Thursday 19 March 2020

எல்லாமே சிட்டிதான்


" டாலிகஞ்ச் வாய்க்காலை தாண்டிப்போகணும். கொஞ்ச காலத்துக்கு முன்னால்கூட அந்த இடமெல்லாம் கிராமமாகத்தான் இருந்தது..


இப்போ அங்கே போனபோது சொல்றாங்க, அதுவும் கல்கத்தாவாம்! ஹா ஹா ஹா



இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் பாருங்க: நீங்க எந்தப்பக்கம் போனாலும் எவ்வளவு தூரம் போனாலும் கல்கத்தாவாகத்தான் இருக்கும். கல்கத்தாவுக்கு முடிவே இருக்காது!


கல்கத்தா தாவிக்குதிச்சு ஓடறது. வழியிலே இருக்கற இடத்துக்கெல்லாம் 'கல்கத்தா', 'கல்கத்தா' ன்னு  முத்திரை வச்சுடரது. ஹா! ஹா!


இப்படி பரவிக்கிட்டே போய் ஒருநாள் உலகம் பூராவுமே கல்கத்தாவா ஆயிடும்.


அப்புறம் பாருங்க, கல்கத்தாவுக்கு வெளியே போகணும்னாலும் போக முடியாது. ரொம்ப விசித்திரமா இருக்கும்.


மலைக்கு போவீங்க, அதுவும் கல்கத்தாதான். சமுத்திரத்துக்கு போவீங்க, அதுவும் கல்கத்தாதான்.



அப்போ எல்லாரும் கல்கத்தாவிலெயே பிறந்து கல்கத்தாவிலேயே சாக வேண்டியதுதான்! ஹா! ஹா! ஹா!



---- நாவல் : 'கறையான்' -- சீர்ஷேந்து முகோபாத்யாய

விலை ரூ 170/=

 தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி


 வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்


தொடர்பெண்: 044 28252663 ,  9629626222




No comments:

Post a Comment