங்கள்.

வெளுத்துக்கட்டும் நேரமல்ல இது......


       


மஃரிப் பாங்கு சொல்வதற்கு இன்னும் 12 நிமிடங்கள்தான் இருந்தது. ஆளைக்காணோமே என மனம் பரபரத்துக் கொண்டிருக்கையில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. திறந்து பார்த்தால் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பன் நின்று கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே ஸலாம் சொன்ன அவன்  தனது தாமத வருகைக்கான காரணத்தையும் கூறி வீட்டிற்குள் நுழைந்தான்.

சரி சரி கையை கழுவிட்டு வா , வாங்கு சொல்றதுக்கு 06 நிமிஷந்தான் ஈக்குது என்றேன்.

Friday 20 December 2019

WORLD CRAFT FAIR 2013 - CHENNAI




மலைப்பாடகன்





பே ஓட்டம்





மனிதர் 1

பொறித்த உருளைகிழங்கில் செய்யப்படும் குச்சி போன்ற தின்பண்டமும் , திராட்சைப் பழமும் தின்ன அவருக்கு கொள்ளை ஆசை. ஆனால் ஒன்றிரண்டு துண்டங்களுக்கு மேல் அவர் அதை தின்னக்கூடாது என மருத்துவரின் கண்டிப்பான கட்டளை. காரணம் அவருக்கு சிறு நீரகங்கள் இரண்டும் பழுதாகி போயிருந்தன .

தின்ன ஆசைப்பட்ட அந்த மனிதருக்கு வயது 65 இருக்கும். ஊர் ராமநாதபுரம் பக்கம்.  அவருக்கு 2 ஆண் மக்கள். நல்ல குண சாலிகள் . மலேஷியாவில்  பெரிய பல்பொருள் அங்காடிக்கு உரிமையாளர். வாழ் நாளில் பெரும்பகுதியை அங்கேயே கழித்தவர். தன் வாழ்வின் கடைசி காலத்தில் மருத்துவத்திற்காக தமிழகம் வந்திருந்தார்.

பெரும்பயணம் -- LE GRAND VOYAGE



“ காக்கா இந்தியாங்கிற நிலப்பரப்பு முடியுற இந்த இடத்துல நிக்கும்போது வித்தியாசமாயிருக்குல்ல ? “ .

“ அது உண்மைதான் . ஆனா இந்த பயணப்பாத இங்க முடியுதுண்டா மறுபக்கம் தொடங்குதுதானே ? . அப்போ முடிவு எது தொடக்கம் எது ? “

Wednesday 18 December 2019

காழ்ச்சயும் குழந்தைமையும்



2004 ஆம் ஆண்டு வெளியான ‘காழ்ச்ச’ மலையாளப்படம் பார்த்தேன்.
இயக்குநர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் மம்முட்டி உள்ளிட்டோர் நடித்த இப்படம் குஜராத் நில நடுக்கத்தில் ஏதிலியான சிறுவன் கொச்சுண்டாப்ரி என்ற பவனை ( யாஷ் பதக்) மையமாக வைத்து சுழலுகின்றது கதை.

கிராமம் கிராமமாக சென்று திரைகருவி மூலம் திரையிட்டு கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வரும் ஆபரேட்டர் மாதவன் (மம்முட்டி)

மாதவனது அளவான எளிய வாழ்க்கைக்குள் நுழைகின்றான் கொச்சுண்டாப்ரி. அழகிய வேலைப்பாடுகளுள்ள தரை விரிப்பு போல இந்த பகுதி நயத்துடன் படர்ந்து விரிகின்றது.

இலங்கை2019 -- ஜனீர் , கல்வியாளர், பதிப்பாளர், மொழி பெயர்ப்பாளர்



இலங்கை2019 -- அரசியல் பண்பாட்டு, சமூக விமர்சகர் லஃபீஸ் ஷஹீத்


இல்ங்கை2019 -- மார்க்க அறிஞர், விரிவுரையாளர் , சமூக பண்பாட்டு விமர்சகர் ஏ.பி.எம்.இத்ரீஸ்



சாம்பல் மலர்




“ ….வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது என சொல்வது பிழை. மகிழ்ச்சியாக இருப்பது ஒன்றே வாழ்க்கையின் வெற்றியாகும். என் வாழ்க்கை பாதை முழுவதையும் மகிழ்விற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். வாழப்போகின்றேன்…. 

கண்ணாடியை துடைத்து வையுங்கள்



அது ஸுல்தானின் ஆட்சிக்காலம் . அவர் கலைகளை போற்றுபவர் .வழமை போல அன்று அவரின் அவை கூடும் நாள்.

அந்த அவையில் அன்று கலைஞர்கள் கூட்டம். ஓவியம் தீட்டுவதில் தங்களுக்குள்ள திறமையை  நிரூபித்துக்காட்டுமாறு கிரேக்கர்களை பார்த்து சீனர்கள் அறை கூவல் விட்டனர்.  அவை சலசலத்தது. எல்லோரும் ஸுல்தானின் முகம் நோக்கினர். ஒரு முடிவிற்கு வந்தவராய் ஸுல்தான் பின்வருமாறு அறிவித்தார்.

நுண்கலைகளுக்காக அரசு உருவாக்கியுள்ள கட்டிடத்தில் வந்து தங்களின் ஓவியத்திறமைகளை கிரேக்கர்களும் சீனர்களும் நிரூபிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

எங்களுக்கு லீவு உட்டாச்சு......







“ நீங்கோ லேப்டாப்புல ரம்ப நேரம் உக்காரக்கூடாது “

 “ அப்ப என்ன செய்யனும் ? “

“ ஏங்கூட பேசணும். கத சொல்லணும்.. “

“ வேறென்ன புள்ள ? “

“ நாம பேசிக்கிட்டு இருக்கும்போது உங்க ஃப்ரெண்ட் கிட்டேருந்து போன் வந்தா ரொம்ப நேரம் பேசுறீயோ . “

ஒரு இரவு உணவு வேளையின்போது எனது இளைய மகனுக்கும்  எனக்கும் இடையே நடந்த உரையாடலின் ஒரு பகுதி.
 “ புள்ள வாப்பாகிட்ட உனக்கு புடிக்காத விஷயம் என்ன ? “  என கேட்டதற்கு அவன் சொன்ன விடைகள்தான் இவை.

```````````````````````````````````````````````````
முதுகில் விளக்கு எரியும் சிகப்பு நிற முதலை , காற்றாடியுடன் கூட சோப் நுரை ஊது குழல் , விசை முடுக்கத்தில் ஓடும் ஒற்றை கோச்சுடன் கூடிய தொடர்வண்டி .