Tuesday, 28 January 2020
Monday, 27 January 2020
ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறு வீட்டில் பசியில்லையே.......
‘ ஒரு வீட்டின் சமையல் அடுத்த வீட்டின் பசியை அணைக்கும்’
என்ற வரிகள், ‘ பண்டங்கான்டொரு நாடுண்டார்ந்தே’ (அன்றங்கே ஒரு நாடிருந்ததே) என்ற வாழ்வியல் பாடலில் இடம் பெற்றவை. இந்த வரிகளின் வாழும்
சாட்சியை அண்மையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Thursday, 16 January 2020
Monday, 13 January 2020
Sunday, 12 January 2020
லொள்ளா சாச்சப்பா
நாய்க்கும் நமக்குமான பிணைப்பிற்கும் ஒரு செவிவழி
தொன்மம் உண்டு. சிறு வயதின் ஒரு தூக்க வேளையில் என் உம்மா
வழியாக எனக்கு கடத்தப்பட்ட செய்தியை உங்களுக்கும் சொல்கின்றேன்.
முதல் மனிதர் ஆதம் நபியை
இறைவன் மண்ணிலிருந்து படைக்கும் சமயத்தில் மலக்குகளில்
முதன்மையானவனாக இருந்த இப்லீஸ் அது குறித்து பொறாமைப்பட்டானாம்.
Saturday, 11 January 2020
Tuesday, 7 January 2020
Sunday, 5 January 2020
வாழ்வின் நிறம் கறுப்பு
“ சிவப்பு தரவு நூல் – ஒரு பிற்சேர்க்கை “ {THE RED
DATA BOOK – an
Appendix
}. ஆவணப்படம் { 72
நிமிடங்கள் / 2014 }
இயக்கம் :
கே.பி. பிரதீப் , சிறீமித் ; பாதசாரி பட இயக்கம் [ PEDESTRIAN PICTURE MOVEMENT ]
பச்சை நிறம்
மொத்தமாக கொட்டி வைக்கப்பட்டிருக்கும் அட்டப்பாடியின் வனப்பகுதியின் இருளர்
குடியிருப்பு பகுதி . அங்கு ஒரு சிறு குடிசை. விரியும் முன்னரே தீய்த்து
எறியப்பட்ட மனித மொட்டு ஒன்று அதனுள் கிடத்தப்பட்டிருக்கின்றது.
வற்றாத ஊற்று
வீட்டின் பின்புறம் முன்னூறு சதுர அடியில் சிறிய
தோட்டம் ஒன்று அவருக்கு இருந்தது.. அதில் ஒரு கிணறும் இருந்தது. தோட்டத்தில் வெண்டைக்காய்,
சுரைக்காய், கீரை வகைகள், வெள்ளரி, பப்பாளி, மா போன்றவை நின்றன. அவை குறைவின்றி விளைச்சலை தந்து கொண்டிருந்தன.
அந்த வருடம் மழை பொய்த்து விட்டது. தீய்க்கும் வெயில்.
அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள கிணறுகளில் எல்லாம் நீர் மட்டம் தரையை தொட்டு விட்டது.
இறைக்கும் நீரிலும் மண் கலங்கியதாக இருந்தது.
நோன்பு என்ற புத்தாக்க பயிற்சி
அந்த
மனிதருக்கு வயது 65.ஆகின்றது. நல்ல உடல் நலம். ஒரே ஒரு மகன். அவன் படித்து நல்ல நிலையில் உள்ளான். 20
வருடத்திற்கு முன்னரே அவரது வங்கி வைப்புத்தொகை 10 லட்சங்கள். இன்னும் நல்ல முறையில் வணிகம் செய்து
கொண்டுதான் இருக்கின்றார். எனக்கு அவரை 17 வருடங்களாக பழக்கம். எப்போது சந்தித்தாலும்
எப்படி இருக்கின்றீர்கள்? என்ற என் கேள்விக்கு சோர்வான முகத்துடன் “ஒண்ணும்
இல்லப்பா” என உதட்டை பிதுக்கிக் கொண்டே பதில் சொல்வார்.
பொதுவாக நமது வாழ்க்கையில் நாம் எத்தனை பேறுகளை
பெற்றிருந்தாலும் ஒண்ணும் இல்லப்பா என்ற சலித்த மன நிலையுடன்தான் ஒவ்வொரு நாளும்
கழிகின்றது.
