அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள்!!
இன்னொரு ஈகைத்திருநாள் வாழ்த்தை சொல்ல நாவும் மனதும் எழும்ப
மறுக்கிறதுதான்.
இது வரை நாம் காணாத நெருக்கடியான சூழலில் புனித றமளான்
முடிந்து ஈத் வந்திருக்கிறது. நோன்பும் பெருநாளும் ஓர் இறைப்பற்றுறுதியாளனின் வாழ்வில்
எவ்வளவு தலையாயவை என்பது எல்லோரும் அறிந்ததொன்று.
இராக் அதிபர் சத்தாம் ஹூஸைனை ஓர் தியாகத் திருநாளில் (ஈதுல்
அழ்ஹா)வில் கொன்று விட்டு அதன் காணொளியை உலகம் முழுக்கப் பரப்பினார்கள்.
இரு பெருநாள்களுக்கும் நோன்பிற்கும் சேர்த்து ஃபலஸ்தீனில்
குண்டு மாரி பொழிந்தார்கள்.
இரான் மீது புனித றமளான் மாதத்தில் இரத்த ஆட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
புதுதில்லி உத்தம் நகரில் ஈகைத்திருநாளைக் கொண்டாட விட
மாட்டோம். இரத்தத்தில் ஹோலிக் கொண்டாடுவோம் என்ற குரல்கள் பகிரங்கமாக உயர்கின்றன.
இந்த றமளான் முழுக்க வட இந்தியாவின் பல மாநிலங்களில் முஸ்லிம்களை
அடித்துக் கொள்வதும் சுழியத் தொலைவில் நெற்றியில்
11 வயது சிறுவனை சுட்டுக் கொல்வதும் காணுமிடங்களில் முஸ்லிம்களை சீண்டி அடித்து அவமானப்படுத்துவதும்
கடைகளை மூட வைப்பதும் தொழுகை நடத்தியதற்காகவும் இஃப்தாருக்காகவும் மிதிப்பது சிறையில்
தள்ளுவது எனத் தொடர்ச்சியாக செய்திகள் வந்துக் கொண்டேயிருக்கின்றன.
இரான் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் உயர் தலைவர்கள் தொடர்ந்து
கொல்லப்படுவதையும் ஃபலஸ்தீனில் நடக்கும் இன அழித்தொழிப்பினையும் தங்களது ஆன்மாவிற்கும்
இதயத்திற்கும் நெருக்கமாக உணரும் சங்கிகள் அந்தத் துணிவில் இங்கு ஓர் இனப்படுகொலையை
நடத்திட நெருங்குகிறார்கள். எச்சரிக்கை மானியின் முள் அதன் உச்ச அளவை எட்டி விடத் துடித்துக்
கொண்டிருக்கிறது.
உலகத்தை அதன் மொத்த அழிவின் விளிம்பிற்கு நகர்த்திக் கொண்டிருக்கும்
சாம் சியோனிசக் கூட்டணியில் போய் வலுவில் ஒட்டிக் கொண்டு ‘இஸ்ராயீல் எங்கள் தகப்பன்
நாடு’ என பீற்றிக் கொள்கிறார் மூடர் கூட்டத்தலைவன்.
இந்த சாம்சியோசங்கி (அமெரிக்க இஸ்ராயீல் சங்கி) கூட்டணியினரின்
மன ஓட்டத்தை உலகம் புரியாமலில்லை. முஸ்லிம்கள் தங்களின் ஆன்மத்தேடலின் உச்சக்கட்ட உழைப்பில்
ஈடுபடும் காலகட்டத்தில் அழிவிற்கான முன்னெடுப்பை செய்வதின் வழியாக அவர்களின் மன நிலையை
அதன் வீரியத்தை அதன் ஆன்ம வலுவை நொறுக்கிடலாம் என்ற வேகம்தான்.
சாம்சியோசங்கிகளுக்கு ஒரு சொல்!!!
நீங்கள் உங்களது எல்லா அடக்குமுறைகளையும் கொண்டு எங்களது
பௌதிக இருப்பை அடக்கி ஒடுக்கி துடைத்தெறியலாம். ஆனால் நாங்கள் முடிந்து விடப்போவதில்லை. நாங்கள் எல்லைகளிலிருந்து
விடுதலையடைந்தவர்கள். எங்கும் தொலைந்து விடப்போவதில்லை. வானத்தையும் நிலத்தையும் அண்டங்களையும்
படைத்தவனிடத்தில் இறுதியாக மீளக்கூடியவர்கள்.
இருள் கூம்பாரத்தையும் வானத்துத் தாரகைகள் தங்கள் ஒளியைக்
கொண்டு நனைக்கும். பாலையிலும் இளஞ் செடிகள் பூப்பதை நிறுத்துவதில்லை என்பதை நம்புபவர்கள்.
ஆனால் நீங்கள்தான் பாவம். அநீதிகளினாலும் மனிதக் குருதியினாலும்
உங்கள் மடி கனத்திருக்கிறது. நீங்கள் தொழும் உங்களது எந்தத் தெய்வங்களும் உங்களைக்
காப்பாற்றப்போவதில்லை. ஏனென்றால் நீங்கள் தொழுவது உங்கள் பொய்,அவதூறு.பேராசை,மேலாதிக்கம்,
மன விருப்பங்களைத்தான். நீங்கள்தான் மூழ்கிப்போகத்
தேவையான கல் கனத்துடன்தான் இருக்கிறீர்கள். உங்களுக்குத்தான் மீட்பருமில்லை காப்பவருமில்லை.
உங்களுக்கும் சேர்த்துதான் ஈகைத்திருநாள் வாழ்த்துகள்.
இரவுகள் இருண்டவைதான். ஆனால் விண்மீன்கள் வராமலிருப்பதில்லை.
No comments:
Post a Comment