ஆடு வாழ்க்கை – நிறைவு பகுதி
.
தொழிலாளி
முதலாளி என்று வரும்போது இறைவனுக்கு அஞ்சுவதை விடவும் மத சகோதரத்துவத்தை விடவும்
வர்க்க பாசம்தான் ஸவூதி முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசிடமும் மேலோங்குகின்றது.
அடிமை
வாழ்க்கை , பாரபட்சமான சட்டங்கள் , அடிப்படை மனித உரிமை மீறல்கள் என பல
துயரங்களின் பக்கம் இந்த புதினம் நம் கவனத்தை ஈர்க்கின்றது.
. “ கிட்டதட்ட அரை
நூற்றாண்டாக கேரளத்திலிருந்து மட்டும்
அய்ம்பது லட்சம் பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர்
துயரத்தையும் விரக்தியையுமே கை மேல் பலனாக பெற்றுள்ளனர்.
இருந்தாலும் பெரும்பாலானோர் அங்கு
திரும்பவும் செல்கின்றனர் . இந்த புதினத்தின் கதை மாந்தரான நஜீபும் மீண்டும்
வளைகுடாவிற்குத்தான் வேலைக்காக சென்றுள்ளார் .அதுதான் வளைகுடா நாடுகளின் மாய மந்திரம்
“ என்கின்றார் நூலாசிரியர் பென்யாமீன்.
தனது கதைக்கருவை
வலியுறுத்தும் தரவுகளை ( DATAS ) மட்டுமே பிடித்து தொங்காமல் வளை குடா வாழ்க்கையில் நிறைந்துள்ள ஈர்ப்பும் அவலமுமான முரண்நகைகளை (IRONY) சென்னையில் நடந்த இலக்கிய
விழா ஒன்றில் எடுத்துக்கூறினார் பென்யாமீன்.
1970
களிலிருந்து 1990 களின் இறுதிப்பகுதி வரை வளைகுடாவில் கசங்கிய மனிதர்களின் கண்ணீரிலும் குருதியிலும்தான்
பெரும்பாலான தமிழக கேரள மக்களின் வாழ்வு வளம் பெற்றது. நமதூருக்கும் இது
பொருந்தும். இது வரலாறு.
காயல்பட்டின மண்ணில் ஏராளமான வெளி நாட்டு சோகங்கள் துண்டு துண்டாக விரவியும் புதைந்தும்
கிடக்கின்றன.
முந்தைய
காலத்தில் இலங்கைக்கு வணிக நிமித்தமாக செல்லும் நமதூர் ஆண்கள் 7 – 8 வருடங்கள் வரை
கூட ஊர் வராமல் அங்கு தங்கியதுண்டு. பல பேர் இங்கு ஒரு குடும்பம் அங்கு ஒரு
குடும்பம் என வாழ்ந்ததுண்டு. இதில் ஏதாவது ஒரு குடும்பம் தன் தலைவனின் முறையான
வருகைக்காகவும் கவனிப்பிற்காகவும் ஏங்கிக்
கிடந்துதானிருக்கின்றது.
.மன்னார்
வளைகுடாவின் வான் வெளிகளில் இந்த சோகங்கள்
அரூபங்களாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன . அவை எழுத்தாக உருப் பெறும் நாளை ஏங்கி எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
முந்தியெல்லாம்
ஊரிலிருந்து ஒரு கடிதம் போய் சேர்ந்து மறு கடிதம் ஸவூதியிலிருந்து வருவதற்குள் ஒரு
மாதம் போய் விடும்.
தற்காலத்தில் தொலை
பேசி , இணைய வழி நேருக்கு நேர் காட்சி உரையாடல்களினால்
நாடுகளுக்கும் ஊர்களுக்கும் அவற்றில் வாழும் மனிதர்களுக்கும் இடையேயான இடைவெளி
பெருமளவில் குறைந்து விட்டது. உலக கிராமம் என்ற பெயருடன் பௌதீக இடைவெளிகள்
சுருங்கி விட்டன.
அத்துடன்
இன்று வெளி நாட்டு வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோர் தேர்ச்சித்திறன் (SKILLED ) வாய்ந்த தொழிலாளர்களே. அவர்களுக்கு கை நிறைய ஊதியமும் கிடைக்கின்றது. பெரும்பாலானவர்கள்
குடும்பத்துடனும் சென்று மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர்.
மனித
வரலாற்றின் முற் பகுதியிலிருந்தே பிழைப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக புலம்
பெயர்தல் , தொலை தூரம் செல்லுதல் , அயல் நாடு செல்லுதல் என்பது இருந்து வரத்தான்
செய்கின்றது . இத்தகைய நிகழ்வு தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஏன் பறவைகளும் கண்டம்
விட்டு கண்டம் வலசை ( MIGRATION } செல்லத்தான் செய்கின்றன.
