சென்னை புத்தகக்காட்சி2025
ஐ முடித்து விட்டு ஊருக்கு வண்டியேறுவதற்காக உறவினர் இடத்தில் காத்திருந்தேன். அங்கு
என்னை உபசரித்து உரையாடிக்கொண்டிருந்த விசைப்பொறிஞர், தன்னுடைய குடும்ப துயரங்களைப்பற்றி
விவரித்து விட்டு நிறைவில் கண்ணீர் முட்டியவாறு இவ்வாறு சொன்னார்: “இறைவன் உன்னை நேசிக்கிறான்.
உன்னோடு நெருக்கமாக இருக்கிறான். அதனால்தான் உனக்கு இவ்வளவு சோதனைகள் என எனது துயரங்களுக்கு ஆறுதல் சொல்பவர்கள் என்னைத்தேற்றுகிறார்கள்.
இறைவன் நெருக்கமாக இருந்தால் மகிழ்ச்சியை அல்லவா நான் உணர வேண்டும்? ஆனால் மாற்றமாக
அல்லவா நடக்கிறது?. எனவே இறைவன் சற்று தொலைவிலிருந்தால் நல்லதோ என எனக்குத் தோன்றுகிறது”.
அவருக்கு
சொல்லப்படும் ஆழ்ந்த ஆறுதல் எதுவும் அவரை இன்னும் கீழே தள்ளிடுமோ என்ற அச்சமிருந்ததால்
எளிய ஆறுதலை மட்டும் கைமாறி விட்டு ஜார்ஜ் ஜோசப்பின் பெரு நெஞ்சன் சிறுகதை தொகுப்போடு
ஊருக்கு வண்டியேறினேன்.