Monday, 21 September 2026

நிறமும் மணமும் களவாடப்பட்ட மலர் --- ரிஹ்லா ஹைதராபாத் நினைவுகள்

ரிஹ்லா ஹைதராபாத்திற்காக சென்னை கடற்கரைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சார்மினார் விரைவுத் தொடர்வண்டியில் ஏறிய பிறகு தேநீருக்காக நாவு அவாவத் தொடங்கியது. நெடு நேரமாகியும் ஒரு மனிதனும் தேநீர் கூவி வரவில்லை. பயணச்சீட்டுப் பரிசோதகரிடம் தேநீர் எப்போது வரும் என இந்தியில் கேட்டேன்.

Wednesday, 2 September 2026

புத்தகக் கிராமம்

புத்தகங்கள் எண்ணிறந்த உலகங்களைக் கட்டியிழுத்து நம்முள் கொண்டு வருபவைதான். புத்தகங்களை வாங்குவதற்கான மெனக்கெடல் என்பது  ஒரு திறன்பேசி திரைத் தடவலில் முடிந்து விடுவதால் ஏற்கனவே புத்தகங்களுக்காக நடந்த மெனக்கெடல்களுடன் சிறு பயணங்களும் தேவையற்றதாகி விட்டிருக்கின்றன.

Friday, 14 August 2026

சூடு இறக்கம்

ஆடி முடிந்து ஆவணியும் தொடங்கி விட்டது. அம்மி பறக்கிறதோ இல்லையோ அடிக்கிற வெய்யிலில் படைப்பாற்றலாவது கிடைப்பாற்றலாவது உருண்டு திரண்டு எல்லாம் உருகுகிறது. சித்திரை,வைகாசியை மிஞ்சுமளவிற்குத் தகிக்கிறது. அப்போது வராத வேர்க்குரு இப்போது வருவதை மரு நிலத்து மலர் என எடுத்துக் கொண்டு அமைதி கொள்ள வேண்டியதுதான். அல்லது எழுத்துருகி  வேனல் குருவாகி வந்தனை எனப் பாட வேண்டியதுதான்.

Tuesday, 21 July 2026

அனல் வாயில்

தோல் பையிலுள்ள துணிப்பந்தையெடுத்து கைவிரல்களின் இண்டு இடுக்குகளையும் நகக்கண்களையும் கூர்த்தவாறே  நிதானமாக அழுத்தித் துடைத்தார் பண்டாரவிளைக்காரர். விரல்களிலிருந்து கண்களை விலக்காமலேயே சொன்னார்“ இது எல்லாத்துக்கும் வர்ற வாய்வு புடிப்புதான்.பயப்புடறதுக்கு ஒன்னுமில்ல. ஆனா ஒங்களுக்கு வந்த மாதிரி வேற யாருக்கும் வந்து நான் பாத்ததில்ல. வெந்நில ஒத்தடம் வச்ச பொறவு மூணு சொட்டு தைலத்த எடுத்து ராத்திரிக்கும் பகலய்க்கும் தேய்ச்சுட்டு வாங்க. வலி இருந்தா மட்டும் திங்க கிழம கடப்பக்கம் வாங்க…. ”. முந்நூறு ரூபாய்களை வாங்கிக் கொண்டுக் கிளம்பினார்.

Wednesday, 15 July 2026

"ஸ்நேஹம் நிறஞ்ச வாழச்செடியின தெய்வம் காத்தல்லோ"

 "ஸ்நேஹம் நிறஞ்ச வாழச்செடியின தெய்வம் காத்தல்லோ"

(அன்பு நிறைந்த வாழைக்கன்றை தெய்வம் காத்ததே)

Tuesday, 14 July 2026

கொடிக்கால் மாமா -- முக்கால் நூற்றாண்டுக் கால பெருந்தடம்


பொதுவாக இரவுறக்கத்திற்கு முன் நான் செல்பேசியை அணைப்பதுண்டு. அன்று நான் படுப்பதற்கு சற்றுத் தாமதம். வாட்சப்பில் நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினரும் நண்பருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அழைத்தார். நெடுநாள் நட்பென்றாலும் அபூர்வமாகத்தான் சந்திப்போ அல்லது தொலைபேசி வழி உரையாடலோ நடக்கும்.

Monday, 6 July 2026

கேசவர்

 

“மிசினா கத்திரியா?”

“கத்திரியே போடுங்கோ காக்கா”

கத்திரியின் இரு ஓரங்களிலும் ஓடிக்கோலோனை தெளித்துத் துடைத்த பின் வெட்டத்தொடங்கினார் மம்மியா பிள்ளை. காலை எட்டு மணிதான் என்றாலும் வெய்யிலுக்குள் அவ்வளவு பவர். ஃபேன் காற்றும் சுகப்படவில்லை.

Friday, 12 June 2026

வட்டுவம்


 

எங்கள் சிறு பருவத்து  நிதிச்சுரபி..உம்மா,கண்ணும்மாமார்களின் இடுப்பில் தொங்கும் சுருக்குப்பை.

