Wednesday, 1 January 2020

பள்ளி துறப்பு






பள்ளிக்கூடங்கள் ஜனவரி 03 ஆம் தேதிக்கு மாற்றாக ஜனவரி 04 ஆம் தேதி திறக்கப்படும் என்ற வானொலிச்செய்தியை இளைய மகனிடம் பகிர்ந்தால் மகிழ்ச்சியடைவானே என்று நினைத்து கூறினேன்.

அவனோ "எனக்கு தெரியுமே "என்றான்


பள்ளிக்கூடம் திறப்பதைப்பற்றி என்ன நினைக்கின்றாய்?

பள்ளிக்கூடம்ன்டாலே வெறுப்பா இருக்கு? பள்ளிக்கூடங்கறத  யார் கண்டுபிடிச்சாங்க வாப்பா?


என்ன விஷயம்?

ஏன்?

மிஸ்லாம் அடிக்கிறாங்க

அடிக்காத மிஸ்ஸ பாக்குறது கஷ்டம் சரி . பள்ளிக்கூடம் இல்லனா வாழ்க்கயில பொழக்கிறது எப்படி?

பணம் தர்ற மிஷின் வைச்சா நல்லா இருக்கும்

அப்டிலாம் நடக்காதே?

அபபோ அரசாங்கம் நம்ம எல்லாத்துக்கும் பணம் தரணும்

அதுவும் நடக்காதே

அப்போ நாம ஒரு ஆளுக்கு ஒரு ஆள்  ஒத்தாசயா இருந்து வாழ வேண்டியதுதான்.




No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka