Monday, 21 September 2026

நிறமும் மணமும் களவாடப்பட்ட மலர் --- ரிஹ்லா ஹைதராபாத் நினைவுகள்

ரிஹ்லா ஹைதராபாத்திற்காக சென்னை கடற்கரைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சார்மினார் விரைவுத் தொடர்வண்டியில் ஏறிய பிறகு தேநீருக்காக நாவு அவாவத் தொடங்கியது. நெடு நேரமாகியும் ஒரு மனிதனும் தேநீர் கூவி வரவில்லை. பயணச்சீட்டுப் பரிசோதகரிடம் தேநீர் எப்போது வரும் என இந்தியில் கேட்டேன்.

Wednesday, 2 September 2026

புத்தகக் கிராமம்

புத்தகங்கள் எண்ணிறந்த உலகங்களைக் கட்டியிழுத்து நம்முள் கொண்டு வருபவைதான். புத்தகங்களை வாங்குவதற்கான மெனக்கெடல் என்பது  ஒரு திறன்பேசி திரைத் தடவலில் முடிந்து விடுவதால் ஏற்கனவே புத்தகங்களுக்காக நடந்த மெனக்கெடல்களுடன் சிறு பயணங்களும் தேவையற்றதாகி விட்டிருக்கின்றன.