Friday, 3 January 2020
“சஈது நூர்ஸியும் ரிஸாலாயே நூரும் சமகாலத்துருக்கியில் இஸ்லாத்தின் ஒர் அம்சம்” நூலாய்வு
இஸ்தான்புல்லின் மலைக்குன்றில் அமைந்துள்ள எயூப் மையவாடியிலிருந்து நகரத்தை நோக்கிய ஸஈத் நூர்ஸி மரணம் கல்லறைகளில் மட்டுமல்ல
மாநகரிலும் கூட உள்ளது என உணர்ந்தார்.
{ மேற்கண்ட
நூல் பக்கம்-18.}
பொதுவாக
ஊடகங்களிலும்,அறிவு ஜீவிகள் நடுவேயும் மதம் தொடர்பான உரையாடல் வரும்போதெல்லாம்
அடிப்படைவாதம் என்ற பழிச்சொல்லும் கூடவே வரும். என்னமோ அடிப்படைவாதம் என்பது
மதங்களுக்கு மட்டும்தான் உரித்தானது என்பது போல.
ஆனால் வரலாறு
இதற்கு எதிராக சில உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
முத்துதேவன்பட்டி வாத்தியார் -- நினைவேந்தல்
1989 ஆம்
ஆண்டு ரமழான் மாதத்தின் நிதானமான ஒரு காலைப்பொழுது.
அந்த சமயம்
எனது ஆசிரியர்களில் ஒருவரான கொடிக்கால் ஷேஹ் அப்துல்லாஹ் ஊருக்கு வந்திருந்தார். அவருடன்
அன்று நான் தஃவா பணிகளில் ஈடுபட்டிருந்த காலம்.
மருமகன் இன்று தேனி வரய்க்கும் பயணம். ரெடியாகுங்க
என்றார். மாமா நோம்பு நேரமாச்சே எப்படீ என சடைந்து இழுத்தேன்.போச்சே என்றார்.
இதற்கு மேல் அவரிடம் பேச்சு கேட்க துணியாதவனாய் பயணத்திற்கு ஆயத்தப்பட்டேன்.
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை
வேலூர்
மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண்மை கூட்டுறவு பண்ணை
ஒன்றிற்கு ஓய்விற்காக நண்பருடன் அண்மையில் செல்ல நேரிட்டது .
கிட்டதட்ட
இருபது ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மலையடிவார பண்ணையில் நிறைந்திருந்த ஏகாந்தத்தின்
பின்னணி இசையாக பறவைகளின் இடைவிடாத இசைக்கச்சேரியானது பகல் முழுக்க நடந்து கொண்டே
இருந்தது.
அந்த பண்ணையை
கவனித்துக் கொள்ள வயதான இணையர் இருந்தனர்.
அவர்களின்
உடைமைகளாக அங்கு இருந்தவை ஒரு சில கலங்கள் , ஒரு கட்டில் , போர்வை , இரண்டு தலையணை
, ஒரு ஜெர்ஸி கறவை பசு , இரண்டு ஆடுகள்
மட்டுமே.
Thursday, 2 January 2020
போர்வையற்ற குருவிகள்
வெளி நாட்டு
பணி ஓட்டத்திலிருந்து மூன்று மாதம் விலகி சென்னையில் நிற்க முடிவு பண்ணியுள்ளேன்
என்று சொன்ன நண்பர் ஃபழ்ல் இஸ்மாயீல் , அந்த கால கட்டத்தில் அய்ந்து நாட்கள்
உதகைக்கு போய் நண்பர்களுடன் தங்கும் தனது விருப்பத்தையும் சொன்னார்.
எல்லோரும்
போய் பார்க்கும் தேய்ந்து போன சுற்றுலா இடங்களில் நாம் நம்மை காணமலடிக்கக் கூடாது
என்பதை முதலிலேயே தீர்மானித்துக் கொண்டோம்.
அவர் சொன்ன
பத்து நாட்களுக்குள்ளேயே கிளம்பியாகி விட்டது.
மருத்துவமனையா ? மரணமனையா ?
தனது கருணையை
வினியோகிப்பதற்காக இறைவன் இரண்டு பிரதி நிதிகளை இந்த உலகிற்கு அனுப்பினான் : அதில்
ஒருவர் தாய். மற்றொருவர் மருத்துவர்.
