Tuesday 7 April 2020

#பெருந்தொற்றுக்காலஅவதானங்கள் --- மறக்க முடியாதவர்கள்


கோவிட்19  நோய்க்காளானோரை கண்டுபிடித்து சிகிச்சையளித்து மீட்கும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுத்துறை பணியாளர்களைக்கொண்ட அரசு மருத்துவமனைகள். இந்த உயிர் காக்கும் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தி வரும் முதல்வர் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் விஜய பாஸ்கர்...


உள் , வெளி நாட்டில் அகப்பட்டோரை மீட்பதில் பொதுத்துறை ஏர் இந்தியா வானூர்தி நிறுவனம்



அஞ்சல்கள் வருகின்றதோ இல்லையோ சேமிப்பு வங்கியிலிருந்து பொதுமக்கள் செலவுக்கு பணமெடுக்க தோதுவாக திறந்திருக்கும் அஞ்சலகங்கள்



ஓய்வின்றி உணவுப்பொருட்களையும் உதவித்தொகையையும்  வழங்கும் பொது விநியோக கடைக்காரர்கள்



பெருந்தொற்றுக்கால சுகாதார விதிகளையும் அரசின் அறிவிப்புக்களையும்  மக்களுக்கு இடைவிடாமல் நினைவூட்டிக் கொண்டேயிருக்கும் அகில இந்திய வானொலி & தூர்தர்ஷன் நிலையங்கள்



ஊரே அடங்கி கிடக்கும்போது  அச்சமின்றி பால், காய்கறி, மளிகைப்பொருட்கள் , சமையல் வாயு , மருந்து, செய்தித்தாள்- கொண்டு சேர்க்கும் கடை நிலை  விநியோகிப்பாளர்கள்



இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இயக்கும் அரசின் வருவாய் நிர்வாக பணியாளர்கள்



பெருந்தொற்றுக்கால நிவாரண நிதியத்திற்கு அள்ளிக்கொடுத்த  நிறுவன& தனியாள் கொடையாளர்கள்



பசி நீக்கி அன்னமிட்டு வரும் தொண்டு அமைப்பினர்கள், தன்னார்வலர்கள்



கொரோனாவை மதம் மாற்றியதை கண்டித்து வரும் நீதியாளர்கள்





பெருந்தொற்றுக்கால  எச்சரிக்கைகளையும் தீர்வுகளையும் வழங்கி வரும் ஊடகவியலாளர்கள், சிந்தனையாளர்கள், மருத்துவர்கள்




மனத்தை கற்பனை தோரணங்களால் அலங்கரித்து வரும் கதை சொல்லிகள்.                         
இந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கும் பொதுத்துறையினருக்கும் நீதவான்களுக்கும்   தமிழ் நாடு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது.


 --------------------


நன்றிக்குரியவர்களை நினைக்கும் இந்த பேரிடர் காலத்தில் துரோகமிழைத்தவர்களையும் நினைத்துப்பார்க்க வேண்டுமே!!!



கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையளித்தால் தங்கள் மருத்துவமனைக்கு ஆட்கள் வரமாட்டார்கள் என்றஞ்சிய தனியார் மருத்துவமனைகள்



பேரிடர் கால மக்கள் நிவாரணத்திற்கு மூக்குப்பீ போல பிய்த்து போட்ட,   நீர் நிலம் வான் என எங்கு துளி வாய்ப்பு கிடைத்தாலும் அடித்து வாய்க்குள் சுருட்டி விழுங்கி வரும் அம்பானி அதானி உள்ளிட்ட பெரு  நிறுவன  கார்ப்பரேட் முதலைகள்



ஜிஎஸ்டி, வருமான வரி விதிப்பின்  வாயிலாக மக்களிடம் அடித்து பிடுங்கி கொண்டே  மாநிலங்கள் கெஞ்சி கெஞ்சி கேட்ட பிறகும் கொட்டடி, விளக்கைப்பிடி என்ற கொடூர பகடிகளை செய்வதோடு  ஏதிலியர்களுக்கு விட்டெறிவது போல கிள்ளி எறியும் நடுவணரசு



குடிமக்களை அடித்துக்கொல்லும் காவல்துறை



கொரோனா பெருந்தொற்றுக்கு சுன்னத் விட்டு முஸ்லிமாக்கிய சங்கிகள் அதை அப்படியே கக்கிய தமிழ்நாட்டரசின் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தந்தி , பாலிமர் உள்ளிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், தினமலர், தினமணி ,தி இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்கள்…….



இவர்களுக்கும் நன்றிகளை பிச்சை போடத்தான் வேண்டும். காரணம் மனிதத்துவத்திற்கு எதிராண அணியில் தங்களின் இருப்பை அவர்கள் மீண்டும் நிரூபித்தமைக்கு…….





No comments:

Post a Comment