சொந்த
நாட்டில் தொழில் தொடங்க வாய்ப்பு , வளங்கள் இல்லாமல் போவதும் , உடனடியான குடும்ப
நெருக்கடிகளும் , மக்களுக்கு எதிரான அரசின் பொருளாதார கொள்கைகளும் சட்டங்களும்
, மதத்தின் அடிப்படையிலான பார பட்சங்களும்
வெளி நாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதின் மிக முக்கியமான காரணங்களாகும்.
வெளி நாட்டில்
பணி புரியும் எண்ணற்ற நல்ல இதயங்களின் ஈகையினால் ஊரில் எண்ணற்ற அறப்பணிகள் நடந்து
வருவதையும் மறக்க இயலாது.
அன்னிய நாட்டு
வாழ்க்கை என்பது அறவே தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தான்.
ஆனால் அவை ஒரு
மட்டிற்குள் இருக்கும் வரைக்கும் சரிதான். வெளி நாட்டு வாழ்க்கையின் சதவிகிதம்
கூடும்போது அது மனித சமூகத்தில் சில பல சிக்கல்களை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை.
1990 கள் வரை
இந்த வெளி நாட்டு வாழ்க்கையானது குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்திய
சீர்குலைவுகள் ஏராளம். இல்லற உறவிலும் , பிள்ளைகள் வளர்ப்பிலும் இதன் பாதிப்புகள்
நிறையவே தெரிந்தன.
மாறியுள்ள
இன்றைய சூழலிலும் பாதிப்புகள் வெவ்வேறு வடிவத்திலும் அளவிலும் தொடரத்தான்
செய்கின்றன. அன்றுதான் அந்த கதை என்றால் 2013 இலும் அதேதான் நிலைமை என்பதற்கு
கீழ்க்கண்ட நிகழ்வே சாட்சி.
வருடம் ஒரு
பிள்ளை என பெற்று மன மகிழ்வாக குடும்ப வாழ்க்கையை தொடங்கிய எனது நண்பர் 05
வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து அய்ரோப்பிய நாடு ஒன்றில் பணி
புரிகின்றார். இன்னும் வீடு திரும்பவில்லை. தனக்கு என ஊரில் ஒரு கட்டி விட்டார்.
ஆனால் அதன் கடனை இன்னும் அடைத்து முடித்தபாடில்லை.
மேற்கண்ட
நிகழ்வானது இந்த துயரத்தின் நேரடி ஊர் சாட்சியாகும். நமக்கு மட்டும்தான் இந்த
பிரச்சினை என நாம் முடிவு கட்டி விட இயலாது.
வெவ்வெறு தளங்களில்
நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வெளி நாட்டு பயண துயரம் இரண்டு திரைப்படங்கள் வழியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
2007 ஆம்
ஆண்டு வெளி வந்த “ அரபி கத “ என்ற மலையாள
திரைப்படம். இக்பால் குட்டிப்புரத்தின் எழுத்தில் லால் ஜோஸ் இயக்கியது.
சொந்த வீடு
கட்டுவதற்கான கனவுகளுடனும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை கட்டிக் கொடுப்பதற்கான
நினைவுகளுடனும் , கடன் சுமைகளுடனும் வாழும் சராசரி மனிதர் முதல் கொள்கை
பிடிப்புள்ள போராளிகளின் நீண்ட வரிசை.
இவர்களில்
துள்ளும் இளமையும் தளர்த்தும் நடுத்தர வயதையும் உடைய மனிதர்களும் உண்டு. இவர்களின்
வாழ்க்கையை பல விதங்களில் புரட்டிப்போடும் வெளி நாட்டு வாசம் பற்றிய காவியம் அது.
நகைச்சுவை ,
கண்ணீர் , துரோகம் , பிரிவுத்துயர் , மோசடி , தோழமை , சகோதரத்துவம் , மனித நேயம் ,
மதங்களையும் இஸங்களையும் மனிதர்கள் கையாளும் விதம் , தொழிலாளர் துயரம் ,தண்டனை என
150 நிமிடங்கள் முழுக்க பல் வேறு பட்ட
மனித உணர்வுகளும் நுண்ணரசியலும் செறிந்த வலுவான கதை.
அதே போல் Going
Away என்ற 43 நிமிடம் ஓடக்கூடிய திரைப்படமானது
இவ்வருடம் வெளி வர இருக்கின்றது.
இதனை இயக்கியவர் ஹேரி மக் ல்யூர் ( Harry Mac Lure ) என்ற ஆங்கிலோ இந்தியர்.
அந்த படத்தின்
கதை சுருக்கம் :
சென்னை பரங்கி
மலையில் ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பம் வசித்து வருகின்றது. அவர்கள் நிறைவான ,
மகிழ்வான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த குடும்பத்தில் உள்ள ஒரு
உறுப்பினருக்கு ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு வருகின்றது.
