முதுகு ஒட்டிக் கொண்டு
வியர்த்து நெய்யாகி
டைல்ஸ் தரை
நழுவியது. சற்று நகர்ந்த
பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில்
சாளரக்கிராதியின்
நிழல் கோணவும்
தலையின் சூடு மெழுகாகி இளகியது. அதற்கு மேல் தொடர மனமில்லை. எழும்பி அமர்ந்து கொண்டான் நூகு.



