Thursday, 9 October 2025

முப்பத்தியோரு ஆண்டுகளுக்குப் பிறகு

 

னக்கு திருமணத்தில் அணிவிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை ஒரு மாதத்திற்குள்ளேயே வெளியூர் பயணம் ஒன்றில் சில கனவான்களிடம் பறி கொடுக்க நேர்ந்தது.
அதன் பிறகு மோதிரம் அணியும் எண்ணமே எழவில்லை. ஆனாலும் அந்த மணமோதிரத்தின் நினைவு மனத்தை விட்டு இன்னும் நீங்கவில்லை.
நீண்ட குறுகிய கட்டங்களைக் கொண்ட மனித வாழ்வில் சில காலகட்டங்கள் தலையாயன. மறக்க இயலாதவை வாழ்வில் பெரும் பங்கு ஆற்றி இருப்பவை.
போன காலத்தையும் விட்ட மூச்சையும் யார் தான் பிடித்து வைக்க முடியும்? ஆனாலும் அவற்றின் எச்சங்கள் சில தூலமாக எஞ்சத்தான் செய்கின்றன.
அதில் ஒன்றுதான் இப்போது என் விரலில் மோதிரமாக உள்ளது.
கடந்து போனவற்றை இப்படி தூலமாக பிடித்து வைக்கத்தான் வேண்டுமா? சில நினைவுகள் ஆறி அளந்து போக வேண்டியவை. சிலதோ மோதிரத்தில் அமர்ந்திருக்கும் கல்லை போல சிலைக்க வேண்டியவை.
இப்பதிவை இடும் சமயம் வைக்கம் முஹம்மது பஷீரின் 'தங்க மோதிரம் 'சிறுகதை வானொலியில் குறு நாடகமாக ஒலிபரப்பாகியது ஓர் அதிசய ஒற்றுமை நிகழ்வு.
நினைவுகள் கல்லாவதும் வெள்ளிக்குள் கல் உறைவதும் வெள்ளி தங்கமாவதும் இப்படித்தான்.

No comments:

Post a Comment