அது அந்த
குடும்பத்தின் அமைதியை எப்படி குலைக்கின்றது ? மாற்றத்தையும் பிரிவையும் அந்த
குடும்பம் எப்படி சமாளிக்கின்றது ? வெளி நாட்டு வாழ்க்கை உண்மையிலேயே பசுமையானதா ?
அதன் விளைவுகள் என்ன ?
இப் படத்தின்
கதை சுருக்கத்தை சொல்லி விட்டு மேலும் சில செய்திகளை THE HINDU நாளிதழின் செய்தியாளரோடு பகிர்கின்றார் ஹேரி மக் ல்யூர்:
“ இந்த படத்திலிருந்து ஆங்கிலோ இந்தியர் என்ற
சொல்லாடலை எடுத்து விட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் இது
பொருந்தும். இந்த கதையின் குவி மையம் ( Focus ) என்பது புலம் பெயர்தல் தொடர்பானதுதான்.
நல்லது கெட்டது என்பதற்கு
அப்பால் அனைத்து இந்தியர்களுக்கும் நான் சொல்வது இதுதான் , “ வீட்டையும் தாய்
நாட்டையும் போல் எதுவும் வராது. அங்குதான்
நீங்கள் முதல் தர குடிமகனாக இருக்க முடியும்..
நீங்கள் வெளி நாட்டிற்கு குடி
பெயர்வதற்கு முன் இந்தியாவில் வாழ்வதற்கே எல்லா முயற்சிகளையும் எடுங்கள். இன்று
இங்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
இங்கு கிடைக்கும் அனைத்து நலவுகளுடனும் ஒருவர் வசதியாகவும் முதல் தர
குடிமகனாகவும் வாழ முடியும் “
நாம் இன்று அனைத்து விதமான வசதிகளுடனும் குடும்பத்துடனும் வெளி நாட்டில்
வாழலாம். ஊரில் உள்ள நல்ல செயல்களில் பொருளாதார ரீதியாக பங்கெடுக்கவும் செய்யலாம்.
ஆனாலும் அந்த வாழ்க்கையில் நாம்
பிறந்த மண்ணுக்கு ஏதாவது ஒரு வகையில் அன்னியமாகித்தான் போகின்றோம். ஊருக்கு
விடுமுறையில் வரும் நாட்களில் ஒட்டாத விருந்தாளியைப் போல் வந்து விட்டு சென்று
விடுவோம்.
விடுமுறைக்காலத்தில் வீஸாவும் , வானூர்தி பயணச்சீட்டும் எப்போதும் கண்
முன் நிழலாடிக் கொண்டிருப்பதால் எந்த பொது வேலைகளிலும் முனைப்பாகவும்
முழுவதுமாகவும் ஈடுபட முடிவதில்லை.
வெளி நாட்டு வாழ்க்கையில் குடும்பத்துடன் இருப்பதாக கூறுபவர்கள் கூட மனைவி
மக்களுடன் மட்டும் தான் இருக்க முடியுமே தவிர குறைந்த பட்சம் பெற்றோருடனாவது வாழ
முடிகின்றதா ? இல்லை எனும் போது அது ஒரு அரை வாழ்வுதானே ?
உள் நாட்டில் உழைப்பிற்கு போதுமான ஊதியம் கிடைத்தும் மேலதிக வருவாய்க்காக
வெளி நாடு செல்வோரும் நம்மில் இல்லாமலில்லை.
இது ஒரு மனம் சார்ந்த வாழ்க்கை முறை பிரச்சினையும் கூட .
இந்தியாவில் நமது மண்ணையும் உரிமைகளையும் பறிப்பதற்கான தொடர் முயற்சிகள் திட்டமிட்டு
நடந்து கொண்டே இருக்கின்றன.
இதை தடுக்கவும் நமது சொந்த மண்ணில் நமக்கான ஒரு வாழ்வை உருவாக்கி
எடுக்கவும் திறமையான ஆட்களின் எண்ணிக்கை இல்லாமல் முடியுமா ?
வெளி நாட்டு வாழ்க்கையில் எண்ணற்ற
கேள்விகள் விடைகளுக்காக நம்மை நோக்கி நிற்கின்றன.
வாழ்க்கை என்பது குடும்ப நெருக்கடிகளாலும் போராட்டங்களாலும் மட்டும்
நிரம்பிய வறட்டுப் பயணமில்லை.
வாழ்க்கை என்பது அழகியலும் ரசனையும் நிரம்பி ததும்பும் ஒரு கோப்பை. அதை
அருந்தாத வரைக்கும் நாம் தாகித்தவர்கள்தான்.
வெண் மணல் கரையில்
விளையாட்டு குழந்தையின் குறும்பையும் சில அடி தொலைவில் தொட்டில் தாலாட்டையும் இன்னும்
சில அடி தொலைவில் தாயின் தாரத்தின் அணைப்பையும் மாறி மாறித்தரும் நமதூரின் கடல் அலைகளையும் மணற் பரப்பையும் எந்த
கப்பலிலாவது வெளி நாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியுமா ?
No comments:
Post a Comment