Thursday, 19 June 2025

மீனாட்சிபுரம் --- ஆளற்ற கிராமம் (மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர் பயணம்)

நன்கு திட்டமிடப்பட்ட ,கட்டணமுள்ள ரிஹ்லா பயணங்களுக்கப்பால் பெரிதாக திட்டமிடப்படாத கட்டணமற்ற அல்லது  மிகச்சிறு செலவுள்ள வட்டார, மின்னல்,குறு ரிஹ்லாக்களை நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.

அந்த வரிசையில் இது இரண்டாவது மின்னல் ரிஹ்லா. ஏற்கனவே நடந்த மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல். காண்க:

ரிஹ்லா வேணுவனத்தில் ஒரு பகல்

17/06/2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகலில் தொடங்கி அன்றைய மாலையில் நிறைவுற்றது மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2  ஆளற்ற ஊர் பயணம்.


மீனாட்சிபுரம் --- ஆளற்ற கிராமம் (மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர் பயணம்) --ஒளிப்படங்கள்

Friday, 6 June 2025

கனவுக்குள் செல்லுதல்

 அரஃபா நோன்பை பிடித்த என் பெயர்த்தி காலையில் கண் விழித்து என்னிடம் வந்தாள். தான் ஓர் அழகான கனவை கண்டதாகக் கூறி விவரிக்கத் தொடங்கினாள்.

Sunday, 1 June 2025

உருளோஸ் மிஞ்சினால்.....

 நின்று போன கைக்கடிகையை செப்பனிட்டு வாங்கிய போது நானூற்றிருபது ரூபாய்கள் செலவு. தலையாய உதிரி உறுப்பான மூவ்மெண்ட் பழுதாகி விட்டது. மூவ்மெண்ட்தான் கைக்கடிகையின் இதயம். போலியைத் தவிர்த்து தரமான இதயத்தையே போட்டுள்ளேன் என கைக்கடிகையை  என்னிடம்  நீட்டினார் வினைஞர். வாங்கிப்பார்க்கும்போது பன்னிரண்டாம் இலக்கத்தின் வலது பக்கமுள்ள சில நொடிக் கோடுகள் இறந்த காலத்திற்குள் கரைந்து விட்டிருந்தன.