Wednesday, 22 April 2020

பெருமழக்காலம் -- அனலுக்கும் குளிர்மைக்கும் இடையே நழுவும் நதி







பஸ் ஸ்டாண்டில் கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருக்கும் கிழவியிடம் தகராறு பண்ணிக்கொண்டிருக்கின்றான் ஒரு இளைஞன். வாய் சொல் முற்றவே அவன் அந்த கிழவியை பார்த்து மிரட்டுகின்றான் .




“. ஓன் அப்பன கொன்னவனேயே ஏன்னு கேட்க துப்பில்லாத நீ என்ன மெரட்டுறியாக்கும்என அவனைப்பார்த்து இளக்காரமாக கேட்கிறாள் கிழவி.


கிழவியின் சொற்களில் தோய்ந்திருந்த சீண்டல் அந்த இளைஞனுக்குள் புகுந்து விட்டது. பத்து வருடத்திற்கு முன்னர் நடந்து முடிந்து அறவே மறந்து போன அந்த நிகழ்விற்குள் பழிவாங்கும் வெறியானது நெருப்பு போல பற்றிக்கொண்டது.


பாளை அரிவாளை எடுத்தான்அந்த இளைஞன் . தன் தகப்பனை கொன்றவனை ஊரெங்கும் தேடினான். கடைசியாக ஒரு துணிக்கடைக்குள் அவனைக் கண்டான். கறுப்பு கோடு போல விசிறி இறங்கிய அரிவாளின் வீச்சில் கடையின் ஷோ கேஸ் கண்ணாடியின் மீது மோதி தலை உருண்டது.
தென் மாவட்டம் ஒன்றில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மை நிகழ்வு இது.


காலத்தின் தூசியாய் மனங்களுக்குள் படிந்து கிடக்கும் நிகழ்வுகள் ஒரு சில சொற்களின் தீண்டல்களில் கரித்துப்போடும் தீக்குழம்பாய் மாறுவது போலவே இழப்பின் சுட்டெரிக்கும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் பனி நிறைந்த ஏரி போல உறைந்து போகும் அபூர்வ கணங்களும் மனித வாழ்வில் நிகழத்தான் செய்கின்றன.


அத்தகைய ஒரு மகத்தான தருணத்தின் வழியாக உயிர்த்தெழும் வாழ்வுகளின் மலையாள திரைப்பதிவுதான் பெருமழக்காலம் ( பெரு மழைக்காலம் ).


மம்முக்கோயா , ஸலீம் குமார் , மீரா ஜாஸ்மின் , காவ்யா மாதவன் , திலீப் உள்ளிட்டோரின் நடிப்பில்  2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கமாலுத்தீன் முஹம்மத் மஜீத் இயக்கியுள்ளார்.


இப்படம் 2005 ஆம் ஆண்டிற்கான  சமூக பிரச்சினைகளுக்கான சிறந்த படம் என்ற பிரிவின் கீழ் தேசிய விருதும் பெற்றுள்ளது. இதில் நடித்துள்ள காவ்யா மாதவனும் சிறந்த நடிகைகளுக்கான கேரள அரசின் விருதை 2005 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.


இனி கதைக்குள் வருவோம்.


ரஜியாவின் கணவன் அக்பர். வளைகுடாவில் பணிபுரிந்து வருகின்றார்.
அங்கு. ரகு ராம அய்யரும் ஜான் குருவிலாவும் அக்பரின் நண்பர்களாகின்றனர். அங்கு அவர்களுடன் பணி புரியும் ஹனீஃபா என்றொரு இந்தியருக்கு அவசர தேவைக்காக கடன் கொடுக்கின்றான் அக்பர்.


அவசர தேவை என்ற பெயரில் ஹனீஃபா செய்த மோசடியை அறிய வரும் அக்பர் அவனுடன் சண்டை போட்டு தாக்க முயலுகின்றான். அப்போது எதிர்பாராத விதமாக ரகுராம அய்யர் மீது அந்த தாக்குதல் விழ அய்யர் இறந்து விடுகின்றான்.


சிறையில் அடைக்கப்படும் அக்பர் மீதான குற்றம் விசாரிக்கப்பட்டு வளைகுடா நாட்டின் ஷரீஅத் குற்றவியல் சட்டத்தின் படி அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.


மரண தண்டனை செய்தி ஊர் முழுக்க மெல்ல கசிந்து பரவி அவனது வீட்டிற்கும் வந்து சேருகின்றது. கணவனின் ஊர் திரும்புதலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள் ரஜியா. தன் வாழ்வு பற்றிய இனிய கனவுகளில் திளைத்திருக்கும் அவளை கலைத்து போடுகின்றது இந்த செய்தி.


வாழ்தலுக்கும் இறப்பதற்கும் இடையே ஊடாடும் இயல்பான அசைவுகளிலிருந்து எழும் மெல்லிய அதிர்வுகளின் தாக்கத்தை கூட எதிர் கொள்ள இயலாமல் பல மனிதர்கள்  வாழ்வின் ஓரத்தில் ஒதுங்கி விடுகின்றனர்.


பெரும் மலைக்குன்றுகளுக்கு நடுவே சுழித்தோடும் ஒற்றையடிப்பாதை போல மனித வாழ்வின் பொங்கும் உணர்வுகளுக்கும் இழப்புகளுக்கும் நடுவே ஓடும் தாரை

No comments:

Post a Comment