தூத்துக்குடியில்
உள்ள மருத்துவ மனை ஒன்றில் எனது சகோதரியை சேர்ப்பதற்காக
வண்டியில் சென்றோம். வண்டியிலிருந்து
பெட்டி படுக்கைகளை கீழே இறக்கி வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் நெஞ்சை
துளைப்பது போன்ற ஓவென்று மரண ஓலம் ஒன்று வெடித்து மருத்துவமனை முழுக்க சிதறியது.
புதியதாய் ஒரு பூதம்---உள்முரண்களில் ஆதாயமடைய நினைக்கும் ஆதிக்க சக்திகள்
கண்ணியமும் பாரம்பரியமும் மிக்க மத்ரஸாக்களுக்கிடையேயான
பிளவை உண்டாக்கும் விவாதங்கள் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருவது மனதை வேதனைப்படுத்துவதாக
உள்ளது.பெரும் நிறுவனங்களை உருவாக்கும் மாமனிதர்களிடம் சில சமயங்களில் சில குறைகள்
இருப்பதற்கு வாய்ப்புள்ளது .
முன்னோர்கள் ,மூத்தோர்களின் சாதனைகள்,போதாமைகள், ஆகியவற்றை
பின்வரும் தலைமுறை அசை போடுவதும் ,தேவையான மாற்றங்களை மேற்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி
நகர்வதும் இயல்பானது,புரிந்துக்கொள்ளக்கூடியது,வரவேற்கக்கூடியது.
மாற்றுகளைத் தேடும் மருத்துவம்
உலகெங்கும் நடைமுறையிலிருக்கும்
பெரும் போக்கான ( main stream )
விஷயங்களில் மக்கள் சலிப்படைந்துள்ளனர். அந்த சலிப்பு என்பது நீண்ட
காலமாக ஒரு விஷயத்திலேயே புழங்கியதால் ஏற்பட்டதல்ல. மாறாக அவை ஏற்படுத்தும் கேடு
பாடுகளின் அழுத்தமான பிடியிலிருந்து விடுபட ஏதேனும் மாற்று வழியை தேடுகின்றனர்.
அதன் விடையாக
மாற்று பண்பாடு , மாற்று அரசியல் , மாற்று ஊடகம் , மாற்று சினிமா , மாற்று கலை
இலக்கியம் என நதி போல குமிழ் விட்டு பெருக்கெடுக்கின்றது. இதில் மாற்று முறை
மருத்துவமும் தப்பவில்லை.
Wednesday, 1 January 2020
பசி நீக்கிய ஹஜ் பணம்
செருப்பு
தைக்கும் தொழிலாளி அப்துல் கறீம் பக்தாத் நகரில் வாழ்ந்து வந்தார். புனித ஹஜ்
பயணம் செல்ல வேண்டும் என்பது அவரின் நெடு நாளைய விருப்பம். அதற்காக ஒவ்வொரு நாளும்
தன்னுடைய உழைப்பிலிருந்து ஒரு சிறு தொகையை மண் உண்டியலில் சேமித்து வந்தார். பல
வருடங்களுக்குப்பிறகு ஹஜ் செல்வதற்கான
தொகை சேமிப்பின் வழியாக திரண்டு விட்டது.
மூத்த ஊடகவியலாளர் வீ. தனபாலசிங்கம் -- நேர் முகம்
இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி பிராந்தியத்தில் உள்ள
கரவெட்டியில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவர் கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,நெல்லியடி
மத்திய மஹா வித்தியாலயம்,பருத்திதுறை ஹாட்லி கல்லூரி ஆகியவற்றில் பயின்றவர்.
தனது 21 ஆம் வயதிலேயே மிக இளம் பிராயத்திலேயே அச்சு
ஊடகத்துறையில் காலடி பதித்தவர்.ம1977 ஆம் ஆண்டு மெய்ப்பு நோக்கராக வீரகேசரியில் இணைந்து 1985 ஆண்டு உதவி ஆசிரியர்,
பின்னர் வெளிநாட்டு செய்தி ஆசிரியர்,நாடாளுமன்ற நிருபர்,வெளிநாட்டு உள்நாட்டு அரசியல்
விமர்சகர் என பல நிலைகளை கடந்து பெற்ற பழுத்த அனுபவத்தோடு 1997 ஆம் ஆண்டு தினக்குரல்
நாளிதழ் தொடங்கியதிலிருந்தே பணியாற்றி வருகிறார்.
Subscribe to:
Posts (Atom)