சாலையை மட்டுமே கவனிப்பதால் ஓட்டுதலையும் ஓர் ஊழ்கமாக மாற்றலாம்
என வாசித்திருக்கிறேன்.ஆனால் தூண்டில் போட்டு
மீன் பிடிப்பது அதனளவிலேயே முழு ஊழ்கம்தான் என் ஜென்னியலாளர்கள் அடித்துக்கூறுகின்றனர்.
சாலையை மட்டுமே கவனிப்பதால் ஓட்டுதலையும் ஓர் ஊழ்கமாக மாற்றலாம்
என வாசித்திருக்கிறேன்.ஆனால் தூண்டில் போட்டு
மீன் பிடிப்பது அதனளவிலேயே முழு ஊழ்கம்தான் என் ஜென்னியலாளர்கள் அடித்துக்கூறுகின்றனர்.
சீர்மைக்கு கிடைக்க வேண்டிய இரண்டு அரங்குகள் ஒற்றை அரங்காக சுருங்கிப்போனதின் விசனமிருந்தாலும் மல்லிகை மணக்கும் நிக்காஹ் வீட்டின் கிறுகிறுப்புக்காகவே சென்னை புத்தகக் காட்சிக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது.
நான்கு நாட்களுக்கு முன்பு முடிவு செய்து ரிஹ்லா சமூக ஊடகக்
கணக்கில் அறிவித்தோம். எந்த அழைப்புமில்லை. கேட்புமில்லை.
அரை நாள் ரிஹ்லாக்களுக்கென நேர்ந்து விடப்பட்ட
இருவர்(நானும் ஏர்வாடி காதர் மீறானும்) ‘ததும்பும் தமிழ்ப்பெருமிதம்’ (பொருநை அருங்காட்சியகத்தின்
இலச்சினைச் சொல்லது) நோக்கி 2025 டிசம்பர் 31 ஆம் நாள் கிளம்பினோம்.