1.
மாயமும் அற்புதமும் நிறைந்த ஒற்றைச் சொல்லின் கூர்மையை, கொடுக்க மட்டுமே தெரிந்த விளிம்பு நிலை வாழ்க்கையின் அற்புதங்களை, தனது சிறுகதைகளில் நேர்த்தியாய் ஒழுங்கு செய்து இலக்கிய உலகில் இன்னுமொரு அடையாளத்தை தனதாக்கிக் கொள்கிறார் எழுத்தாளர் சாளை பஷீர்.
வரிகளில் படர்ந்திருக்கும் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்குமான இரத்த உறவுகளின் உணர்வுநிலை நிகரற்ற வாசனையாகவும்,
ஏழு கதைகளும் ஒப்பற்ற பொக்கிசமாகவும் நம் கைகளில் ஜாலமிடும் என்பது திண்ணம்.
சீர்மை வெளியீடாக வரும் தோழர் Salai basheer அவர்களின் "பித்தளைத் துட்டு ". சிறுகதைத் தொகுதியின் அட்டைப்படத்தை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றேன்.
![]() |
| -- கவிஞர் ரியாஸா எம் சவாஹிர்,இலங்கை |
---------------------------------------------------------------------------------------------------------------
2.
ചെന്നൈ പുസ്തകമേള 2026 ൽ പുറത്തിറങ്ങുന്ന ഏറെ പ്രിയപ്പെട്ട സുഹൃത്ത് Salai Basheer കാക്കായുടെ തമിഴ് ചെറുകഥാ സമാഹാരം "പിത്തളൈത്തുട്ട് " ൻ്റെ കവർ. നവജാത കൃതിക്ക് ആശംസകൾ .....
--------------------------------------------------------------------------------------------------
3.
எமது நீண்டகால வானொலி நண்பர். தொடர்ந்து பயணிப்பவர். உலக வானொலிகளோடு உறவாடுபவர். ஆகாஷ்வாணியோடு நட்பு பாராட்டுபவர். அதிலும் கேரள அகில இந்திய வானொலிகள் மீது காதல் கொண்ட அன்புள்ளம் சாளை பஷீர் அவர்களின் அடுத்த வெளியீடு "பித்தளைத் துட்டு" சிறுகதைத் தொகுப்பின் அட்டைப் படத்தினை இங்கு வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
படைப்பாளியின் அறவீழ்ச்சி என்பது சாதாரண விடயம் இல்லை, ஒரு சொல்லின் தீட்சண்யம் எவ்வளவு வலிமையானது தெரியுமா?, மாயாஜாலம், விளிம்புநிலை மாந்தர்களின் விசித்திர வாழ்வினை அனைவரும் இந்தக் கோணத்தில் பார்த்துவிடமுடியாது, பிரதிபலன் பாராது வழங்கும் பண்புள்ள நபர்களை எப்படித்தான் இவர் அடையாளம் கண்டாரோ?,
ஈழ-தமிழக உறவுகளுக்கிடையிலான உணர்ச்சிக் கொந்தளிப்புகள் தான் எத்தனையெத்தனை! மற்றும் அதிகார அமைப்புகளைக் கிண்டல் செய்யும் மனிதன் உண்மையில் நம் கண் எதிரே தான் உள்ளான். இத்தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் வெவ்வேறு கருப்பொருள்களைக் கையாண்டுள்ளன. மறவாமல் வாங்கிப் படியுங்கள்.
![]() |
| பேராசிரியரும் வானொலி மனிதனுமான தங்க ஜெய் சக்தி வேல் |
4.
பித்தளைத் துட்டு -- இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்குமான தொப்புள் கொடி உறவின் நீட்சி,இலக்கியக்காரனின் நாணயமின்மை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வின் அவலம்,வாழ்க்கைத் தோப்பின் மாயமும்,அற்புதமும் நையாண்டியும், வசீகரிக்கும் கனவுகளும் பொதிந்த பேசு பொருள்களின் ஏழு கதைகளை கதாபாத்திரங்களாக நம் முன்னே பருகத் தருகின்றார் சாளை பசீர்.
தொன்மங்களின் வசீகரிக்கும் வாசனை திரவியங்களைத் தேடி பூமியெங்கும் சுற்றித் திரியும் பஷீர் காக்காவின் மற்றுமொரு படைப்பு.
வாழ்த்துக்கள் காக்கா!
![]() |
எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத் இலங்கை |
----------------------------------------------------------------------------------------------
5.
எழுத்தாளரின் நாணயமின்மை,ஒற்றைச்சொல்லின் கூர்,மாயம் அற்புதத்துடன் விளிம்பு நிலை வாழ்க்கையும் கூடிய மனிதன், கொடுக்க மட்டுமே தெரிந்த மனிதன், இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்குமான இரத்த உறவுகளின் உணர்வு நிலை, நிறுவனத்தைப் பகடி செய்யும் மனிதன் ---- நூலிலுள்ள ஏழு கதைகளின் பேசுபொருள்கள்.
சாளை பஷீர் அவர்களுக்கு வாழ்த்துகள்!
![]() |
| கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான குட்டி ரேவதி |
------------------------------------------------------------------------------------------------
6.
சென்னைப் புத்தகக் காட்சியை முன்னிட்டு சீர்மை வெளியீடாக நண்பர் சாளை பஷீரின் சிறுகதை நூல் வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆழமான பார்வைகளோடு பயணக் கட்டுரைகளை அந்தந்த நிலங்களின் வரலாற்றுப் பின்புலத்திருந்து எழுதியவர். 'என் வானம் என் சிறகு' 'தோந்நிய யாத்ரா' இரண்டு நூல்களும் அதற்குச் சான்று.
ஒரு கதை சொல்லியாக 'கசபத்' நூலின் மூலம் தன்னை முன் நிறுத்தியவர் இன்று சிறுகதை ஆசிரியராகிறார். ஓரு எழுத்தாளன் பேரானந்தம் கொள்ளும் வாழ்க்கைத் தருணம் இது.
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைக் கோலம் முதல் முஸ்லிம் வாழ்வியலின் தடயங்கள் வரை பயணிக்கிறது இந் நூல்.
அவரது கதைமாந்தர்கள் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிய வைக்கும்,கேள்விகள் கேட்கும்,ஹாஸ்யம் மிகுந்த உரையாடலை நிகழ்த்தும் எளிய மனிதர்கள்.அதேநேரம் கூரிய பார்வைகளை உருவாக்கக் கூடியவர்களும் கூட.
இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்குமான இரத்த உறவுகளின் நிழல் இந்த நூலில் மணப்பது இன்னொரு சிறப்பம்சம்.
பஷீரின் வாரிசாய் மிளிர வாழ்த்துக்கள் நண்பரே...
![]() |
| எழுத்தாளரும் கலைச் செயற்பாட்டாளருமான இன்ஸாஃப் ஸலாஹுத்தீன் |

.jpg)




No comments:
Post a Comment