Tuesday, 31 March 2020
Friday, 27 March 2020
burnt by the sun-- குட்டிகளைத்தின்னும் பூனை
BURNT BY THE SUN -- நிகிதா மிஹல்கோவால் இயக்கப்பட்டு 1994 ஆம் ஆண்டு வெளி வந்த ரஷ்ய மொழித் திரைப்படம்.
மக்கள் நலனுக்கான அரசிற்காக தன்னை பணயம் வைத்து போராடிய படையின் முன்னணியாளனையே கொன்று உண்ணும் அரசு.
அது எந்த சித்தாந்தம், கோட்பாடு, மதமாகயிருந்தாலும் சரியே, இவற்றின் பெயரால் முற்றதிகாரத்தை மக்கள் மேல் நாட்டிடும் இரும்புக்கர ஆட்சியாளர்களின் அடங்காத அதிகாரப் பெரும்பசிக்கு முடிவில் அவ்வரசை ஆதரித்த சொந்த மக்கள்தான் இறுதியுணவாக அமைவர்.
ஆளும் ஃபாஸிஸ அரசிற்கு கண்ணை மூடிக்கொண்டு 'இது நம்ம அரசு' என வாக்களித்து அதிகார கடிவாளத்தை ஒப்புக் கொடுத்த மௌனப்பெரும்பான்மை இந்தியர்களுக்கு இப்படம் படையல்
Thursday, 26 March 2020
Most Dangerous Ways To School | BOLIVIA
பிஞ்சாக
இருப்பதும் அந்தர
விளிம்பில் நடப்பதும் ஒன்றல்ல.
எந்நேரமும்
இறப்பைக்கோரும் பாதாள உயரத்தில் வாழ்க்கை தன் அரும்புகளை சுமக்கத்தான் செய்கின்றது மண்ணறைக்காட்டில் பூத்துக்குலுங்கும் மலர்களைப்போல.......
Sunday, 22 March 2020
Thursday, 19 March 2020
Wednesday, 18 March 2020
Sunday, 15 March 2020
Saturday, 14 March 2020
பகுத்தறிவு பகடி
நேற்றிரவு
எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரொருவர், மானுடத்தின் மீது பேரன்பு கொண்ட மத நம்பிக்கையற்றவர்,
ஒரு காணொளியை வட்ஸப்பில் அனுப்பியிருந்தார்.
அது அண்டை மாநிலத்து பகுத்தறிவு வாத தோழரின் உரை.
அதில் பேசுபவர்,
கொரோனா வைரஸ் பாதிப்பை இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றி நீதமான சில கேள்விகள் கேட்பதுடன் எள்ளவும் செய்கின்றார்.
நான் முழு காணொளியையும் பார்த்தேன். சுவாரசியமாக இருந்தது. மதங்களை குருட்டுத்தனமாக
பின்பற்றுபவர்கள் இது போன்ற எதிர் கேள்விகளுக்கு முகங்கொடுத்துதான் ஆக வேண்டும்.
LIAR'S DICE -- திரைப்படம்
பொய்யனின் பகடை
1980களின்
இறுதியில் பிழைப்புக்காக நான் முதன் முறையாக சென்னைக்குள் எறியப்பட்டபோது அது ஏற்படுத்திய
கொந்தளிப்புகளின் தகிப்பு இன்னும் தடமழியாமல் என்னுள் உறைந்து கிடக்கின்றது.
இது நடந்து
முப்பத்தியோரு வருடங்கள் உருண்டு விட்டன .இன்றும் புதுதில்லி போன்ற மாநகரங்களுக்கு
தொழில் நிமித்தமாக செல்லும்போது அந்த முப்பதாண்டு பழைமையான மனத்தவிப்பு பழைய கருக்கு மாறாமல் தலைக்குள் கொப்பளித்தெழுகின்றது. இத்தனைக்கும் எனக்கு
நான்தான் முதலாளி. அத்துடன் எனது பயண நாட்களும் மிகக் குறுகியவை.
Thursday, 12 March 2020
Monday, 2 March 2020
மலையாளத்திரைப்படம் குஞ்சு தெய்வம்- பொருளவிழ்ந்து போகும் பிரம்மாண்டங்கள்
ஜியோ பேபி எழுதி இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளிவந்த
மலையாளத் திரைப்படம்.
கல்விக்கூடங்கள் தேவாலயங்கள் போதகர்கள் மதங்கள் மனிதர்களின்
கல் மனச்சிறை ஆகியவற்றிலிருந்து தெய்வத்தையும் மானுடத்தையும் தன் தளிர் மனதாலும் தீரா
நம்பிக்கையாலும் அன்பாலும் விடுவித்து அகன்ற பரப்பிற்கு அழைத்துச்செல்லும் சிறுவனின்
கதை.
Subscribe to:
Posts (Atom)