Thursday, 23 April 2020

ரமழான் கூட்டாஞ்சோறு








24/04/2020 வெள்ளிக்கிழமை  புனித ரமழான் தலை நோன்பு.
எனது 52 வருட வாழ்க்கையில் ஐவேளை கூட்டுத்தொழுகை, ஜுமுஆத்தொழுகை,  கூட்டு  இஃப்தார், கூட்டு தராவீஹ், நல்லுரைகள்  என எதுவும் இல்லாத முதல் ரமழான்.
நிறை மதி நாளில் முழு இருளைப்பார்ப்பது போலிருக்கின்றது

Wednesday, 22 April 2020

வட கிழக்கு இந்தியா -- அஸ்ஸாம் , அக்டோபர் 2017





பெருமழக்காலம் -- அனலுக்கும் குளிர்மைக்கும் இடையே நழுவும் நதி







பஸ் ஸ்டாண்டில் கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருக்கும் கிழவியிடம் தகராறு பண்ணிக்கொண்டிருக்கின்றான் ஒரு இளைஞன். வாய் சொல் முற்றவே அவன் அந்த கிழவியை பார்த்து மிரட்டுகின்றான் .

Thursday, 16 April 2020

காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு...!







காயல்பட்டினத்திற்கும் கேரள மாநிலத்தின் கண்ணூர், தலஸ்ஸேரி, கோழிக்கோடு தெக்கேபுரத்தில் உள்ள குட்டிச்சிறா போன்ற பகுதிகளுக்கும் நிறைய வாழ்வியல் ஒற்றுமைகள் உண்டு என ஒரு உரையாடலின் போது கூறினார் எழுத்தாள நண்பர் அப்துல் ஹமீத். கோழிக்கோடு செல்லும் திட்டம் உடனே மனதில் முளைத்து விட்டது.

குஞ்ஞாலி மரக்காயர்களுக்கு எந்த ஊர்?






எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பழுப்பு நிறத் தலைப்பாகையும் வெள்ளங்கியும் நீண்ட தாடியும் கொண்ட ஒரு பெரியவர் வருடத்திற்கு ஒரு தடவை என் வீட்டிற்கு வந்து ஒரு நாள் தங்கி இருப்பார்.

Wednesday, 15 April 2020

வேர்களுக்குமீள்தல் – கொச்சி, காயல்பட்டினம்


வழக்கறிஞரும் நண்பருமாகிய அஹ்மத் ஸாஹிப் வழியாக திருநெல்வேலியிலிருந்து இர்ஷாத் சேட் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சேட் கொச்சியில் பிறந்தவர். அவரது முன்னோர்கள் குஜராத்தின் கட்ச்சை சேர்ந்தவர்கள். வணிகத்தின் நிமித்தம் கொச்சியில் குடியேறியவர்கள்.

கொச்சியிலுள்ள இர்ஷாத் சேட்டின் சிறுபருவ கால நண்பர்களுக்கு காயல்பட்டினத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவா. காரணம், அவர்கள் நெய்னார் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வேர்கள் காயல்பட்டினத்திலிருந்துதான் புறப்பட்டுள்ளதாம்.

உதகமண்டலம் -- பேரார், பழங்குடியினர் அருங்காட்சியகம் , மலை ரயில்

24--26/10/2016

Tuesday, 14 April 2020

கொரோனாவை மிஞ்சிய தன்னலம்


சென்னையில் கொரோனாவால் இறந்து போன மருத்துவரின் உடலை எரியூட்ட மக்கள் எதிர்ப்பு. மயானக்காவலாளி, மருத்துவமனை ஊழியர்கள் சடலத்தை போட்டு விட்டு  ஓட்டம்

ஹைதராபாத், சாலார் ஜங் அருங்காட்சியகம்

05/04/2014

Thursday, 9 April 2020

பேத்தியின் முதலாவது கொழுக்கட்டைப் பேழை






கொலக்கட்டை மலகட்ட சுட்டுத்தாங்கோ........

-----------




கொரோனா பீதி & இழப்புக்கள் , அரசின் கோமாளித்தனங்களும் கொடூரமுமாக நகர்ந்து கொண்டிருக்கும் பெருந்தொற்றுக் காலத்தில் மலையிடை ஒழுகும் நீரோடை போல   வாழ்க்கை இந்த சிறு  துளிகளில்  உயிர்த்துக் கொண்டேயிருக்கின்றது.

Wednesday, 8 April 2020

மாஞ்சோலை, குற்றாலம், குண்டாறு அணை, வி அய் பி அருவி கேரளம்

30,31/07/2014

பார்கவி நிலையம் --- #பெருந்தொற்றுக்காலத்திரைப்படம்






1952 ஆம் ஆண்டு வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய ‘ நீல வெளிச்சம் சிறுகதையிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டு  1964 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமாக வெளிவந்தது ‘ பார்கவி நிலையம் ‘.

Tuesday, 7 April 2020

#பெருந்தொற்றுக்காலஅவதானங்கள் --- மறக்க முடியாதவர்கள்


கோவிட்19  நோய்க்காளானோரை கண்டுபிடித்து சிகிச்சையளித்து மீட்கும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுத்துறை பணியாளர்களைக்கொண்ட அரசு மருத்துவமனைகள். இந்த உயிர் காக்கும் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தி வரும் முதல்வர் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் விஜய பாஸ்கர்...

டி.எம்.கிருஷ்ணாவுடன்......

02/01/2015 சென்னை



Saturday, 4 April 2020

பத்ம நாபபுரம் அரண்மனை , முட்டம் கடற்கரை

29/11/2016 , ஒளிப்படங்கள்:  சுபுஹான் பீர் முஹம்மத் (சுபீ) & சாளை பஷீர்