ஐவேளை தொழுகைக்கான
நேரம் வரும்போது அருகில் பள்ளிவாயில் இருந்தால் அங்கு போய் தொழுவோம்.
அதற்கான வாய்ப்பு இல்லாதபோது நாமிருக்குமிடத்தில் தொழுவோம்.
புதிய இடமாக இருந்தால் கிப்லா ( கஃபாவின் திசை ) வை கணித்த பின்னர் தொழுவோம்.
தொடர்வண்டி, பேருந்து , கப்பல் என்றால் உத்தேசமாக திசை பார்த்து தொழுவோம்.
ஆனால் வானூர்தியில் பறக்கும்போது அங்கு முன்னோக்குவதற்கு கிப்லா திசைகள் என எதுவுமில்லை
எட்டு பக்கமும் தன்னை பிணைத்திருக்கும் மூலைக்கற்களின் கனம் நீங்கிய சல்லாத்துணி போல மனது உணரும் அதே நேரம்
எல்லாமிருந்தும் எல்லாமுமில்லாத கட்டாய துறப்பு நிலையான அந்தர ஊஞ்சல் கணத்தின் துளியாகவும் மனது தன்னை அறிகிறது
அவன் எட்டு திக்குக்கும் மட்டுமில்லை . திசையின்மைக்கும் அவன்தான் உரிமையாளன் என்ற ஓர்மையில் சிரம் பணியும்போது அந்தர ஊஞ்சல் கணமானது எடை மிக்கதாக மாறி விடுகின்றது.
No comments:
Post a Comment