Saturday, 18 October 2025

அன்றாடங்களின் கண்டடைதல்கள் --- 2

 காஞ்சங்காட்டிலிருந்து புறப்பட்டுக் கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்றில் இரவு தங்கல். அதன் ஆய்வு மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலும் நடந்தது. கோழிக்கோட்டின் அலைச்சலும் அயர்வும் மிக்க மறு நாள் பகலுக்குப்பிறகுக் கிட்டிய ஓய்வென்பது கோட்டயத்திற்கான தொடர்வண்டியில் ஏறிய பிறகுதான்.

Tuesday, 14 October 2025

அன்றாடங்களில் கண்டடைதல்கள் --- 1

காலை உடற்பயிற்சி நேரங்களில் துணைக்கு இருக்கும் வானொலியில் ஒலித்த அந்நேர்காணலும் அப்பெயருமே இப்பயணச்சரட்டின் தலையாகியது.

கேரளம் காசர்கோடு மாவட்டம்  காஞ்சங்காட்டின் உலகம் காண் மனிதராகிய சி.முஹம்மது குஞ்ஞுக்கா தனது வானொலி நேர்காணலில் சொன்ன வரிகள்தான் எங்களை அவரது வீடு வரை இழுத்துச் சென்றது.

“நான் இதுகாறும்  நாற்பது நாடுகள் வரை பயணித்திருக்கிறேன். இரஷியா,ஸ்பெயின் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளுக்கு போக வேண்டும். எனக்கு கொஞ்சம் நிலங்களுண்டு. அவற்றை விற்று விட்டுச் செல்வேன்.”


Thursday, 9 October 2025

முப்பத்தியோரு ஆண்டுகளுக்குப் பிறகு

 

னக்கு திருமணத்தில் அணிவிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை ஒரு மாதத்திற்குள்ளேயே வெளியூர் பயணம் ஒன்றில் சில கனவான்களிடம் பறி கொடுக்க நேர்ந்தது.

Wednesday, 3 September 2025

ரிஹ்லா சிறுவாணி தங்கலுக்கு அப்பால் …..


 
ரிஹ்லா சிறுவாணி தங்கலின் ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில் நானும் உவைஸும் ஒரு நாள் முன்னதாகவே நிகழ்விடமான சத் தர்ஷன் அமைந்திருக்கும் அட்டப்பாடியின் கோட்டத்தராப் பகுதிக்கு சென்று விட்டோம். ஒரு நாள் முழுவதுமாக கையிலிருப்பதால் அதைத் தொல்குடி பகுதிகளை பார்வையிடுவதில் செலவிடலாம் எனத் தீர்மானம்.

Wednesday, 6 August 2025

நிலத்து மழை

 “குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள்  நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள்.

Monday, 4 August 2025

நாட்டார் வரலாறு (ஒருநாள் பயிலரங்கு) கோட்டாறு

இறையருளால் நாட்டாரியல் வரலாறு ஒரு நாள் பயிலரங்கு கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவில் கோட்டாறில் சிறப்பாக நடந்தேறியது.இரு வருட கால கனவும் இரண்டு மாத கால உழைப்பும் கனியாயிற்று.