Tuesday, 12 November 2019

காற்றை அழைத்து சென்றவர்கள்


ஊசித் தூறல் மழையை
பிரதிக்குள் அழைத்து வரும்போது
சொற்கள் விழுந்து
மெல்லிய தூவானம் அடித்தது
பின் உரத்து பழமாக விழுகையில்
உடைந்து தெறித்து சிலிர்க்கிறது
மழையை ரசித்தபடி எழுதுகையில்
ஒரு கணம் நானும் மழையானேன்
நள்ளிரவாகியும் பெய்த மழையை
பிரதிக்குள் அடக்க முடியாததால்
தொப்பாகிக் கசிகிறது இரவு
எப்படியாவது மழைக்குள் இருந்து
வெளியேறிச் செல்ல பிரதியை
முடிக்க எத்தனிக்கையில்
வெள்ளத்தில் அள்ளுண்டு செல்கிறது சொற்கள் ( மழையை பிரதிக்குள்
அழைத்து வரும்போது )

இன்று உலக மறதி நோய் தினம்

அவர் எண்பது வருடங்களை கடந்தவர். ஆளைப்பார்த்தால் பத்து வயது குறைவாகத்தான் மதிப்பிட முடியும். குருதியழுத்தம், நீரிழிவு என்ற தற்காலபரிசு நோய்களும் இல்லை. தெளிவான பேச்சும் நடையும் உடையவர். மூன்று பின்தோன்றல்களை கண்டவரும் கூட.

தனது அனைத்து பெண்பிள்ளைகளுக்கும் மட்டுமில்லாமல்அவர்களது பிள்ளைகளுக்கும் பெண் உறவினர்களுக்கும் கூட நீள அகலமான வீடுகளை வடிவுற கட்டிக் கொடுத்தவர்.

அந்தரக்கணம்


ஐவேளை தொழுகைக்கான நேரம் வரும்போது அருகில் பள்ளிவாயில் இருந்தால் அங்கு போய் தொழுவோம்.
அதற்கான வாய்ப்பு இல்லாதபோது நாமிருக்குமிடத்தில் தொழுவோம்.
புதிய இடமாக இருந்தால் கிப்லா ( கஃபாவின் திசை ) வை கணித்த பின்னர் தொழுவோம்.

ஆசீர்வாதத்தின் வண்ணம் ( ஆசீர்வாதர் ரங் )


“ பிரம்மாவின் மகன், அப்துல் கனியின் மகன் இருவரும் கழுத்தை கட்டிக் கொண்டு நதி நீரில் விளையாடுவோம். இது ஹிந்து நதி இல்லையா ! பிரம்மா எனக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்று பார்க்கிறேன்! அவரே நேரில் வந்து ‘ இந்த நதியில் உன் மகன் நீராடக் கூடாது, இது ஹிந்து நதி ‘ என்று சொல்கிறாரா, பார்க்கிறேன்….”
“இப்போது அவளுடைய பார்வை ஹஸினாவின் நெற்றிக் குங்குமத்தின் மீது சென்றது. ஒரு முஸ்லிம் பெண்ணின் நெற்றிப் பொட்டு. தன்னுடைய முதல் ஆசீர்வாதத்தின் சின்னம். அவள் தன் நடுங்கும் உதடுகளை ஹஸீனாவின் நெற்றிப் பொட்டின் மீது பதித்தாள்!.... “
                                                                                                ---- ’ஆசீர்வாதத்தின் வண்ணம் ‘

ஆகாசத்தின்டே நிறம் -- ஒரு திருடன் ஒரு தீவு சில மனிதர்கள்





டாக்டர் பிஜூ என்ற பிஜூ குமார் தாமோதரன் எழுதி இயக்கிய மலையாள படம்.
 நடிப்பு : இந்திரஜித் , நெடுமுடி வேணு , அமலா பால் , பிரித்வி ராஜ்.
----------------------------------------------------------------------------------------------------


நமது நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் மனமாற்றத்திற்கான வாயிலை திறக்கின்றனவோ இல்லையோ அவை தேங்கிய குட்டையில் கொசுக்கள்  பெருகுவது போன்று குற்ற மன நிலையை அடை காத்து வளர்க்க உதவுகின்றது என்பதில் அய்யமில்லை.

அறத்தின் எல்லைக் கற்கள்


“எனக்கு மட்டும் வசதி வந்தால்  அள்ளி அள்ளிக் கொடுப்பேன்“ என நம்மில் பலர் கூறுவதுண்டு. எல்லா மனிதர்களுக்கும் சமச்சீராக ஒரே மாதிரி வாழ்வாதாரம் வழங்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனாலும் மனிதனின் வசதிக்கும் வளத்திற்குமான எல்லைதான் என்ன?  எவ்வளவு பெரிய செல்வந்தரும் தாம் வசதி படைத்தவர் என்பதை எளிதில் ஒப்புக்கொள்வதே இல்லை .

அழகின் அழகு



“ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான் “  { அல்குர் ஆன் 6:1 }


ஆழமும் அடர்த்தியும் மிக்க இந்த இறைவாக்கு நமக்கு உணர்த்த முற்படும் எண்ணற்ற பொருளின் ஒரு கீற்றை  கர்நாடக இசைப்பாடகி நித்ய சிறீ மஹாதேவன் அலையலையாக மிதந்து இறங்கும் தனது குரலில் இசையாக மாற்றித்தருகின்றார்.