2004 ஆம் ஆண்டு வெளியான ‘காழ்ச்ச’ மலையாளப்படம் பார்த்தேன்.
இயக்குநர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் மம்முட்டி உள்ளிட்டோர்
நடித்த இப்படம் குஜராத் நில நடுக்கத்தில் ஏதிலியான சிறுவன் கொச்சுண்டாப்ரி என்ற பவனை ( யாஷ்
பதக்) மையமாக வைத்து சுழலுகின்றது கதை.
கிராமம் கிராமமாக சென்று திரைகருவி மூலம் திரையிட்டு கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வரும் ஆபரேட்டர் மாதவன் (மம்முட்டி)
மாதவனது அளவான எளிய வாழ்க்கைக்குள் நுழைகின்றான் கொச்சுண்டாப்ரி. அழகிய வேலைப்பாடுகளுள்ள தரை விரிப்பு போல இந்த பகுதி நயத்துடன் படர்ந்து விரிகின்றது.
பாலுக்குள் கலந்த தித்திப்பு போல மாதவனின் குடும்பத்திற்குள் ஒன்றிப்போகும் கொச்சுண்டாப்ரியை அவர்கள் பிரியும் நேரம் அரசின் வழியாக நேர்கிறது.

தனக்கு நெருக்கடி ஏற்படும் பல சமயங்களில் அந்த சிறுவன்
வெளிப்படுத்தும் உடல்மொழி அபாரமானது. குறிப்பாக ஏதிலியர் முகாமில் இறுதியாக அவன் விடப்படும்போது
அவனது கண்கள் பேசிடும் சொற்கள் வலிமை மிக்கவை.
மாதவன் குடும்பத்தினரின் நேசம், காணாமல் போன பெற்றோர் , அழிந்த வீடு குறித்த துயரம், சொந்த மண்ணை மிதித்த நிறைவு என எல்லாம் அந்த பார்வைக்குள் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறிய ஏதோ ஒன்று அந்த கண்களில் எறிகணை போல பாய்கின்றது பார்வையாளர்கள் மேல்.
------------

என் அய்ந்து மாத பேத்தியை மடியில் கிடத்தி கொஞ்சிக்
கொண்டிருந்தேன். கைகளையும் கால்களையும் முன்னும் பின்னும் மேலுங்கீழும் பக்கவாட்டிலும்
விசிறி போல அசைத்துக் கொண்டிருந்தாள். எச்சிலுடன் கூடிய உதடுகளுடன் முகம் திரும்பி தன் இரு திராட்சைப்பழ கண்களால்
என் கண்களை நோக்கினாள். கூர்த்த பார்வையில் பொங்கி வழிந்த முழு வெள்ளைத்தனம். கருணையையும்
இரக்கத்தையும் நமக்குள் கொப்பளிக்க வைக்கும் குழந்தைமையின் தடாக விழிகள். அவளின் பார்வையின்
பெருக்கையும் மூர்ச்சையையும் என்னால் தாங்கவியலவில்லை. அழுது விட்டேன்.
குழந்தைமை என்பது பிரபஞ்சக்கருணையின் மூல ஊற்றோடு
நேரடித் தொடர்புடையது. பொங்கு மா அருவியிலிருந்து பெருகுவது. பூமியை விலக்கி விட்டு முளையிடும் குருத்து போன்றது. அதனால்தான் அதற்கு அத்தனை
ஆற்றல்.
( பாடல் வரிகள் )
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்றுகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
- அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
No comments:
Post a Comment