Monday 2 March 2020

மலையாளத்திரைப்படம் குஞ்சு தெய்வம்- பொருளவிழ்ந்து போகும் பிரம்மாண்டங்கள்






ஜியோ பேபி எழுதி இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம்.


கல்விக்கூடங்கள் தேவாலயங்கள் போதகர்கள் மதங்கள் மனிதர்களின் கல் மனச்சிறை ஆகியவற்றிலிருந்து தெய்வத்தையும் மானுடத்தையும் தன் தளிர் மனதாலும் தீரா நம்பிக்கையாலும் அன்பாலும் விடுவித்து அகன்ற பரப்பிற்கு அழைத்துச்செல்லும் சிறுவனின் கதை.



இரு சிறுநீரகங்களும் செயலிழந்த ஒரு சிறுமி தன் விருப்பங்களாக,  நிறைய வாசிக்க வேண்டும் இறந்து போன தன் தந்தையைப்போல ஏராளமாக பயணிக்க வேண்டும, எல்லாவற்றிற்கும் மேலாக நான் மரிக்காதிருக்க வேண்டும் என்கின்றாள்.


“மெழுகின் திரியைப்போல நான் கரைந்து முடியும் வரை என்னைத் தாங்கிக் கொள்” என பின்னணியிலிருந்து கொழுகொம்பற்று தவித்தலையும் ஆன்ம தாகமாய் எழுகின்றது பாடல்.


“ கடைசிவரைக்கும் ஒரு நிழலைப்போல ஒவ்வொரு நாளும் நீ என்னுடன் இருப்பாயா?”
என்ற முடிவற்ற வினாக்கள் பாடல் வரிகளினூடாக நம் புலன்களை மீண்டும் மீண்டும் ஒரு கலைத்துக் கொண்டே செல்கின்றது.


சிறு துளி அன்பின் பெருக்கில் எல்லா பிரம்மாண்டங்களும் பொருளவிழ்ந்து போகின்றன 















No comments:

Post a Comment