Sunday 22 March 2020

ஜனதா ஊரடங்கும் தயிர்வடை தளபதியும்







மூடர் தலைவர், அதிகாலையிலேயே குளித்து முழுகி கதராடையணிந்து தன் வரவேற்பறையில் வரையப்பட்டிருந்த கிருமி படத்திற்கு பூவிட்டு பூஜித்துக் கொண்டிருந்தார்.


ஏற்கனவே அவர் உத்தரவிட்டபடி  அவருடைய அலுவல் இல்லத்தின் முற்றத்தில் 36  எல் இ டி திரை தொலைக்காட்சிப்பேழைகள் வைக்கப்பட்டிருந்தன.



உள்துறை செயலர் மூலமாக அனைத்து மாநிலங்களினதும் நடுவணாட்சி பிராந்தியங்களினதும் காவல்துறை தலைவர்களுக்கு முன்னமேயே உத்தரவு பறந்திருந்தது.



36 தொலைக்காட்சி திரைகளில் பலவற்றில்  சாலைகள் மின்னிக் கொண்டிருந்தன. சில குளியலறைகளையும் கழிப்பறைகளையும் படுக்கையறைகளையும் காட்டிக் கொண்டிருந்தன.



சுழல் நாற்காலியின் நுனியில் இருந்தபடி கண்களை அகலத் திறந்தபடி சிரிப்பதும் முகம் சுருங்குவதுமாக  நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் மூடர் தலைவன்.



கக்கா கூட போகாமல் சுழல் நாற்காலியில் இருந்த மூடர்  தலைவர் தனது கைக்கடிகாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.பட்டென தன் நாற்காலியில் ஏறி நின்ற அவர் தன் சாப்பாட்டு தட்டை எடுத்து  அருகிலிருந்த  தொலைக்காட்சிப்பேழையின் திரையில் உற்சாக மிகுதியில் தட்டினார்.



தொலைக்காட்சி பேழை இருண்டதும் சுழல் நாற்காலியிலிருந்து மூடர் தலைவன் முகங்குப்புற வீழ்ந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன. அப்போது மணி மாலை 05:01.




அடுத்த தெருவிலுள்ள  தனது அலுவல் இல்லத்திலிருந்த பூஜையறையில்  மூடர் கூட்டத்தின் படைத்தளபதியான தயிர் வடையான் மிகத்தீவிரமாக கும்பிட்டுக் கொண்டிருந்தான். பூஜை பீடத்தில் கண் பரிசோதனை அட்டை போலிருந்த தகட்டில் கொட்டை எழுத்தில் மூன்று மூன்று ஆங்கில எழுத்துக்கள் வரையப்பட்டிருந்தன.



மூடர் தலைவர், தரையை துளாவிய  செய்தி தயிர்வடையானுக்கு இன்னும் எட்டவில்லை. செய்தி எட்டினாலும் கவலையில்லை. அழுவதற்கும் சிரிப்பதற்கும் என இரண்டு காரணங்கள் எப்போதும்  அவரது கதர் குர்த்தாவின் இரு பைகளிலும் தனித்தனியாக இருக்கின்றன.


No comments:

Post a Comment