Wednesday, 11 February 2026

கசபத் – அகவய முரண்பாட்டின் ஆழமும் அகலமும்

புதுதில்லியில் வேதியியல் பொறியாளராகப் பணியாற்றும் முஹம்மது அபூபக்ர் செய்யது இஸ்மாயீல் கசபத் நாவல் குறித்து எழுதிய ஆங்கில மதிப்புரையும் அதன் தமிழாக்கமும்.(தமிழில்:ஆசிர் முஹம்மது)


என் இதயத்தில் தனியிடத்தைப் பெற்றுவிட்டது கஸபத். நான் தமிழிலக்கியத்தின் தீவிர வாசகன் இல்லையென்றாலும் கூட, இந்நாவல் தங்களது உள்ளீடான குழந்தைமையை தொலைத்துவிடாதிருப்பதற்கான (குறிப்பாக பதின்பருவத்தினரது) போராட்டத்தை மிகவும் ஆழமாக எதிரொலித்திருக்கிறது. அகத்துள் ததும்பும் குதூகலத்தையும், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ, தனியாள்வாத, சடவாத உலகில் மெய்யான ‘மானுடனாக’ திகழ்வதற்கான நமது ஆதி விருப்பத்தை இந்நாவல் மிகவும் கச்சிதமாக படம்பிடித்துக்காட்டியிருக்கிறது.

பஷீர் காக்காவின் கைவண்ணத்தில் மலர்ந்த காயல்பட்டினத்தைக் குறித்த நுணுக்கமான சித்தரிப்புகளும் அதனது தனித்தன்மையில் ஆழமாக வேர்கொண்டிருக்கும் படிமங்களும் என்னை முற்றிலுமாக வசீகரித்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். “கதைக்குள் கதை” என பின்னப்பட்ட கட்டமைப்பும், ரத்தமும் சதையுமாக வடிக்கப்பட்ட உணர்வுகளும், நக்கலும் குசும்புமாக கெக்கலிப்போடும் எழுத்துநடையும், அசல் காயல்பட்டின சுவையும் மணமும் கமழும் மொழிவழக்கும் ஒட்டுமொத்த வாசிப்பு பட்டறிவையும் ஆற அமர இரசித்துச் சுவைக்கக்கூடிய ஒன்றாக மாற்றிவிட்டன.

“பார்ட்ஸ் போகாம விடுதல இல்ல” என்பன போன்ற வரிகள் முதலில் நம்மை குலுங்கிச் சிரிக்க வைத்தாலும், சற்று நேரத்திற்குப் பின்னர் அது பணத்திற்காக தனது ஆன்மாவை விற்கவேண்டி நேரக்கூடிய அகவய முரண்பாட்டின் உச்சத்தை ஆழமாக உணர்த்தும் வரிகளாக அவை மாறிவிடுகின்றன.

இப்புதினத்தின் கருத்துருக்கள் அகவயமானவையாக, ஒருவரது உலகப்பார்வையின் அடிப்படையிலானவையாக ஒருவருக்கு தெரியலாம். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வகையான நழுவல் வாதத்திற்கு இந்நாவலின் மையக்கதாபாத்திரம் மெய்யுரு தரும்பொழுது. ஆனாலும், மெய்யான ”வாழ்ந்திருத்தலுக்கான” சுதந்திரம் என்பது அடகுவைக்கப்படும்பொழுது நேரும் அவஸ்தைகளுக்கு இந்நாவல் உண்மையாக இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இந்த வாழ்க்கையின் ஒரு சிறுதுண்டு என்னுள் எழுப்பிய – அவற்றிற்கு என்னிடம் தீர்க்கமான விடைகள் இல்லாத – கேள்விகளை இன்னும் அசைபோட்டுக்கொண்டே தான் இந்த மதிப்புரையையும் நான் நிறைவு செய்கிறேன்.

 -------------------------- 

Kasabath has earned a special place in my heart. Even though I am not an ardent reader of Tamil literature, the novel deeply reflected the inner struggles of those (especially teenagers) who resist the "murder" of their inner child. It captures the fight to maintain one’s exuberance and the primordial inclination to remain truly "human" in this capitalistic, individualistic, and material world.

 ​I thoroughly enjoyed Basheer kaka's use of rooted metaphors and the incredibly nuanced imagery of Kayalpattinam. The "story within a story" structure, emotions that are true in spirit, the witty writing (nakkal and kusumbu), and the authentic Kayalpattinam slang made the entire reading experience something to savour.

Lines like "Parts pogaama viduthala illa" (No freedom until the parts give out), though they earned a quick giggle at first, actually reflect the peak internal struggle of an individual resisting the societal obligation to sell their soul for money.

The concepts in this book may be subjective, depending on one's worldview. Especially the parts where there's an underlying escapism the main character embodies, It stands true to the dilemma of a rebellious teen who's freedom to truly be "alive" is at stake.

I conclude this review still pondering the questions this slice of life story raised, for which I have no easy answers.


கசபத் வாங்கிட

 

No comments:

Post a Comment