Sunday, 7 June 2026

வெய்யில்

 கொச்சியிலிருந்து நண்பர் மன்சூர் நெய்னா இவ்வருட கோடை விடுமுறையின் தொடக்கத்தில் செல்பேசியில் அழைத்து இராமநாதபுரம் பக்கம் சுற்றுலா போக வேண்டும். பருவ நிலையெல்லாம் எப்படி எனக் கேட்டார். இதே கேள்வியை போன வருட கோடை விடுமுறைத் தொடக்கத்திலும் கேட்டார்.


Thursday, 28 May 2026

பந்து மேச்(சி) -- சில நினைவுகள்

 நேற்றைய இறுதிப்போட்டியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது காயல்பட்டினம் அய்க்கிய விளையாட்டு சங்கம் (யுஎஸ்சி USC) நடத்தும் மௌலானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பையின் 51 வது ஆண்டு கால்பந்தாட்டப்போட்டிகள்.

சுழற்கோப்பையுடன் காயல்பட்டினம் யுஎஸ்சி அணியினர்


Saturday, 16 May 2026

பந்து மேச்

 

போட்டியில் பங்கேற்க வந்திருந்த பஞ்சாப் கால்பந்தாட்ட அணியினரின் சப்பாத்தி பருப்பில் மனத்தையும் வாயையும் பறி கொடுத்த கொட்டு ஒலி மாமா வயிறு வீங்கி மருத்துவமனையில் நாட்கணக்கில் கிடந்தார்.

Thursday, 23 April 2026

பிரமிள் நூலகம்



 

தோழர் ஏர்வாடி காதர் காஜா மீரா மீரானுடன் பிரமிள் நூலகம் சென்று வந்தோம்.
நண்பர் மயன் ரமேஷ் அவர்களின் நன் முயற்சியில் உருவான நூலகம்.

Tuesday, 21 April 2026

சும்மா பண்ட மாற்றுதான்......


என் பெயரனுக்கு இது அது என்றெல்லாம் இல்லை. எல்லாம் விளையாட்டுப் பொருட்கள்தான். சமையல் கலன்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அதை தன் தலையில் கவிழ்த்துப் பார்த்தான்.

Friday, 3 April 2026

டி.ஐ. அரவிந்தன் -- நினைவேந்தல்


அரவிந்தனை முதலில் அறிமுகமானது அவரது 'பயணம்' நாவலுக்கு நான் எழுதிய மதிப்புரையின் மூலமாகத்தான்.

Friday, 20 March 2026

இரவுகள் இருண்டவைதான். ஆனால் விண்மீன்கள் வராமலிருப்பதில்லை.

 


அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள்!!

 இன்னொரு ஈகைத்திருநாள் வாழ்த்தை சொல்ல நாவும் மனதும் எழும்ப மறுக்கிறதுதான்.

Saturday, 14 March 2026

துரையண்ணன் கடை

 


பொதுவே நான் இராப்பாடியில்லை.கிட்டத்தட்ட சேவல் அட்டவணைக்காரன் எனச் சொல்லலாம்.இரவிற்குரியதை இரவிற்கும் பகலுக்குரியதை பகலுக்கும் வகிர்ந்தளிக்கும் நீதமான ஈவுக்காரன்.

Thursday, 12 March 2026

பச்சை மஞ்சள் சிகப்பு -- நாவல் அறிமுகம்

 


2026 ஆம் ஆண்டின்  சென்னை புத்தகக் காட்சியில் நான் கொஞ்சம்போலத்தான் புத்தகங்களை வாங்கினேன்.அதிலொன்று எழுத்தாளர் ட்டி,டி.ராமகிருஷ்ணனின் “பச்சை மஞ்சள் சிகப்பு’  (ஏறத்தாழ நானூறு பக்கங்கள்) நாவல். குறிஞ்சி வேலனின் மொழியாக்கத்தில்  நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ளது.

Sunday, 15 February 2026

அனந்தபுரி

எனது திருவனந்தபுரப் பயணங்கள் பெரும்பாலும் வானொலி நிலைய கதை சொல்லலுக்காகவே அண்மை வருடங்களாக நடைபெறுகின்றன.

பல்பு

மின்சாரமில்லாத மழை இரவுகளில் பேசுவதையும் கேட்பதையும் தவிர வேறெதையும் செய்ய முடியாது. அப்படியானதொரு இரவில்தான் ஆடறுத்து இரத்தத்தைத் துணியில் நனைத்து அசைத்து இரயிலை நிறுத்தியக் கதையைச் சொன்னாள் என் றாத்தா.அது மீச்சிறு கதையாக இருந்ததால் அவள் நெடுந்தொடரொன்றை சொல்லத் தொடங்கினாள்.ஜின் வசிய வீட்டுக்காரிகளைப்பற்றியது.அவ்விரவில்  அரிக்கேன் லாந்தர்களின் அலையும் வெளிச்சப் படலுடன் சுவர் கடிகையின் ‘டிக்’ ஒலியும் மட்டும் இல்லாதிருந்தால் அந்த இருளால் இவ்வளவு மட்டுக்கும் வீட்டுக்குள் அலைந்திருக்க முடியாதுதான்.