Thursday, 23 April 2020

ரமழான் கூட்டாஞ்சோறு








24/04/2020 வெள்ளிக்கிழமை  புனித ரமழான் தலை நோன்பு.
எனது 52 வருட வாழ்க்கையில் ஐவேளை கூட்டுத்தொழுகை, ஜுமுஆத்தொழுகை,  கூட்டு  இஃப்தார், கூட்டு தராவீஹ், நல்லுரைகள்  என எதுவும் இல்லாத முதல் ரமழான்.
நிறை மதி நாளில் முழு இருளைப்பார்ப்பது போலிருக்கின்றது

.
காரிருளில் தனது பொட்டுக்கீற்றால் சிறு குழந்தையின் கன்னத்து மினுக்காய்,  இருளை சற்றே எட்ட நிற்கச்சொல்லும்  தாரகையின் கிரணங்களைப்போல   நாற்பத்தி நான்கு வருடங்களுக்குப்பிறகு எனக்கும் என் பிள்ளைகளுக்குமாகவும் நான் பொங்கிய கூட்டாஞ்சோற்றால் வெண் அமுதின் பொலிவால் கரோனாவின் இருளைப்பார்த்து  சற்றே எட்டவே நில்லும் எனச்சொன்ன வேளை.
என் பிள்ளைகளுக்காகவும் மட்டுமில்லை , எட்டு வயதில் என்னைச்சூழ இருந்து  தற்சமயம் விடை பெற்றிருக்கும் என் உம்மா , வாப்பா, அப்பா, கண்ணும்மா, மாமா , பெருமா, சாச்சி, , இரு சகோதரிகளுக்காகவும் இப்போதும் இருக்கும் தோழிக்காகவும்  என அனைவருக்காகவும் இந்த கூட்டமுது.















No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka