Saturday, 31 May 2025

ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 5

 பேருவளை மருதானைக்கரையிலிருந்து  இந்தியப்பெருங்கடலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில்  உள்ள குட்டித் தீவு.

காண்பதற்கு  தென்னந்தீவாக காட்சியளிக்கும் பேருவளைத் தீவு. காலனியாதிக்கவாதிகளால் பர்பரின் தீவு என்றும் வரலாற்றின் ஏடுகளில்  வெல்மடுவா,காக்கைத்தீவு,என்றும் அழைக்கப்படும் நிலத்திட்டு. உள்ளூர்க்காரர்கள் கலங்கரை விளக்கம். எனும் பெயரைக் கொண்டே  இத்தீவை அழைக்கிறார்கள்.

Tuesday, 20 May 2025

பத்ம சிறீ முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான்

முப்பது வருடங்களாகப் பழக்கம். அன்னாருக்கு எண்பத்தேழு வயதாகிறது.பலரின் உடல் நடை பாவனை எல்லாவற்றையும் வயது துணியை சுருட்டுவது போல தன் கரங்களுக்குள் சுருட்டிக் கொள்ளும்.

Friday, 9 May 2025

ரிஹ்லா துளுநாடு -- மொழிகளின் நிலம் 3

கேரள மாநிலம் கொண்டோட்டியிலுள்ள மாப்பிளா கலா அகாடமியின் மொக்ரால் கிளையின் சார்பாக மொக்ரால் பள்ளிக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்வுகளும் பொது நிகழ்வுகளும் நிறைந்த நாள் என்ற போதிலும் தொலைவிலிருந்து வரும் எங்களுக்காக துரித ஏற்பாடொன்றைச் செய்திருந்தனர்.

ரிஹ்லா துளுநாடு --- மங்களூரு ஜீனத் பக்ஸ் பள்ளிவாயில் ஒளிப்படங்கள்

 


Thursday, 8 May 2025

ரிஹ்லா துளுநாடு -- மொழிகளின் நிலம் 2

எங்கள் குழுவிலுள்ள வரலாற்றுப் பேராசிரியர் ஹஸனால் இரண்டாம் நாள்தான் வந்திணைய முடிந்தது. அவர் வந்து சேர்ந்து அணியமாகிய பிறகு தங்கியிருந்த விடுதியின் கணக்கை தீர்த்து விட்டு மங்களுருவிலுள்ள உள்ள கர்நாடக பியாரி சாஹித்ய அகாதமி அலுவலகத்திற்குச் சென்றோம்.

ரிஹ்லா துளுநாடு -- மொழிகளின் நிலம் 1

மலபாரின் வடக்கெல்லை துளுநாடு எனக் கேள்விப்பட்டிருந்ததினால் கொஞ்ச வருடங்களாகவே இப்பகுதிக்கு வரும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்தோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலை என இப்பயணத்தில் போக விரும்பிய பகுதிகளைப்பற்றி முன்னர் நினைத்திருந்தோம்.திட்டமிடும்போது எல்லாம் அருகருகே வந்து ஒட்டி திரண்டு விட்டன.

திப்புசுல்தான் கண்காணிப்புக் கோபுரத்தின் சுடும் துளை


ரிஹ்லா துளுநாடு -- சுல்தான் பத்தேரி ஒளிப்படங்கள்