Tuesday, 12 November 2019

இன்று உலக மறதி நோய் தினம்

அவர் எண்பது வருடங்களை கடந்தவர்ஆளைப்பார்த்தால் பத்து வயது குறைவாகத்தான் மதிப்பிட முடியும்குருதியழுத்தம்நீரிழிவு என்ற தற்காலபரிசு நோய்களும் இல்லைதெளிவான பேச்சும் நடையும் உடையவர்மூன்று பின்தோன்றல்களை கண்டவரும் கூட.

தனது அனைத்து பெண்பிள்ளைகளுக்கும் மட்டுமில்லாமல்அவர்களது பிள்ளைகளுக்கும் பெண் உறவினர்களுக்கும் கூட நீள அகலமான வீடுகளை வடிவுற கட்டிக் கொடுத்தவர்.


திருமண விழாக்களாகட்டும் வீடு கட்டுவதிலாகட்டும் அவருக்கென தனி சிட்டையும் பத்ததியும் உண்டு.

தனது மூன்றாவது தலைமுறையின் வாழ்வு வரை சமைத்து எழுப்பியவர்....... இன்று தனது நேற்றுகளை முழுவதுமாக இழந்து விட்டார்அவர் இந்த கணத்திலும் கூட இல்லை.

தனது உறவுகளின் பெயர்கள்வீடுதிசைகள்அன்றாட வாழ்க்கை கடன்களின் ஒழுங்கு என எதுவுமே அவரின் மூளை மடிப்புக்களில் மிச்சமில்லைகாலம் காலத்தை தின்று செரித்து விட்டது

காலமானது மண்ணறைக்குள்ளிருக்கும் மண்ணின் வடிவிலும் வர முடியும் என்பதை மட்டுமே இதுவரைக்கும் அறிந்திருந்த நான்தான் ஈன்ற குட்டிகளை தின்னும் தாய் பூனைக்குட்டியின் வடிவிலும் அது வரும் என்பதையும் அறிந்த நாளிது.

No comments:

Post a Comment