Wednesday, 29 January 2025

சங்கு சாமான் -- பத்திக் கதை

 


ஹூசைனுக்கு மாணிக்கக்கல் தரகுதான் தொழில்.அவன் வாப்பாவுக்கும் அதுதான் தொழில்.

அவனுக்கு கல் நோட்டம் பெரிதாக தெரியாது. வாப்பாவும் மகனும் தனித்தனியாக தொழில் பார்த்தாலும் அவ்வப்போது தரகிலும் நயம் விலைக்கு  வரும் கல்லை வாங்குவதிலும் பங்கு சேர்ந்துக் கொள்வர்.

Tuesday, 21 January 2025

அலைதலே நிலைத்தலுமாம் – சாளை பஷீரின் ‘கசபத்’ நாவலை முன்வைத்து - ஜார்ஜ் ஜோசப்

 காயல்பட்டினமும் அதன் கடற்கரை மணலும் வெப்பக் காற்றும் இரவின் குளிர்மையும் அங்கு வாழும் மக்களும் அவர்தம் சமய நம்பிக்கைகளும் அவர்களைப் பிணைக்கும் பள்ளிவாசல்களும் அவ்வப்போதைய பயணங்களும் வாசிப்பும் அபூவுக்குப் போதுமானதாக இருக்கின்றன. ஒவ்வொருவனும் சம்பாத்திய வாழ்வின் பின் ஓடித்தான் ஆக வேண்டுமாஎன் பூமி அதற்காகப் படைக்கப்பட்ட ஒன்றன்று என உறுதியாக இருக்கிறான்ஆனால் அப்பாவின் வியாபார வீழ்ச்சியும் சமூகத்தின் எள்ளல் பேச்சுகளும் அறிவுரைகளும் அவனைப் பொருளீட்டு எனத் துரத்துகின்றன. தான் அமர்ந்து வாசிக்கும் நூலகபடியையும், கடலின் நீலத்துடன் அமையாது பேசிக்கொண்டிருக்கும் அலைகளையும் விட்டு விரட்டப்படுகிறான் அபூ.

Thursday, 16 January 2025

ஒளியின் பட்டவர்த்தனங்களில் மறைந்திருக்கும் ரூபங்கள் - பெருநெஞ்சன் நூல் மதிப்புரை

 

சென்னை புத்தகக்காட்சி2025 ஐ முடித்து விட்டு ஊருக்கு வண்டியேறுவதற்காக உறவினர் இடத்தில் காத்திருந்தேன். அங்கு என்னை உபசரித்து உரையாடிக்கொண்டிருந்த விசைப்பொறிஞர், தன்னுடைய குடும்ப துயரங்களைப்பற்றி விவரித்து விட்டு நிறைவில் கண்ணீர் முட்டியவாறு இவ்வாறு சொன்னார்: “இறைவன் உன்னை நேசிக்கிறான். உன்னோடு நெருக்கமாக இருக்கிறான். அதனால்தான் உனக்கு இவ்வளவு சோதனைகள் என  எனது துயரங்களுக்கு ஆறுதல் சொல்லி என்னைத்தேற்றுகிறார்கள். இறைவன் நெருக்கமாக இருந்தால் மகிழ்ச்சியை அல்லவா நான் உணர வேண்டும்? ஆனால் மாற்றமாக அல்லவா நடக்கிறது?. எனவே இறைவன் சற்று தொலைவிலிருந்தால் நல்லதோ என எனக்குத் தோன்றுகிறது”.

அவருக்கு சொல்லப்படும் ஆழ்ந்த ஆறுதல் எதுவும் அவரை இன்னும் கீழே தள்ளிடுமோ என்ற அச்சமிருந்ததால் எளிய  ஆறுதலை மட்டும் கைமாறி விட்டு  ஜார்ஜ் ஜோசப்பின் பெரு நெஞ்சன் சிறுகதை தொகுப்போடு ஊருக்கு வண்டியேறினேன்.

Friday, 13 December 2024

மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

திருநெல்வேலி மாவட்டத்தை மூன்றாக வகிர்ந்த பிறகும் இன்னும் திருநெல்வேலி மாவட்டக்காரராகவே நீடிப்பவர் ஏர்வாடி காஜா காதர்மீறான் பந்தே நவாஸ்.

வருவாய் நிர்வாக அடிப்படையில் நான் தூத்துக்குடி மாவட்டத்துக்காரன் என்றாலும் பிறந்ததோ பிரிக்கப்படாத அகன்றத் தாம்பாள திருநெல்வேலிச் சீமையில்தான். நிர்வாகப்பிரிவினைக்கு அப்பால் உணர்வாலும் நிலத்தாலும் தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்துக்காரர்கள் நெல்லையான்கள்தான்.

Wednesday, 4 December 2024

மலைக்கடவை - செங்கோட்டை புனலூர் தொடர்வண்டித்தடப்பயணம்

 சென்று திரும்பிய தொலைவு:370 கிலோ மீட்டர்கள்.

காலம்: 17 மணி நேரம்

செலவு 2080/=₹

ஊர்தி: ஆட்டோ,தொடர்வண்டி,பேருந்து

ஆட்கள்:02

ஒரு பயணத்தை இப்படி எண்களாக குறுக்கவியலாததுதான். மாறுபட்ட சுவைக்காக இப்படியொரு பகிர்தல்.

Thursday, 28 November 2024

ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி - 3

 காலி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய தலையாய இடங்களில் இலங்கையின் புகழ் வாய்ந்த தலையாய சிங்கள எழுத்தாளர்களில் ஒருவரான மாடின் விக்கிரமசிங்கே (1890-1976)வின் வீடும், அதையொட்டிய அவரின் நினைவு / நாட்டாரியல் அருங்காட்சியகமும் ஒன்று என சிராஜ் மஷ்ஹூர் சொன்னார்.

மாடின் விக்கிரமசிங்கே

Wednesday, 27 November 2024

திருவிதாங்கூர் -- தென்னெல்லை

தனக்கானதை மீட்ட பெருமித உணர்வாக தமிழ் நாட்டிற்கும் தனது பறிக்கப்பட்டக் கரமாகக் கேரளத்திற்கும் ஒரே சமயத்தில் தோன்றும் நிலப்பரப்பு குமரி மாவட்டம்.

அய்ந்திணைகளில் பாலையைத் தவிர்த்து நான்கு திணைகளையும் தன்னுள் கொண்டுள்ள நிலம். சென்ற காலத்தில் மொழிப்பிரிவு,சாதிப் பிளவு,மன்னராட்சிக் கொடுமை என வேறுபட்ட சுடு திரவக்கலவை கொண்ட நிலம். தமிழ்நாட்டு, கேரள முஸ்லிம்களுக்கு அவர்களுடைய பண்பாட்டு இணைப்பின் முந்நீர்க்கபாடம் அமைந்துள்ள மண்.