Showing posts sorted by relevance for query ஆடு வாழ்க்கை. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query ஆடு வாழ்க்கை. Sort by date Show all posts

Wednesday, 13 November 2019

ஆடு வாழ்க்கை -- நிறைவுப்பகுதி


ஆடு வாழ்க்கை – நிறைவுப் பகுதி
.
தொழிலாளி முதலாளி என்று வரும்போது இறைவனுக்கு அஞ்சுவதை விடவும் மத சகோதரத்துவத்தை விடவும் வர்க்க பாசம்தான் ஸவூதி முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசிடமும் மேலோங்குகின்றது.
அடிமை வாழ்க்கை , பாரபட்சமான சட்டங்கள் , அடிப்படை மனித உரிமை மீறல்கள் என பல துயரங்களின் பக்கம் இந்த புதினம் நம் கவனத்தை ஈர்க்கின்றது.

“ கிட்டதட்ட அரை நூற்றாண்டாக  கேரளத்திலிருந்து மட்டும் அய்ம்பது லட்சம் பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் துயரத்தையும் விரக்தியையுமே கை மேல் பலனாக பெற்றுள்ளனர்.

இருந்தாலும் பெரும்பாலானோர் அங்கு திரும்பவும் செல்கின்றனர் . இந்த புதினத்தின் கதை மாந்தரான நஜீபும் மீண்டும் வளைகுடாவிற்குத்தான் வேலைக்காக சென்றுள்ளார் .அதுதான் வளைகுடா நாடுகளின்  மாய மந்திரம்

“  என்கிறார் நூலாசிரியர் பென்யாமீன்.

ஆடு வாழ்க்கை - முதல் பகுதி

21/12/1996

கமீஷ் மிஷ்யத், சஊதி

 அஸ்ஸலாமு அலைக்கும் ! தேவரீர். வாப்பா அவர்களின் சமூகத்திற்கு !!

Friday, 3 January 2020

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை





வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண்மை கூட்டுறவு பண்ணை ஒன்றிற்கு ஓய்விற்காக நண்பருடன் அண்மையில் செல்ல நேரிட்டது . 

கிட்டதட்ட இருபது ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மலையடிவார பண்ணையில் நிறைந்திருந்த ஏகாந்தத்தின் பின்னணி இசையாக பறவைகளின் இடைவிடாத இசைக்கச்சேரியானது பகல் முழுக்க நடந்து கொண்டே இருந்தது.
அந்த பண்ணையை கவனித்துக் கொள்ள வயதான இணையர் இருந்தனர்.
அவர்களின் உடைமைகளாக அங்கு இருந்தவை ஒரு சில கலங்கள் , ஒரு கட்டில் , போர்வை , இரண்டு தலையணை ,  ஒரு ஜெர்ஸி கறவை பசு , இரண்டு ஆடுகள் மட்டுமே.

Saturday, 11 January 2020

கதை சொல்லும் நேரம்





அது ஒரு பஞ்ச காலம்.

நள்ளிரவு நேரம்.




கறுப்பு மையை கரைத்து பெரிய அண்டாவில் ஊற்றி நிறைத்த மாதிரியான கும்மிருட்டு.

Saturday, 16 November 2019

இயற்கையே ஆசிரியனாய்.........முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான்









அந்தக் கல் கட்டடத்தின் வாயிலிற்கு ஓலை கிடுகினாலான கதவு.. சன்னலின் இடத்தில் வட்ட வடிவிலான சிமிட்டி கிராதிகள்.

அந்த கிடுகு , கிராதி துளைகள் வழியாக அரூப மாயாவியான காற்றானது குடிலுக்குள் வருவதும் போவதுமாக இருந்தது. வீட்டின் உள்ளே வாழ்க்கையை அன்றாடம் நகர்த்திச் செல்வதற்குத் தேவையான மிக எளிய தளவாடங்களே இருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் வளர்ந்து நின்றன. அந்த மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

தலைப்பாகையும் கை பனியனும் லுங்கியும் அணிந்திருந்த அவர் எங்கள் நண்பர்கள் குழாமை பனங்கற்கண்டும் எலுமிச்சை சாறும் கலந்த பானகம் தந்து வரவேற்றார். அவர்தான் அலீ மனிக்ஃபான்.

Wednesday, 10 June 2020

Friday, 15 November 2019

மண் மிட்டாய்







“ கண்ண தொறந்து எங்கள பாத்த ஆண்டவன் எங் கொழந்தைட கண்ண மூடிட்டானே “ என்ற அலறல் பேறுகால வார்டையும் தாண்டி அரசு மருத்துவமனை வளாகம் முழுக்க முட்டி அலைந்தது.

“ யம்மா , இங்க கூப்பாடு போடக்கூடாது. இது ஆஸுபத்திரி. இனிமே கூச்சல் போட்டீங்கன்னா பெரிய டாக்டர் வீட்டுக்கு அனுப்பிடுவாரு “ என்ற தலைமை நர்ஸின் மிரட்டலினால் வாயைப்பொத்திக்கொண்டு குலுங்கினாள் சுப்பைய்யாவின் மனைவி. மொத்த உடலும் அவிழ்ந்து விழுந்தது போல நின்றார் சுப்பைய்யா.

 சுப்பைய்யாவின் வீடு  எங்களூரிலிருந்து எட்டு கிலோ மீற்றர் தொலைவு உள்ள திருச்செந்தூரில் இருந்தது. மண் சுவருடன் மேலே பனை ஓலையால் வேயப்பட்ட வீட்டில்தான் அவர்களின் வாழ்க்கை தவழ்ந்து கொண்டிருந்தது . 

Saturday, 28 May 2022

தோந்நிய யாத்ரா -- 1,பொன்னானி -- பொன் நிகர் விரி நீர் -- நில வேர்கள்


திட்டமிடப்படாத, தோன்றிய பொழுதிலான பயணமொன்றை மேற்கொள்ள வேண்டும் என பெருந்தொற்று முடக்கு காலத்திலிருந்தே தோன்றிக் கொண்டிருந்தது.

இவ்வருட புனித ரமளான் மாத விடைபெறலின்பிரிவுத்துயரானது ஒரு பிய்ந்து போதலை கோரவும். வெளிக்கிளம்புவதற்கான நெருக்கடியானது  பின் வரும் நிழலாக வந்து சேர்ந்தது. கடல் அகழியில் ஓயாது  சரியும் மணல் போல மனத்திற்குள் வெற்றிடம் குழிந்து கொண்டே இருந்தாலும் இறக்கைகள் எஞ்சும் வரை பறக்க வேண்டியதுதான்.