Tuesday, 21 July 2026

அனல் வாயில்

 தோல் பையிலுள்ள துணிப் பந்தையெடுத்துக்  கை விரல்களின் இண்டு இடுக்குகளையும் நகக்கண்களையும் கூர்த்தவாறே  நிதானமாக அழுத்தித் துடைத்தார். விரல்களிலிருந்து கண்களை விலக்காமலேயே சொன்னார் “ இது எல்லாத்துக்கும் வர்ற வாய்வு புடிப்புதான். பயப்புடறதுக்கு ஒன்னுமில்ல. ஆனா ஒங்களுக்கு வந்த மாதிரி வேற யாருக்கும் வந்து நான் பாத்ததில்ல. வெந்நில ஒத்தடம் வச்ச பொறவு மூணு சொட்டு தைலத்த எடுத்து ராத்திரிக்கும் பகலய்க்கும் தேய்ச்சுட்டு வாங்க. வலி இருந்தா மட்டும் திங்க கிழம கடப்பக்கம் வாங்க…. ”. முந்நூறு ரூபாய்களை வாங்கிக் கொண்டுக் கிளம்பினார் பண்டாரவிளைக்காரர்.

Wednesday, 15 July 2026

"ஸ்நேஹம் நிறஞ்ச வாழச்செடியின தெய்வம் காத்தல்லோ"

 "ஸ்நேஹம் நிறஞ்ச வாழச்செடியின தெய்வம் காத்தல்லோ"

(அன்பு நிறைந்த வாழைக்கன்றை தெய்வம் காத்ததே)

Tuesday, 14 July 2026

கொடிக்கால் மாமா -- முக்கால் நூற்றாண்டுக் கால பெருந்தடம்


பொதுவாக இரவுறக்கத்திற்கு முன் நான் செல்பேசியை அணைப்பதுண்டு. அன்று நான் படுப்பதற்கு சற்றுத் தாமதம். வாட்சப்பில் நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினரும் நண்பருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அழைத்தார். நெடுநாள் நட்பென்றாலும் அபூர்வமாகத்தான் சந்திப்போ அல்லது தொலைபேசி வழி உரையாடலோ நடக்கும்.

Monday, 6 July 2026

கேசவர்

 

மிசினா கத்திரியா?”

“கத்திரியே போடுங்கோ காக்கா”

கத்திரியின் இரு ஓரங்களிலும் ஓடிக்கோலோனை தெளித்துத் துடைத்த பின் வெட்டத்தொடங்கினார் மம்மியா பிள்ளை. காலை எட்டு மணிதான் என்றாலும் வெய்யிலுக்குள் அவ்வளவு பவர். ஃபேன் காற்றும் சுகப்படவில்லை.

சூடு இறக்கம்